Tuesday, 25 August 2020

வாரியாரும் திமுகவும்

அதென்ன நெய்வேலி சம்பவம் கிருபானந்த வாரியாருக்கு என்ன நடந்தது என சிலர் கேட்பதால் சொல்கின்றோம்

1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் "நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது" என பொதுவாக சொன்னார்

நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் "கீலாசேபம்" என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்

 ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.

அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது, அது தீவிரமாகவும் நடந்தது , வாரியாரின் தாக்குதல் முன் பேரறிஞன் பதுங்கினார்

அதே நேரம் மணியம்மையுடன் ராம்சாமி இரண்டாம் திருமணம் , ராம்சாமியுடன் மனகசப்பு என காட்சிகள் வந்ததால் டிராக் மாற்றினார் அண்ணா

வாரியார் சுவாமிகள் தன் இயல்பில் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார், அவ்வப்போது திமுக வாரியார் மோதல் நடந்து கொண்டே இருந்தது

வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்காமல் தன் அடிபொடிகள் மூலம் எழுதி தாக்கி கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில்  வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.

1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் , அப்பொழுது வாரியார் சுவாமிகள் நெய்வேலி பக்கம்  ஆன்மீக கூட்டங்களில் பேசினார் அப்பொழுது "கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது, மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது" என்றுதான் பொதுவாக சொன்னார்

ஆனால் அவர் அண்ணாதுரையினை சொல்லிவிட்டார் என திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர், மக்கள் கூட்டம் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டது, காயமின்றி வாரியார் தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌

ஆம், அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள் விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் , ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது. 

அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல‌

வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு

விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தது, வாரியாருக்கு இருந்த மிகபெரும் நற்பெயரை தமிழகம் கண்டது, மக்கள் அபிமான கிருபானந்தர் திமுகவினரால் தாக்கபட்டது மிகபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திற்று

ராஜாஜி மனம் வருந்தி எழுதினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்

முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்

ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.

நிலமை எல்லை மீறி சென்றதை அவதானித்த கருணாநிதி அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த ராம்சந்தரை சரியாக பழிவாங்கினார்

ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்

ஆனால் அதுதான் அவரின் வாழ்வில் மிகபெரும் தவறு, கடைசிவரை அவர் தலையில் அடித்து அடித்து அழுத தவறு, 

தெய்வத்தின் தண்டனை அப்படி சரியாக இருந்தது.

வாரியாரை நேரில் சந்தித்து உண்மையினை விளக்கினார் ராமசந்திரன், வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ தலைவர் அவர்தான், அப்பொழுதுதான் அவரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார்

அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் ராமசந்தர், அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது

வாரியாரால் ராமசந்திரன் ஆசீர்வதிக்கபடும் காட்சியே ராம்சந்திரனுக்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது

"பொன்மன செம்மல்" என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே ராமசந்திரனுக்கு அடையாளமாகி, மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது

சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு ராமசந்திரன் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது, அத்தோடு போலி நாத்திக அடையாளம் இங்கு ஒழிய ஆரம்பித்தது

அதன் பின்பே ஜெயா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார், இன்று பழனிச்சாமி அனுதினமும் தான் ஒரு இந்து என்பதை பகிரங்கமாக சொல்கின்றார்

வாரியாருடன் மோதியதில்தான் திமுகவின் அழிவு தொடங்கிற்று, முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்

ஆம் வாரியார் மேலான தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை, முருகபெருமானின் அடி அப்படி இருந்தது

வரலாற்றின் மிக பெரிய சான்று இது, ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் கோவில் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட பெரும் வரலாறு அது

அந்த தோல்விதான் கந்த சஷ்டி கவசம் வரை திமுகவின் முதுகில் சாத்தி கொண்டிருக்கின்றது, இன்னும் சாத்தும்

இப்பொழுது முருகனுடன் பிள்ளையாரும் சேர்ந்து திமுகவினை சாத்த தொடங்கியிருக்கின்றார்

(இன்றுவரை வாரியார் தாக்கபட்டதற்கு திமுக தரப்பில் விளக்கமுமில்லை, மன்னிப்பு கோரவுமில்லை  என்பதை ஒவ்வொரு இந்துவும் குறித்து கொண்டால் நல்லது)

Friday, 21 August 2020

விநாயக சதுர்த்தி

👆🏽 *விநாயகர்🐁🐘 சதுர்த்தி!*

*ஆவணி மாதம்* வரும் *'வளர்பிறை சதுர்த்தி'* திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம்.

விநாயக சதுர்த்தி வரலாறு:

*"பிடித்து வைத்தால் பிள்ளையார்"* என்ற சொல்வழக்குப் பிரபலமானது.

*விக்கிரகம், யந்திரங்கள்* பிம்பங்களில் மட்டுமல்லாது *மஞ்சள் கூம்பு*, *சாணி உருண்டை*, *களிமண் பிம்பம்* என எந்த வடிவில் வேண்டுமானாலும் விநாயகரை வழிபடலாம்.

பிரத்யேகமான ஆவாஹன மந்திரங்கள் இருந்தாலும், ஒரு மஞ்சள் உருண்டையைக் கூம்பாகப் பிடித்து, *"இது பிள்ளையார்"* என்றால் அங்கே உடனே ஆவாஹனமாகி விடுகிறார்.

எந்த எளிய பூஜையையும் நிவேதனத்தையும் மனமார ஏற்று அருள் செய்பவர். கோவிலிலும் கொலுவிருப்பார். ஆற்றங்கரை அரசமரத்தடியிலும் அருள்புரிவார்.

தனக்கு மேல் நாயகன் இல்லாததால் *"விநாயகர்"* என்று பெயர் பெற்ற ஸ்ரீ மஹாகணபதியின் பெருமை பேசும் *"காணபத்யம்"* பற்றிய சில விவரங்களை நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்ரீ மஹாகணபதியை நிர்க்குண நிராகார பரப்பிரம்மமாகக் கருதும் காணபத்யம், அவரே *முழுமுதற்கடவுள்* என்று உபதேசிக்கிறது.

உலகத்தின் தோற்றமும், நிலைபெறுதலும் விநாயகராலேயே நிகழ்கிறது. முடிவில் பிரளய காலத்தில் *ஒடுங்குதலும் (Moolaam = Uyir occupancy = Moolaathaaram)* விநாயகரிடமே.

மும்மூர்த்திகளுக்கும் மேலான நாயகராய் விநாயகரே இருந்து இவ்வுலக இயக்கத்தைச் செயல்படுத்துகிறார்.

காணபத்யம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபலமாக இருக்கிறது. காணபத்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் 'காணபதர்கள்" என அழைக்கப்படுகிறார்கள்.

