Wednesday, 25 August 2021

ஏன் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்?

ஏன் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்?

ஏன் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்கு கீழேகொடுக்கப்பட்ட வேதிப் பொருட்களின் தீமைகளை தெரிந்து கொண்டு அனைவரும் மாறவும்.  இந்த செய்தியை ஒரு நபர் குறைந்தது 100 பேருக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன்.
- டாக்டர் சுப்பிரமணியன் முருகேசன்.

வேதி (ரசாயனங்கள்) உரங்களினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்.

களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நரம்பு, மூச்சுக்குழாய் மற்றும் குடலுறுப்புகளைப் பெரிதும் பாதிக்கிறது. சில வகையான பூச்சிக்கொல்லி ரசாயனங்களை நாம் சுவாசிக்கும் போது, அவை நுரையீரலைப் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் ஆஸ்துமா, தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பொதுவாக பூச்சிக்கொல்லிகளிகளில் காணப்படும் அட்ராக்ஸின் என்ற வேதிப்பொருள் விந்தணுக்களிலுள்ள நிறத்திரி உடைவதற்கும், மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.

நைட்ரஜன்

இதன் அளவு பயிர்களில் அதிகரித்தால் அவ்வுணவுப் பொருள்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நைட்ரஜன் உரங்களிலிருக்கும் ’அமைன்’ என்னும் பொருளானது புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

அலுமினியம்

விளைபொருட்களில் அலுமினியத்தின் அளவு அதிகரித்தால் ஆஸ்துமா, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் குழந்தை பிறப்பில் இடையூறு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

கால்சியம்

இவை சார்ந்த வேதி நச்சுப் பொருள்கள் நரம்பு வளர்ச்சியைக் கட்டுபடுத்துகிறது. மேலும் சிறுநீரகத்தை பாதிப்பதோடு, எதிர்புத்தன்மையையும் குறைக்கிறது.

கோபால்டு

இவ்வேதிபொருட்கள் உணவுப் பொருட்களில் அதிகரிக்கும் போது அவை நுரையீரலைப் பாதிக்கிறது.

போரான்

மூக்கு, தொண்டை மற்றும் கண் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மெக்னீசியம்

மூச்சிக்குழாய், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

லிட்டேன்

நரம்புப்பகுதிகளில் நச்சுத்தன்மையையும், மார்புபுற்று நோயையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக நரம்பியல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மாலத்தியான்

உடலில் நுழைந்த பொழுதினிலேயே நரம்புமண்டலத்தைப் பாதிக்க ஆரம்பித்து விடுகிறது.

பாரத்தியான்

நோய் எதிர்பு சக்தியை தடுத்து இனவிருத்தியை தடை செய்யும்.

டிடிடி ( டைகுளோரோ டைஃபினால் ட்ரைகுளோரோ ஈத்தேன்)

இது  அதிக அளவில் பயன் படுத்தபடும்  ஒரு ரசாயனமாகும். இது மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய  காரணியாக உள்ளது.

சார்பரில்

பிறவி கோளறுகளை ஏற்படுத்தும், நோய் எதிர்பு சக்தியை தடுக்கும்

அட்ரலின்

மூளை, நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு, புற்றுநோய் காரணி.

என்டோசல்பான்

இனவிருத்திக்கு கேடு, நோய் எதிர்பு சக்தியை தடுக்கும், உட்சுரப்பிகளுக்கு பாதிப்பை எற்படுத்தும்.

சிந்தடிக் பைரிதிராய்டுகள்

இனவிருத்திக்கு கேடு, நோய் எதிர்பு சக்தியை தடுக்கும், உட்சுரப்பிகளுக்கு பாதிப்பை எற்படுத்தும்.

ஹெப்டேக்லர்

கருவில் உள்ள சிசுவுக்கு கேடு, இனவிருத்தியை பாதிக்கும்.

BHC லின்டன்

கருவில் உள்ள சிசுவை பாதிக்கும், புற்றுநோயை உண்டாக்கும், நோய் எதிர்பு சக்தியை தடுக்கும்,ஈரல், சிறுநீரகம், இனவிருத்தியை பாதிக்கும். 