*தமிழ்நாட்டில்* பிரம்மச்சாரியாக வணங்கப்படும் விநாயகர் *வடநாட்டில்*, சித்தி, புத்தி எனும் இரு மனைவியரோடு கூடியவராக வழிபடப்படுகிறார்

*பெயர்கள் :*

பிள்ளையார்,
 விக்னேசுவரர்,
கணேசர்,
 கணபதி,
கணாதிபர்,
 ஐங்கரன்,
ஏரம்பன்,
 இலம்போதரர்,
குகாக்கிரசர்,
 கந்தபூர்வசர்,
மூத்தோன்,
 ஒற்றைமருப்பினன்,
மூஷிகவாகனன்,
 வேழமுகன்,
கயமுகன்,
 ஓங்காரன்,
பிரணவன்

போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.

இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.

பரமசிவன் கணேசனை *கணங்களின் தலைவனாக* ‘கணபதி'யாக நியமித்தார்.

*அனிமா, மகிமா*
முதலிய *அஷ்டசித்திகளையும்* மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். 

கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

*விமேலான:* நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும்.

அதுபோலவே *'விக்னேஸ்வரர்'* என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், *'ஐங்கரன்'* என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும்.

*'கணபதி'* என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

ஒவ்வொரு யுகத்திலும் விநாயகரின் தோற்றம் பற்றி ஒவ்வொரு விதமாகக் கூறப்படுகிறது. 

பார்க்கவ புராணமாகிய‌ விநாயக‌ புராணத்தின் படி, வக்ரதுண்ட விநாயகர், பிரளயம் முடிந்ததும் *மும்மூர்த்திகளையும்* படைத்து, முத்தொழில்களையும் செய்யுமாறு ஆணையிட்டு மறைந்தருளுகிறார். பின் உலக நன்மைக்காக, மீண்டும் தோற்றமாகிறார்.

பார்வதிதேவி நீராடும் போது, மஞ்சள் பொடியைப் பிசைந்து ஒரு உருவம் செய்து ,அதற்கு உயிரூட்ட, விநாயகர் தோற்றமானார் என்பதே பொதுவாக விநாயகரின் தோற்றம் குறித்து வழங்கப் பெறும் புராணக் கதை.

கயிலாய மலையில், மந்திர ரூபமான ஒரு மணிமண்டபத்தில், மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த *"சமஷ்டிப் பிரணவம்",* *"வியஷ்டிப் பிரணவம்"* என்ற இரு பிரணவங்களை இறைவனும் இறைவியும் கருணையுடன் நோக்க, அவை ஒன்றிணைந்து பிரணவ ஸ்வரூபமான விநாயகர் தோற்றமானார் என்கிறது ஸ்ரீ விநாயக புராணம்.

*வேதாந்தகன், நராந்தகன்* என்னும் இரு அசுரர்களின் பிடியிலிருந்து உலகத்தைக் காக்க, தேவர்களின் தாயான அதிதி, தன் கணவர் காஷ்யப மஹரிஷியின் ஆணைப்படி, விநாயகரை குழந்தையாகப் பெற வேண்டித் தவமிருந்தாள். விநாயகரும், *"மகோற்கடர்"* என்ற பெயரில் அதிதிக்குக் குழந்தையாக அவதரித்தார்.

*ஆஹா, ஊஹூ, தும்புரு* ஆகிய மூவரும் கயிலையில் சிவபெருமானை இசையால் மகிழ்விப்பவர்கள். மகோற்கடர் சிறு வயதாயிருக்கும் போது, அவர்கள் மூவரும் கயிலைக்குச் செல்லும் வழியில் காஷ்யப முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தனர். நீராடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த,விநாயகர்,சிவன், பார்வதி, விஷ்ணு, ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குப் பூஜை செய்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தனர். 

தியானம் முடிந்து பார்க்கும் போது, விக்கிரகங்களைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இறுதியில், மகோற்கடரைக் கேட்ட போது, அவர் புன்சிரிப்புடன், தன் வாயைத் திறந்து காண்பிக்க, அவர் வயிற்றுக்குள் ஈரேழு உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன பஞ்சமூர்த்திகளும்அவர் வயிற்றுக்குள் இருப்பதைப் பார்த்து அதிசயித்து, விநாயகரே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்தனர்.

விநாயகர் யானை முகத்தவர். ஒற்றைத் தந்தம், இரு பெரும் செவிகள், மூன்று கண்கள் *(விரூபாக்ஷர்)*, நான்கு புஜங்கள் கொண்ட ஐங்கரன் அவர்."கணேசாய நம:" என்ற ஆறு அக்ஷரங்களுக்கு உரியவர். விநாயகரின் ரூப பேதங்களில், வலம்புரி விநாயகரே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறார்.

1. ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்்தினை

புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

- *திருமூலர் (திருமந்திரம்)*

2. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

- *ஒளவையார்*

3. திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்

பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.

- *கபிலர் (இரட்டை மணி மாலை)*

4. அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல

குணமதிக மாம்கருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

- *விவேக சிந்தாமணி (கடவுள் வணக்கம்)*

5. அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

6. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று *ஒளவையார்*

பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம்.

*விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்* 👇🏼

Sunday, 16 August 2020

கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்

*கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்*
—————————————-
அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர். சென்னையில் உள்ளவர்களின் நீராதாரம் இம்மலையிலிருந்தே கிடைக்கிறது.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, தெற்கிலிருந்துதுவங்கி, கொல்லிமலை, பச்சைமலை,சேர்வராயன்மலை, கல்வராயன்மலையிலிருந்து ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது.
கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்குத் தொடர்ச்சிமலையைப்போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுதுண்டாக காணப்படுகிறது.
இதன் முக்கிய காரணம், வங்கக் கடலில் கலக்கும் கிழக்குநோக்கிப் பாயும் நதிகளான மகாநதி, துங்கபத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் நிலஅரிப்புதான். ஆனாலும் இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொன்று இணைந்தே உள்ளன.
கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இம்மலைத்தொடரின் நிலவியல் பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் புதிரான வரலாறுகளைக் கொண்டது.
கருங்கல் பாறைகள், படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளது. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்கள் இதில் கிடைக்கின்றன.
புவியமைப்பின் மேற்பகுதியில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியில் பண்டையகால பாறைக் குழுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இங்குள்ளபாறைகள் பிரதிபலிக்கின்றன. இப்பாறைகளுக்கிடையே உள்ளஅழுத்தங்களும் வெடிப்புகளும் அவற்றுக்கு சான்றாக உள்ளன.
கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்திருக்கும். இங்குள்ள வறண்ட வனப்பகுதிகளில் காப்பித் தோட்டங்கள் பயிரிடப்படுகின்றன.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம் ஆந்திராவில் உள்ள ஜிந்தகடா மலையாகும். இதன் உயரம் 1690மீட்டர். உயரம் குறைவான பல குன்றுகளும் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் குறிப்பிடத் தகுந்தவை.
நீலகிரி பகுதியில் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் புவியியல் ரீதியாக ஒன்றை ஒன்று நெருங்குகிறது.
தெற்கே, நெல்லைச்சீமையில் துவங்கும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் சேலம் வட்டாரத்தில் சேர்வராயன் மலையிலிருந்து புவியியல் முக்கியத்துவம் பெறுகிறது. சேர்வராயன் மலையில்தான் ஏற்காடு அமைந்துள்ளது. சேர்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென்பெண்ணை – பாலாறு நதிகளுக்கு இடையேயுள்ள சவ்வாதுமலை சுமார் 1160மீட்டர் உயரம் கொண்டது. 80 கி.மீ.நீளம் 32 கி.மீ. அகலத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வரை சவ்வாது மலை பரவியுள்ளது. ஏலகிரி இம்மலையின் ஒரு பகுதி.
சவ்வாதுமலை கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது. வடகிழக்குப் பருவமழையின் மூலமாக பெருமளவு மழைப்பொழிவு கிடைக்கிறது.
செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்டநதி போன்ற நதிகள் சவ்வாது மலையில் உற்பத்தியாகின்றன. பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி இங்கு அமைந்துள்ளன.
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. இது கள்வர் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
கர்நாடகா மாநிலம் தென்பகுதியில் கொல்லேகாலில் அமைந்திருக்கிறது மாதேஸ்வரன் மலை. கடல் மட்டத்திலிருந்து 3000அடி உயரத்தில் அமைந்துள்ள, தமிழக எல்லையான சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பன் சாம்ராஜ்ஜியம் நடந்தது. மைசூரில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இம்மலையில் மாதேஸ்வரன் கோயில் உள்ள
து.
ஆந்திராவின் தென்கிழக்குப்பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே வெளிகொண்டா மலை உள்ளது. திருமலை-திருப்பதி கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுரமைல்கள் பரப்பளவில் ஏழுமலைக்குன்றுகளாக சூழ்ந்து பரவியுள்ளது. சேசாலம் –வெளிகொண்டா மலைத்தொடரில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்தரி மற்றும் வெங்கடாத்திரி என இந்த ஏழு குன்றுகள் அழைக்கப்படுகின்றன. ஏழாவது குன்றான வெங்கடாத்திரியில் திருவேங்கடத்தான் திருக்கோயில் அமைந்துள்ளது.
சித்தூரில் உள்ள திருப்பதி சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் தொன்மையான பாறைக்கூட்ட இடைவெளிகள் காணப்படுகிறது. கிழக்குத்தொடச்சி மலைகளில் உயரமான மலையான ஆனந்தகிரி இத்தொடரைச் சார்ந்தவையே.
“வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” என்று தொல்காப்பியமும், “குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்று நன்னூலும் தமிழகத்தின் வட எல்லையாக இந்த திருமலையினைக் குறிப்பிடுகிறது.
மாநில எல்லைகள் சீரமைப்பில் தமிழகம் திருப்பதி மட்டுமல்லாமல் சித்தூர், காளகத்தி ஆகிய பகுதிகளை ஆந்திரத்தில் இழந்துள்ளது. ம.பொ.சியின் தியாகத்தால் ஆந்திரத்திற்குச் செல்ல இருந்த திருத்தணியை மட்டும் மீட்டுள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ள கொல்லேகால் மலைப்பகுதியினையும் கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
கிருஷ்ணா மற்றும் பென்னாறு நதிகளுக்கிடையே கோரமண்டல கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தூரம் சீராக அமையப்பெற்றுள்ளது நல்லமல்லா மலை. ஆந்திரத்தில் உள்ள நல்லமல்லா மலை கர்நூல், மகபூப்நகர், குண்டூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. இம்மலைக்கு வடக்கு எல்லை தட்டையான பல்நாடு வடிநிலமும், தெற்கில் திருப்பதியும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலை கடல்மட்டத்திலிருந்து சுமார் 520மீ. உயரத்தில் கொண்டது.
குண்டூர், கிருஷ்ணா, மேற்குகோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் கொண்டாபள்ளி மலை அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக உள்ளது. கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பாப்பிமலை பரவியுள்ளது. இது சுற்றுலாவாசிகளை கவரும் இடமாகும்.
பாப்பி மலையின் தொடர்ச்சியாக விசாகப்பட்டினத்திற்கு வடபகுதியில் மதுரவாடா முகடு அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் நகரகடற்கரை வரை இதன் தொடச்சி உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவிஓட்டுப் பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இந்தப் புவிஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளால் ஆனது.
அடுத்ததாக, மாலியா மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் உயரம் கொண்டது. மாலியாமலைத்தொடர் சில இடங்களில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது. மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் மதுகுலகொண்டா மலைத்தொடர் உயரமானது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா (1643மீ), சிங்கராம்குட்டா (1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன.
ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் தொடங்கி, ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியான கோராபுட்டில் அமைந்துள்ளது சந்திரகிரி பொட்டங்கி மலைத்தொகுதி. பூகோள, வரலாற்று ரீதியாக முக்கியமான மலையாக இது கருதப்படுகிறது. இங்குள்ள உயரமான மலைச்சிகரம் தியோமாலி(1672மீ) என்றழைக்கப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்றுபகுதியை இம்மலைத்தொடர் கொண்டுள்ளது. ஒடிசாவின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளை ஆறுகளும் இந்த நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. இங்குள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கமும் உள்ளது.
பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் மரச்சட்டம் போட்ட கருநிற சிலேட்டுகள் இம்மலை அடிவாரத்தில் உள்ள மண்ணில்தான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள மர்காப்பூரில் சிலேட்டு தயாரிப்பு பிரதான தொழில். சிவகாசி தீப்பெட்டித் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுந்த விமர்சனங்களைப்போல மர்காப்பூரிலும் சிலேட்டு தயாரிப்புத் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சனைகள் எழுந்தது. 1990ல் மத்திய அரசின் குழந்தைத்தொழிலாளர் தடுப்பு வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் அடியேன் இப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு இதுபற்றி அறிக்கைகளை வழங்கினேன்.
இம்மலைத்தொடர்ச்சியில்அமைந்துள்ள கார்சட் மலைப்பகுதிசெங்குத்தாக உயர்ந்தும் மேற்குநோக்கிச் செல்லச்செல்ல மயூர்பன்சிலிருந்து மல்கான்கிரி வரை தாழ்ந்தும் காணப்படுகிறது. கோதாவரிக்கு வடக்கில் கார்சட் மலைகளின் உயரம் அதிகமாகி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது.
கடல்மட்டத்திலிருந்து 900மீட்டர் உயரம் கொண்டுள்ள இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச்சமவெளிகளை இணைக்கும் மேட்டுப்பாங்கான விளைநிலங்கள் உள்ளன. கிழக்கு தொடர்ச
்சி மலைகள், பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளாலே தொடராக இல்லாமல் தடுக்கப்படுகிறது. வடகிழக்கில் நீண்டதூரம் நீட்சி பெற்றிருக்கும் இதன் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத்தொகுதி என்றழைப்படுகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரியமூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள்,
நறுமணப்பொருட்கள் ஆகியவை இங்குவாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது.
மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் காணப்படும் இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கைமுறைகளும், பழக்கவழக்கங்களும் தொன்மை வாய்ந்தவை.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பிலும், வனஅடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் சுமார் 8,200 ஏக்கர் நிலங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நத்தம் சாலையில் மலைவாழிடமான சிறுமலை அமைந்துள்ளது. இங்குதான் பலரும் விரும்பி உண்ணும் மலை வாழைப்பழம் விளைகிறது.
மேற்குத் தொடர்ச்சியைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும், இம்மலைத்தொடரின் வேர்கள் பூமியின் அடியாழத்தில் இணைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி தோணித்துறையில் அமைந்துள்ள மல்லாங்குளம்பாறை வரைக்கும் நீள்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் சர்.ராபர்ட் பிரிஸ்டோ துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும் பணியின்போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்க முடியவில்லை. இதனுடைய அதிர்வு அப்போது குற்றாலம் பாபநாசம் மலைகள் வரை எதிரொலித்ததாகச் செய்திகள்.
இந்தப் தொடர்பாறைகள் இராமேஸ்வரம் அருகேயுள்ள உத்திரகோசமங்கை வழியாக வங்கக்கடலின் உள்ளே பாய்ந்தோடி, இலங்கையில் உள்ள தலைமன்னார் காங்கேசத்துறை, இலங்கை மத்திய தோட்டப்பகுதி, நுவரேலியா வரை கிழக்குத்தொடர்ச்சி மலையின் அடித்திடிட்டு தொடர்புகளாக நீண்டுள்ளது என ஆய்வுகளும் செய்யப்படுகின்றன. பண்டைய மேருமலையின் எச்சமாக இந்தத்தொடர்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எப்படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கையின் அருட்கொடையோ, அப்படி வங்கத்திலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதியான சோட்டா நாக்பூர் பீடபூமி, தக்காண பீடபூமி, தமிழகம், இலங்கை வரை பரவியுள்ள இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துவரலாறு, புவியியல், அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு, இந்தமலைத்தொடரையும், இதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்:
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் இந்திய மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, தெற்கிலிருந்துதுவங்கி, கொல்லிமலை, பச்சைமலை,சேர்வராயன்மலை, கல்வராயன்மலையிலிருந்து ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது.
கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்குத் தொடர்ச்சிமலையைப்போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுதுண்டாக காணப்படுகிறது.
இதன் முக்கிய காரணம், வங்கக் கடலில் கலக்கும் கிழக்குநோக்கிப் பாயும் நதிகளான மகாநதி, துங்கபத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் நிலஅரிப்புதான். ஆனாலும் இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொன்று இணைந்தே உள்ளன.
கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இம்மலைத்தொடரின் நிலவியல் பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் புதிரான வரலாறுகளைக் கொண்டது.
கருங்கல் பாறைகள், படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளது. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்கள் இதில் கிடைக்கின்றன.
புவியமைப்பின் மேற்பகுதியில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியில் பண்டையகால பாறைக் குழுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இங்குள்ளபாறைகள் பிரதிபலிக்கின்றன. இப்பாறைகளுக்கிடையே உள்ளஅழுத்தங்களும் வெடிப்புகளும் அவற்றுக்கு சான்றாக உள்ளன.
கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்திருக்கும். இங்குள்ள வறண்ட வனப்பகுதிகளில் காப்பித் தோட்டங்கள் பயிரிடப்படுகின்றன.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம் ஆந்திராவில் உள்ள ஜிந்தகடா மலையாகும். இதன் உயரம் 1690மீட்டர். உயரம் குறைவான பல குன்றுகளும் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் குறிப்பிடத் தகுந்தவை.
நீலகிரி பகுதியில் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் புவியியல் ரீதியாக ஒன்றை ஒன்று நெருங்குகிறது.
தெற்கே, நெல்லைச்சீமையில் துவங்கும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் சேலம் வட்டாரத்தில் சேர்வராயன் மலையிலிருந்து புவியியல் முக்கியத்துவம் பெறுகிறது. சேர்வராயன் மலையில்தான் ஏற்காடு அமைந்துள்ளது. சேர்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென்பெண்ணை – பாலாறு நதிகளுக்கு இடையேயுள்ள சவ்வாதுமலை சுமார் 1160மீட்டர் உயரம் கொண்டது. 80 கி.மீ.நீளம் 32 கி.மீ. அகலத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வரை சவ்வாது மலை பரவியுள்ளது. ஏலகிரி இம்மலையின் ஒரு பகுதி.
சவ்வாதுமலை கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீ. உயரம் கொண்டது. வடகிழக்குப் பருவமழையின் மூலமாக பெருமளவு மழைப்பொழிவு கிடைக்கிறது.
செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்டநதி போன்ற நதிகள் சவ்வாது மலையில் உற்பத்தியாகின்றன. பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி இங்கு அமைந்துள்ளன.
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. இது கள்வர் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
கர்நாடகா மாநிலம் தென்பகுதியில் கொல்லேகாலில் அமைந்திருக்கிறது மாதேஸ்வரன் மலை. கடல் மட்டத்திலிருந்து 3000அடி உயரத்தில் அமைந்துள்ள, தமிழக எல்லையான சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பன் சாம்ராஜ்ஜியம் நடந்தது. மைசூரில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இம்மலையில் மாதேஸ்வரன் கோயில் உள்ளது.
ஆந்திராவின் தென்கிழக்குப்பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே வெளிகொண்டா மலை உள்ளது. திருமலை-திருப்பதி கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுரமைல்கள் பரப்பளவில் ஏழுமலைக்குன்றுகளாக சூழ்ந்து பரவியுள்ளது. சேசாலம் –வெளிகொண்டா மலைத்தொடரில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்தரி மற்றும் வெங்கடாத்திரி என இந்த ஏழு குன்றுகள் அழைக்கப்படுகின்றன. ஏழாவது குன்றான வெங்கடாத்திரியில் திருவேங்கடத்தான் திருக்கோயில் அமைந்துள்ளது.
சித்தூரில் உள்ள திருப்பதி சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் தொன்மையான பாறைக்கூட்ட இடைவெளிகள் காணப்படுகிறது. கிழக்குத்தொடச்சி மலைகளில் உயரமான மலையான ஆனந்தகிரி இத்தொடரைச் சார்ந்தவையே.
“வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” என்று தொல்காப்பியமும், “குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்று நன்னூலும் தமிழகத்தின் வட எல்லையாக இந்த திருமலையினைக் குறிப்பிடுகிறது.
மாநில எல்லைகள் சீரமைப்பில் தமிழகம் திருப்பதி மட்டுமல்லாமல் சித்தூர், காளகத்தி ஆகிய பகுதிகளை ஆந்திரத்தில் இழந்துள்ளது. ம.பொ.சியின் தியாகத்தால் ஆந்திரத்திற்குச் செல்ல இருந்த திருத்தணியை மட்டும் மீட்டுள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ள கொல்லேகால் மலைப்பகுதியினையும் கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
கிருஷ்ணா மற்றும் பென்னாறு நதிகளுக்கிடையே கோரமண்டல கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தூரம் சீராக அமையப்பெற்றுள்ளது நல்லமல்லா மலை. ஆந்திரத்தில் உள்ள நல்லமல்லா மலை கர்நூல், மகபூப்நகர், குண்டூர், பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. இம்மலைக்கு வடக்கு எல்லை தட்டையான பல்நாடு வடிநிலமும், தெற்கில் திருப்பதியும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலை கடல்மட்டத்திலிருந்து சுமார் 520மீ. உயரத்தில் கொண்டது.
குண்டூர், கிருஷ்ணா, மேற்குகோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் கொண்டாபள்ளி மலை அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக உள்ளது. கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பாப்பிமலை பரவியுள்ளது. இது சுற்றுலாவாசிகளை கவரும் இடமாகும்.
பாப்பி மலையின் தொடர்ச்சியாக விசாகப்பட்டினத்திற்கு வடபகுதியில் மதுரவாடா முகடு அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் நகரகடற்கரை வரை இதன் தொடச்சி உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவிஓட்டுப் பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இந்தப் புவிஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளால் ஆனது.
அடுத்ததாக, மாலியா மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் உயரம் கொண்டது. மாலியாமலைத்தொடர் சில இடங்களில் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது. மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் மதுகுலகொண்டா மலைத்தொடர் உயரமானது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா (1643மீ), சிங்கராம்குட்டா (1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன.
ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் தொடங்கி, ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியான கோராபுட்டில் அமைந்துள்ளது சந்திரகிரி பொட்டங்கி மலைத்தொகுதி. பூகோள, வரலாற்று ரீதியாக முக்கியமான மலையாக இது கருதப்படுகிறது. இங்குள்ள உயரமான மலைச்சிகரம் தியோமாலி(1672மீ) என்றழைக்கப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்றுபகுதியை இம்மலைத்தொடர் கொண்டுள்ளது. ஒடிசாவின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளை ஆறுகளும் இந்த நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. இங்குள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கமும் உள்ளது.
பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் மரச்சட்டம் போட்ட கருநிற சிலேட்டுகள் இம்மலை அடிவாரத்தில் உள்ள மண்ணில்தான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள மர்காப்பூரில் சிலேட்டு தயாரிப்பு பிரதான தொழில். சிவகாசி தீப்பெட்டித் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுந்த விமர்சனங்களைப்போல மர்காப்பூரிலும் சிலேட்டு தயாரிப்புத் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சனைகள் எழுந்தது. 1990ல் மத்திய அரசின் குழந்தைத்தொழிலாளர் தடுப்பு வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் அடியேன் இப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு இதுபற்றி அறிக்கைகளை வழங்கினேன்.
இம்மலைத்தொடர்ச்சியில்அமைந்துள்ள கார்சட் மலைப்பகுதிசெங்குத்தாக உயர்ந்தும் மேற்குநோக்கிச் செல்லச்செல்ல மயூர்பன்சிலிருந்து மல்கான்கிரி வரை தாழ்ந்தும் காணப்படுகிறது. கோதாவரிக்கு வடக்கில் கார்சட் மலைகளின் உயரம் அதிகமாகி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது.
கடல்மட்டத்திலிருந்து 900மீட்டர் உயரம் கொண்டுள்ள இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச்சமவெளிகளை இணைக்கும் மேட்டுப்பாங்கான விளைநிலங்கள் உள்ளன. கிழக்கு தொடர்ச
்சி மலைகள், பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளாலே தொடராக இல்லாமல் தடுக்கப்படுகிறது. வடகிழக்கில் நீண்டதூரம் நீட்சி பெற்றிருக்கும் இதன் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத்தொகுதி என்றழைப்படுகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரியமூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள்,
நறுமணப்பொருட்கள் ஆகியவை இங்குவாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது.
மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் காணப்படும் இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கைமுறைகளும், பழக்கவழக்கங்களும் தொன்மை வாய்ந்தவை.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பிலும், வனஅடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் சுமார் 8,200 ஏக்கர் நிலங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நத்தம் சாலையில் மலைவாழிடமான சிறுமலை அமைந்துள்ளது. இங்குதான் பலரும் விரும்பி உண்ணும் மலை வாழைப்பழம் விளைகிறது.
மேற்குத் தொடர்ச்சியைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும், இம்மலைத்தொடரின் வேர்கள் பூமியின் அடியாழத்தில் இணைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி தோணித்துறையில் அமைந்துள்ள மல்லாங்குளம்பாறை வரைக்கும் நீள்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் சர்.ராபர்ட் பிரிஸ்டோ துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும் பணியின்போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்க முடியவில்லை. இதனுடைய அதிர்வு அப்போது குற்றாலம் பாபநாசம் மலைகள் வரை எதிரொலித்ததாகச் செய்திகள்.
இந்தப் தொடர்பாறைகள் இராமேஸ்வரம் அருகேயுள்ள உத்திரகோசமங்கை வழியாக வங்கக்கடலின் உள்ளே பாய்ந்தோடி, இலங்கையில் உள்ள தலைமன்னார் காங்கேசத்துறை, இலங்கை மத்திய தோட்டப்பகுதி, நுவரேலியா வரை கிழக்குத்தொடர்ச்சி மலையின் அடித்திடிட்டு தொடர்புகளாக நீண்டுள்ளது என ஆய்வுகளும் செய்யப்படுகின்றன. பண்டைய மேருமலையின் எச்சமாக இந்தத்தொடர்புகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எப்படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கையின் அருட்கொடையோ, அப்படி வங்கத்திலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதியான சோட்டா நாக்பூர் பீடபூமி, தக்காண பீடபூமி, தமிழகம், இலங்கை வரை பரவியுள்ள இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துவரலாறு, புவியியல், அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு, இந்தமலைத்தொடரையும், இதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.  

K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
*ksrpost*
14-8-2020.

Friday, 14 August 2020

Wonderful success Story: Tribal >> IAS

Wonderful success Story: Tribal >> IAS 

Hi, I am Dr. Rajendra Bharud. I was born in Samode Village in Sakri Taluka. A Bhil tribal. My father had passed away before I was born and there was no man of the house, so to speak. We were steeped in poverty. There was no money even to take photographs and so till date I don't know how my father looked. No land, no property. We used to live in a hut made of sugarcane leaves. 
But Maay (mom) was made of sterner stuff and never sat brooding over our condition. She had two sons to take care of and so she started working towards that. 

She started making liquor from flowers and selling it. Men used to come to our hut and consume the liquor. She later told me that, as an infant, sometimes when I cried she used to give me a couple of drops of the same liquor so that I would sleep off. Cos it was business time and she didn't want to disturb the customers. As I grew up, I started running errands to get peanuts or such snacks for the customers. 

Maay was a determined woman and she ensured that both of us went to school. I used to go to the zilla parishad school and though I had no pens or books (no money to buy) I enjoyed studying. We were the first kids from our tribe/village to go to school and nobody gave education any importance. 

Once, during exams I was studying and a customer asked me to get him some peanuts and I bluntly refused. He laughed at me saying 'as if you are gonna be a doctor or engineer'. I was hurt. But Maay retorted telling him that I will. Maay's confidence gave me a certain will and determination to pursue studying and I decided to give it all I can. 