ஏறத்தாழ 60% களைகொல்லிகள், 90% நோய்கொல்லிகள்,30%பூச்சிகொல்லிகள் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகிறது. விவசாயிகள் பூச்சிகொல்லிகளை தொடர்ந்து கையாளுவதால் தோல்சம்மந்தமான நோய்கள் ஏற்படுகிறது.நாம் உண்ணும் உணவின் மூலம் உட்கொள்ளும் பூச்சிகொல்லிகள் சிறுகக் சிறுக நம் உடலில் சேமிக்கப்பட்டு உடல் நலத்திற்கு பெறும் ஊறுபாடுகளை நாளடைவில் ஏற்படுத்துகிறது. அதிகளவு பொட்டாசியம் உரங்களை உபயோகித்தால் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் மற்றும் கரோட்டீன் அளவு வெகுவாகக் குறைகிறது. நைட்ரஜன் உரங்களை அதிகளவு உபயோகிக்கும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய்களினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது.
இயற்கை உணவு பாதுகாப்பு சட்டம் (1990), இயற்கை உணவு பற்றி கூறுகையில் உணவுப்பொருளின் உற்பத்தியானது,  செயற்கை முறையில் தாயாரிக்க பட்ட பூச்சிகொல்லிகள், நோய்கொல்லிகள் போன்ற வேதி உரங்கள் 73% 
பயிர்களில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

பொதுவாக காய்கறி, பழங்களை நாம் சமைக்காத அல்லது பாதி சமைத்த அல்லது பாதியளவு சமைத்த நிலையிலேயே உண்கிறோம்.ஆகவே பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் வேதிமுறையைப் பின்பற்றுவதைக் காட்டிலும், இயற்கை முறையில் உற்பத்தி செய்வதே சிறந்த முறையாகும். மேலும் செலவு அதிகமான, சுற்றுப்புற பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேதிமுறையைக் காட்டிலும், இயற்கை முறை வேளாண்மையினால் உற்பத்தி செய்த பொருட்கள் சிறந்த மணம் சுவை சத்துகள் கொண்டதாகவும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும். நைட்ரஜன் அளவு குறைவாக இருந்தால் வைட்டமின் மற்றும் புரதத்தின் அளவும் அதிகம் காணப்படும். மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இரத்தத்தை சோதனை செய்து பார்த்ததில் சாதாரண பெண்களை விட 6-9 மடங்கு அதிகமான

Friday, 13 August 2021

*கர்ம வினை !*

*கர்ம வினை !*

 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.  

       ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?
 
 நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் 
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். 

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். 

சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். 

சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளை பெற்றுக் கொள்கிறோம். 
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"* 
எனப்படுகிறது.
 
*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது. 
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது. 

சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*

சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது. 

பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன. 

கனவில் கூட காண முடியாத  பல *ஆச்சர்யங்கள்* நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.
 
*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?* 
 
ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
 
*நாமே* நம் தாயை, *தந்தையை,* 
*சகோதர* சகோதரிகளை,  *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,*  *தேர்ந்தெடுப்பதில்லை.*

 நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் 
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 

முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ?

 ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.

அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில் 
வேறு பார்வையில் தோன்றுவர்.
 
எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. 

 அது என்ன ? 
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் 
*கர்ம* கதிகளின் 
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?

இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  *"கர்ம வினை"* தான் 
 
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.

அத்தனைப் பிறப்பிலும் பல பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்  

அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.

இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
 
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் 
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
 
இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. 
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.

அவரவர்கள் செய்வினையின் 
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் 
வாழ்க்கை அமையும் 
 
துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே.

 இதைத் தான் _" *தீதும் நன்றும் பிறர் தர வாரா* 
என நம் மதம் போதிக்கிறது.
 
நம்முடைய நல்ல, கெட்ட காலங்களுக்கு 
நாம் மட்டுமே பொறுப்பு.

 அப்படி என்றால் 
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது.  

இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. 

நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?

எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? 

எது போன்ற வாழ்க்கைத் தடத்தை 
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது 
உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் *ஆன்மீகம்*
 
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
 
பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் 
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. 

ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். 

அதேபோல பெரும் பணக்காரர்களையும்  *'துக்கங்கள்*' விடுவதில்லை.
 
சர்க்கரை ஆலை அதிபரானாலும் *Diabetic* -
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை 
உண்ண முடியாது. 

பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனது கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
 
 
*வினை விதைத்த வழியில் விதி நடக்கும்*
*விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'* 
 
 நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் 
செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._  

நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.
 