Later on I got admission for CBSE in another school, in Akkalkuva taluka, 150 kms away from our village and I had to move there for further studies. Maay had come to drop me and both of us cried a lot as she bid me goodbye when going back home. 

Being on my own was difficult but I realised that I should not waste this opportunity. That gave me more determination to make it good, made me study harder and that resulted in me getting 97% in 12th. I got admission in  Mumbai's G S Medical college on merit and received several scholarships. That took care of my education and hostel fees and Maay used to send me some money for my sundry expenses. She continued her liquor business as that was the only source of income for us.

As studies continued, I also decided to appear for UPSC exams and so in the final year of MBBS, I was studying for 2 exams even as my internship was on. As far as Maay was concerned, she knew I was studying to become a doctor. She had no idea about anything else. What is UPSC, or why one gives that exam, how it will help etc was all beyond her small world. I wanted to be a collector and she didn't know about even the local officials like a tehsildar.

Finally as the year ended, I had my MBBS degree in one hand and the results of having cracked the UPSC in the other hand. And as I came back home to our small village, quite a few important people had come to welcome me home. Political leaders, the district collector, local officials, all coming to congratulate me. Maay was non plussed and didn't understand what had happened. I told her that I had become a doctor. She was really happy. I also told her that I would not be practicing medicine as I had also become a Collector now. She didn't know what that was but realised that it was something big.  In fact none of the villagers realised what it meant. Though all of them were happy that 'our Raju' has become big and some even congratulated me for becoming a conductor!

I am now posted in Nandurbar district as a District Collector and Maay is now with me. There's a lot to do here as this is a fairly backward district with lots of adivasi and tribal population. And I look forward to building all the necessary infrastructure for their development. 

A lot many times I am asked as to how I reached here in spite of all the hurdles in my path. Right from childhood it was a struggle. Eating twice a day was a big deal. Our toys were mango seeds or sticks. Swimming in the river and climbing the hills was how we spent the childhood. That made me physically and mentally strong. Who was with me? My strength - my Maay. And the locals, who were all equally poor. They too went hungry like us, they too played the same games. So the concept of being poor never really touched me. 

Till I came to Mumbai for studies. The difference was stark. But I never envied the well off or cursed my luck. All I realised was that if my situation or condition had to change, I will have to do it myself. And I studied, excercised, studied. Yes, I missed a lot that normal kids or teenagers get in life, but I prefer to look at what I have got now. 
A Bhil tribal boy, Rajendra Bharud, an IAS officer at the age of 31, first from the tribe, my village, my area. Today I have everything that I could have dreamed of. 

And most importantly, after seeing me rise from the small village to this position has created an awareness among my people of what they can do or achieve. That itself is a huge reward.

>>>>> _Interviewed by Madhuri Pethkar_

மாவேள் அமைப்பு

வணக்கம், படித்து பகிர்ந்து மாற்றத்தை நிகழ்த்துவோம். 

                    சீமை கருவேல மரங்களை சீரமைக்கவும், அதற்கு மாற்றாக மஞ்சனத்தி காடுகள் உருவாக்க வேண்டும் என்றும் , இருக்கும் மரங்கள் பாதுகாக்கவும் அதன் காய்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கியுள்ளது #மாவேள் நிறுவனம்.

மஞ்சனத்கி எனும் நுணா காய்களை கொள்முதல் செய்யப்படும் என்று தகவல் வெளியானதும் பலரும் அழைத்து விவரம் கேட்கின்றார்கள். ஆனால் தற்போதைய சூழலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பவர்களால் மட்டுமே நேரடியாக கொண்டுவர முடிகிறது. அஞ்சல் மூலமாக அனுப்பினால் வந்து சேர்வதற்குள் வீணாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதனால் பிற மாவட்ட மக்கள் எவ்வாறு அனுப்புவது என்ற தகவல் கீழே கொடுக்கின்றோம்.

1. மரத்திலிருந்து முற்றிய காய்களை மட்டும் பறிக்கவும் 
2. நன்றாக தண்ணீரில் அலசவும் 
3. அலசிய தண்ணீர் காயும் வரை மட்டும் வெயில்படுமாறு காய வைக்கவும். 
4. நிழலான இடத்தில் சுத்தமான விரிப்பு ஏதேனும் விரித்து அதில் ஒன்றோடு ஒன்று மேலே இல்லாமல் தனித்தனியாக விரித்து காயப்போடவும். 
5. கருமை நிறத்தில் நன்றாக பழுத்துவிடும்
6. பழத்தினை ஒரு பாத்திரத்தில் வைத்து கரண்டி , பருப்பு கடைய பயன்படுத்தும் பருப்பு மத்து வைத்து அழுத்தி கூழ்போல ஆக்கவும். நீர் ஊற்றக்கூடாது. விதைகள் பாதிக்காத அளவிற்கு பொறுமையாக செய்யவும்.
7. நன்றாக  பிசைந்த கூழினை வடகம் காயப்போடுவதுபோல துணி விரித்து அல்லது அகன்ற பாத்திரத்தில் ஒரு சென்டிமீட்டர் தடிமன் உள்ள உயரத்தில் சமனாக தட்டி காயவிடவும்.3 நாட்கள் வெயில் படுமாறு வைத்துவிட்டு ஈரம் உலர்ந்த அளவு காய்ந்தவுடன் நிழலான இடத்திற்கு மாற்றவும். நிழல் காய்ச்சலில் ஒருவாரம் காயவிடவும்.
8. நூறு விழுக்காடு நன்றாக காய்ந்தது என்ற நிலையில் அதை கையால் உடைத்து பார்க்கவும். உள்ளே ஈரப்பதம் எதுவும் இல்லை என்று உறுதியான பின்னே அதை பார்சலாக எங்களுக்கு அனுப்பவும். 
9. முறையாக காய்ந்து , விதைகள் பாதிப்பில்லாமல் இருந்தால் முழு தரமாக கருதப்படும். தரம் குறைவாக இருந்தால் அவை உணவு பயன்பாட்டுக்கு இல்லாமல் வெளிப்புற பயன்பாட்டுக்கே செல்லும். எனவே விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. 
10. இன்றைய கொள்முதல் விலை ரூ.200 முதல் ரூ .400 வரை உள்ளது.

குறிப்பு : காயும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதைனை வாட்சப் மூலம் புகைப்படம் எடுத்து எத்தனை கிலோ காயபோடுகின்றோம் என்ற தகவல் கொடுக்க வேண்டும்.
 
பழத்தினை பிசையும் நபர் நன்றாக கை முழுவதும் கழுவிவிட்டு பிளாஸ்டிக் கவரால் கைக்கு உரையாக மாட்டிக்கொண்டு அதனையும் வாட்சப் எண்ணிற்கு புகைப்படம் அனுப்ப வேண்டும். பிசையும் நபர் முடி விழுந்துவிடாமல் தலைப்பாகை அல்லது பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த வேண்டும். பழம் காயும் இடத்தில் அசைவ பொருட்கள் , நச்சுப்பொருட்கள், வாசனை திரவிய பொருட்கள் இருக்கக்கூடாது. சிறப்பாக தயாரிப்பில் இருப்பவர் அந்த பகுதி முகவராக நியமனம் செய்யப்பட்டு கொள்முதல் உரிமை வழங்கப்படும்.

- MAAVEL FOODS AND AGRO PRODUCTS PVT LTD, Sathak Complex, Busstand Opp, Mudukulathur, Ramanathapuram Dt, TN.
Only WhatsApp / Telegram : 9688660235

Wednesday, 12 August 2020

பைரவர் வழிபாடு கைமேல் பலன்*

பைரவர் வழிபாடு கைமேல் பலன்*
                      🕉 🙏 💐

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 

பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 

*தியான மந்திரம்*

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம்

ஹஸ்தே சூலகபால பாச டமரும்

லோகஸ்ய ரக்ஷா கரம்

நிர்வாணம் ஸுநவாகனம்

திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்

வந்தே பூத பிசாச நாதவடுகம்

ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

*பைரவ காயத்ரி*

ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !

சூல ஹஸ்தாய தீமகீ !

தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

*

உங்கள் பிரார்த்தனை  நிறைவடைந்த பிறகு பைரவருக்கு கடைசி சனிகிழமையாக  வடை மாலையும் , தயிர் சாதமும் நிவேதனமாக படைத்தது உங்கள் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
அனைத்து தெய்வங்களின்  
உபாசனைகளும இங்கு வழங்கப்படுகிறது அழைக்கவும் 9791741651

Tuesday, 11 August 2020

வேல் பூஜை

தயை செய்து பெரியவர் Hari Krishnan ஜி சொல்வதைப் படியுங்கள். பின்பற்றுங்கள்.

//.. இறைவனுடைய ஆயுதத்தை வீட்டில் வைத்திருப்பது முக்கியமில்லை. அதை அன்றாட வழிபாடு முதலானவற்றால் போற்றுவது மிகமிக முக்கியம். ...//

_________________

Hari Krishnan

காலையில் Iyappan Krishnan ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது, 'அண்ணே, வீட்டுல இந்த வேல் வச்சி வழிபடறதப் பத்தி எழுதுங்கண்ணே. சஷ்டி கவச சச்சரவுக்கு அப்புறம் நிறைய பேரு ஒண்ணரையடி உயர வேலெல்லாம் வீட்டுல வச்சிருக்கறதா ஃபோட்டோல்லாம் போடறாங்க' என்று சொன்னான். சஷ்டி கவச சர்ச்சை இப்படியெல்லாம் நன்மையை உண்டாக்கியிருக்கிறது என்று கேள்விப்பட்டதில் சந்தோஷமாக இருந்தாலும், ஒண்ணரையடி நீள வேலா, அதுவும் வீட்டிலா' என்று சற்று மிரண்டுதான் போனேன். மிகச் சுருக்கமாக சில முறைகளைச் சொல்கிறேன்.

நான் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது, மைலாப்பூர் கிரி டிரேடர்ஸில் செப்பு வேல் வாங்கி வந்து சுமார் இருபது வருடங்களாக என் பூஜையில் வைத்திருக்கிறேன். 'வேல் எவ்வளவு நீளமிருக்கிறதோ அவ்வளவு பவர் ஜாஸ்தி என்று நினைத்தார்களோ என்னவோ ஒன்றரையடி நீளத்துக்கெல்லாம் வேல் வாங்கி வைக்கிறார்கள் போலிருக்கிறது. வீட்டில் வைத்து வழிபடும் வேல் (வெள்ளியிலோ அல்லது செப்பிலோ இருக்கலாம்) ஒன்பது அங்குல நீளத்துக்குமேல் இருப்பது உசிதமில்லை. ஒன்பதங்குலத்துக்கு மேலே இருக்கும் வேலென்றால் அது ஆலயங்களில் வைக்கத் தகுந்தது. அன்றாட பூஜை போதாது; அபிஷேகம் முதலான அனைத்து ஆலய உபசாரங்களையும் செய்யவேண்டும். வேல் வைக்கிறோம் என்றால் தனியாக வைப்பதில்லை. வீட்டில் வைத்திருக்கும் முருகன் படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும். படத்தைவிட வேல் உயரமானதாக இருக்கக்கூடாது. எல்லா ஆலயங்களிலும் பார்க்கலாம். மூர்த்தியின் புருவம் அளவுக்கு உயரமாக இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக்கூடாது. எல்லா ஆலயங்களிலும், விக்கிரகங்களிலும் இப்படித்தான் இருக்கும். உலகின் மிகப்பெரிய முருகன் சிலையின் வேல் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

https://www.bing.com/images/search…

மூர்த்தியைவிட வேல் ஒன்றரைப் பங்கு உயரம் இருப்பது போன்ற உக்கிரமான தோற்றத்தை, 'போரூர்' மாதிரியான போர்த்தலங்களில்தான் பார்க்க முடியும். அங்கே போருக்குக் கிளம்புகிறான். அவனுடைய வேல் அதிநீளமாகத்தான் இருக்கும். (அது ஒருபுறம். சுவாமிமலை போன்ற தலங்களில் முருகனுக்குக் குலிசாயுதம்தான் இருக்கும். அது வேல் இல்லை. அதன் வடிவமே சற்று நீளவாக்கில், பக்கங்களில் இரண்டு வளைவுகளோடு கூடியதாக இருக்கும்.)

ஆலயங்களில் வேலை முருகனுடைய வலதுதோளில் சாத்தி வைப்பார்கள். இது பிரயோக ஸ்தானம். அதாவது. 'எப்போதும் தயார். எதுவந்தாலும் எறிவேன்' என்ற நிலையில் மூர்த்தியை வைத்திருக்கிறோம் என்று பொருள். இந்த நிலையில் மூர்த்தியின் உக்ரம் அதிகம். அப்படி வைத்தால் மீண்டும், ஆலயங்களில் கையாள்வதைப் போல அன்றாட பூசை, அதற்கான ஆசாரமுறைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குக் கொஞ்சம் சாதுவான மூர்த்தி போதுமென்றால், இடது தோளில் சாத்தலாம். இது ஆயத்த ஸ்தானம். I am ready. But not in action. வீட்டில் வைத்து வழிபட இது உகந்த நிலை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்.

என் பூஜையிலுள்ள வேலின் படத்தை இணைத்திருக்கிறேன். படமெடுப்பதற்காக பூஜையைவிட்டு நகர்த்தி, ஸ்டூலின் மீது வைத்திருக்கிறேன்.

வேலைப் படுக்கவைப்பது, தரையில் கிடத்துவது போன்ற காரியங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டியவை. ஒன்று படத்தின்மீதோ மூர்த்தியின் மீதோ சாத்தி வைக்கலாம். அல்லது நடுவில் துளையோடுகூடிய சிறிய பலகையில் செருகி வைக்கலாம். நான் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது அங்கே சந்தோஷ் ஸ்டோர் என்றொன்று உண்டு. பூங்கொத்துகளைச் செருகி வைப்பதற்காக சிறிய அளவில், முட்களோடு கூடிய கனமான உலோக அமைப்பு அங்கே கிடைத்தது. இது கனமாக இருக்க வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் செருகி நிறுத்தும்போது வேல், பின்பக்கமாகச் சாய்ந்துவிடும். இந்தச் செருகில்தான் வேலை நிறுத்தி வைத்திருக்கிறேன்.