_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._
 
_நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
 *கொடுக்க* முடியாது🙏

கருடன்

*பெருமாளின் வாகனம் கருடன்;*

நேரிலும் கனவிலும் கருடனை தரிசிப்பது மிகவும் மங்களகரமான விஷயமாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. திருவிழாக் காலங்களில் நாம் பெருமாளைப் பல்வேறு வாகனங்களில் தரிசித்தாலும், கருட வாகனத்தில் தரிசிப்பது என்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான்! கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ண வர்களின் மாபெரும் நம்பிக்கை. பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர் கருடன்.

பெருமாளுக்கு சாமரமாகவும் இருந்து காற்றை வீசுபவர் கருடாழ்வார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆழ்வார்களில் பெரியாழ்வார் கருட அம்சமாகவே போற்றப்படுகிறார். கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது. கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. ஆழ்வார்கள் கருடனை போற்றிப் பணிந்து 'தெய்வப்புள், கொற்றப் புள்' என்றெல்லாம் அழகிய தமிழில் பாடியுள்ளனர். கருட பகவானின் சித்திரம் வரையப்பட்ட கொடிதான் விஷ்ணு ஆலயங்களின் திருவிழாவின் போது ஏற்றப்படுவதை கண்டிருப்போம். கருடபகவானை நினைத்தாலே விஷ உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும் என்கிறார்கள். கருட பகவான் அணிந்துள்ள மரகதப் பச்சை அணிகலனுக்கு கருடோத்காரம் என்று பெயர். இதன் ஒளி பாம்புகளை ஒடுங்கச் செய்துவிடும். கருட பகவானின் திருவுருவமும் வழிபாடும் உள்ள இடத்தில் வெற்றியே உண்டாகும். வாயு பகவான் கருடனின் வாகனமாக உள்ளதாக விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது. கருடன் திருமாலின் வாகனம், கருடரின் வாகனம் வாயு என்பது அதிசயம்தான்

காஷ்யபரின் மகனாகப் பிறந்து, சிற்றன்னை கத்ருவிடம் அடிமையாக இருந்த அன்னை விநதையை காத்தவர் கருடபகவான். திருமாலின் மீது மாறாத பக்தி கொண்டு அவரையே சுமக்கும் பாக்கியம் பெற்ற அடியார் என்ற பெருமையும் கொண்டார். வைஷ்ணவம் தாண்டி கருடனைப் பார்ப்பதும், அவரது குரலைக் கேட்பதும் கூட நல்ல சகுனமாக உலகமெங்கும் பார்க்கப்படுகிறது. கருட பகவான் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. கருட பகவான் ஆடி மாதம், சுக்ல பட்சம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஆண்டு ஜூலை 27 அன்று கருட பஞ்சமி தினம் கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி தினமான அவரது ஜயந்தி நாளில் விரதமிருந்து வேண்டிக்கொள்ளப்படும் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. உடன்பிறந்த சகோதரர்களின் நலவாழ்வுக்காக இந்த நாளில் வேண்டிக்கொள்வது வடநாட்டு மக்களின் வழக்கம். கருட பகவானைப் போன்ற பலசாலியும், அதிர்ஷ்டமும் கொண்ட மகனைப் பெற, இளம்பெண்கள் வேண்டிக்கொள்வதும் இந்த நாளில் விசேஷம். ஒவ்வொரு வைஷ்ணவ ஆலயத்திலும் கருட பஞ்சமி தினத்தன்று அதிகாலை கருட ஹோமத்துடன் மகாதிருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். அந்த வேளையில் பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது புண்ணிய காரியமாகும். கருட பஞ்சமி நாளில் அவரை தரிசித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. வேண்டியன எல்லாம் நிறைவேறி, சகல சௌபாக்கியங்களையும் அடைவர். கருடனுக்கு பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். செவ்வாய் பலம் அதிகரிக்கும் என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. வேதாந்த தேசிகருக்கு ஆத்ம நண்பராகவே கருட பகவான் இருந்து அருள் செய்தார் என்றும் அதனாலே 'கருடபஞ்சாசத்’ ‘கருட தண்டகம்' போன்ற நூல்களை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது

விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி எனப் பல திருநாமங்களைக் கொண்ட கருட பகவானின் அருளைப்பெற இந்த நாளில் அவரை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம். கருட பஞ்சமி தினத்தில் திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். எனவே கருட பஞ்சமி எனும் கருட பகவானின் திருஅவதார நாளில் அவரை வணங்கி அவரின் அருளைப் பெறுவோம்.

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...