இறைவனுடைய ஆயுதத்தை வீட்டில் வைத்திருப்பது முக்கியமில்லை. அதை அன்றாட வழிபாடு முதலானவற்றால் போற்றுவது மிகமிக முக்கியம். வீட்டில் சாளகிராமத்தை வைத்திருந்தால் அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கு வேளுக்குடி சுவாமிகள் விரிவான முறைகளைச் சொல்வார். சாளகிராமத்தை வைப்பதற்கான சிறு உலோகக் குடுவை எந்த அளவில் இருக்கவேண்டும் என்பது உட்பட கணக்கிருக்கிறது. அப்போதுதான் சாளகிராமத்தின்மீது நகம்படாமல், அந்தக் குடுவையில் விரலை நுழைத்து, வெளியே எடுத்து நீராட்டி, மீண்டும் அதற்குரிய இடத்தில் வைக்க முடியும். அப்படி 'இங்கே ஸ்வாமி இருக்கிறார்' என்ற பாவனையோடு நடந்துகொள்ளவேண்டும். ஸ்வாமிக்கே அப்படியென்றால், ஸ்வாமியுடைய ஆயுதத்தை எப்படிக் கையாளவேண்டும் என்பதை இதற்குமேல் விரிக்க வேண்டியதில்லை.

https://m.facebook.com/story.php?story_fbid=3729827387033990&id=100000202962494

Monday, 10 August 2020

கொரோனாவுக்கு மருந்து உண்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏற்கனவே இரத்த சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்,இதய நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டு வரும் 52 வயது நபர் நோய் தொற்று உறுதி செய்ய பட்டு முதல் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து விட்டு ( home quarantine)3 வது நாள் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4வது நாள் இறந்துவிட்டார்.

அவரது உறவினர் ஒருவரிடம் இவ்வளவு பிரச்சினைகள்(இதய நோய், இரத்த சர்க்கரை நோய்.உயர்இரத்த அழுத்தம்) இருக்கும் போது ஏன் அவரை முதலிலேயே மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் இருக்க முடிவெடுத்தீங்கனு நான் கேட்டதற்கு அவர் கூறிய பதில் "கொரோனாவுக்குதான் இன்னும் மருந்தே கண்டுபுடிக்கலயாமே.அங்க போறவங்களுக்கு ரெண்டு சத்து மாத்திரையை கொடுத்துட்டு மூணு வேளை சாப்பாடு போட்டு 10 நாள் சும்மா தான் இருக்கவைச்சுட்டுதான் வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்கனு எல்லாரும் சொன்னாங்க . அதான் வீட்டுலயே இருக்கட்டும்னு முடிவு பண்ணுனோம்".

நிற்க..

கொரோனா நோய்க்கு மருந்துகள் இல்லையா..
    கொரோனா நோய் வரும் முன்பே தடுப்பதற்கு தடுப்பூசி தான் கண்டுபிடிக்கபடவில்லையே தவிர கொரானா நோய்க்கான உயிர்காக்கும் மருந்துகள் எல்லா அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து கொடுக்கப்படுகிறது.. அவற்றுள் முக்கிய மருந்துகள் சில..

1.ரெம்டெசிவிர்(Remdesivir)ஊசிமருந்து.(antiviral)
               உடலில் நுழைந்த வைரஸ் பல்கி பெருகுவதை தடுக்கும் மருந்து..நோய்தொற்று ஏற்பட்ட ஆரம்பத்திலேயே கொடுக்கப்படும் போது நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது..

2.ஹெபாரின் ஊசி மருந்து(anticoagulant)
           கொரோனா வைரஸ் நோய் நுரையீரல் இரத்த குழாய்களில் இரத்த அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்.அது நிகழாமல் தடுப்பதற்கு low molecular weight ஹெபாரின் ஊசி மருந்து தோலுக்கு அடியில் போடப்படுகிறது.

3. ஸ்டீராய்டு ஊசி மருந்துகள்..
                       மெதில்ப்ரெட்னிசலோன்,
டெக்சாமெதஸோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகள் செல்அழற்சிவீக்கத்தை தவிர்க்க( anti-inflammatory ) தரப்படுகிறது.

4.நுண்ணுயிர் எதிர்ப்பு(antibiotic) ஊசி மருந்துகள்.
       வைரஸ் தொற்றின் விளைவால் உடலில் நுரையீரலில் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்தொற்றிற்க்கு எதிராக தரப்படுகிறது.

5. டோசிலிஷூமேப்  (tocilizumab) ஊசி மருந்து..
               கொரோனா நோய் தொற்றின் இறுதியில் ஏற்படும் சைடோகைன் புயல்(cytokine storm) எனும் உயிர்ப்பரிக்கும் நிகழ்வை தடுக்க வஜ்ராயுதம் போல் தரப்படுகிறது.

6.ஆக்ஸிஜன்.
              கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்குவதால் உடலில் ஆக்சிஜன் செறிவு (oxygen Saturation)  குறைவதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.ஆக்ஸிஜன் செறிவு குறையும் போது அதற்கேற்ப செறிவுள்ள ஆக்சிஜன் தரப்படுகிறது.

7.சிபாப்(cpap) தெரபி (Continuous positive airway pressure therapy)
        உடலில் ஆக்சிஜன் செறிவை ஆக்சிஜன் தருவதன் மூலம் பலனளிக்காமல் போகும்போது தரப்படுகிறது.

8.செயற்கை சுவாச கருவி(ventilator).
        இறுதி முயற்சியாக செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை தரப்படுகிறது..
     
         மேற்கூறிய அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் நோயாளிகளின் ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையிலும் நோயின் தீவிரத்தன்மையின் அடிப்படையிலும் மருத்துவர்களினால் தீர்மானிக்கபட்டு அனைத்து  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படுகிறது.

               சமூக வலைத்தளங்களில் கொரோனாக்கு மருந்தில்லை.கொரோனா என்று ஒரு நோயே இல்லை. பணத்திற்காக சும்மா கொரோனா என்று கூறி பத்து நாட்கள் மூணு வேளை சாப்பாடு போட்டு கண்துடைப்பிற்காக ரெண்டு சத்து மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள் என்று  நோய் அறிகுறிகளற்ற தீவிர நிலையை அடையாத பெரும்பான்மையான மக்கள் நோய்க்காக தனிமைப் படுத்தப்படும் தனிமை வார்டுகளில் நடப்பதை வைத்து கட்டுக்கதைகளை பரப்பும் நீங்கள்.. ஒரு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு பார்வையாளராக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள்.கொரோனாவின் மற்றொரு கோரமுகமும் உண்மை நிலையும் புரியும்.நீங்கள் பரப்பும் வதந்திகளால் நான் மேற்கூறியபடி நிகழும் மரணங்களில் உங்கள் பங்களிப்பும் உண்டு என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

 மருத்துவர். P.M.A.பீர் மைதீன்..

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...