Tuesday, 27 September 2022

கன்னி தெய்வம்

கன்னி தெய்வம் வழிபாடு

ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள்.

சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது.

இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது.

பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே... கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது. பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன.

தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.

குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும்.

இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள்.

அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள். இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர்.

கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுககு கிடைக்கும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள்.

முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது.

துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்கும்பிட்ட துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம்.

குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்றாகும். இன்றைய நவீனயுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட திரைகடல் தாண்டி தேடி ஓடி விடுகிறார்கள். எப்போதாவது கல்யாணம், கோயில் கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம். ஆனால் கன்னி தெய்வம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும்.

பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே படையலில் நிச்சயம் பனியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம்பெறும். அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த சமபந்தி விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்துவிடுகிறாள். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவை தேடி ஓடி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தான் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. இதுபோன்ற கன்னிகளுக்கும் அதுபோலதான் ஆசை. தன் வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பார். இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னியை கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள்.

பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடிர் திடிரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம்.கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது.

குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து.

கன்னிகளில் கதை பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல கதை மனதை உருககுவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவர் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவடை சட்டைதானா... போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது.

ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.

இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது.

தற்போது பனை தொழில் முழுவதும் குன்றி விட்டது. நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சி பொருளாக மாறிவிட்டது. நவீன யுகத்தில் கன்னி நார் பெட்டி மட்டும் தாயரிக்கும் பணி நடந்து வருகிறது. பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் இப்போதும் காணலாம். பழமையை பறைசாற்றும் இந்த வழிபாடு, பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்றும் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

நூறு தெய்வத்தை வழிபடுவதும் சரி, ஒரு கன்னியை வழிபடுவதும் சரி என்கிற வார்த்தை கிராமங்களில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தளவுக்கு கன்னி வழிபாடு கிராம மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது. கன்னி என்பது இங்கே பெண்ணை மட்டும் குறிக்கும் வார்த்தை அல்ல. மணமுடிக்காதவர்கள் அனைவருமே கன்னிதான். ஆண், பெண் என்ற பாகுபாடு இங்கில்லை. இடி, மின்னல், பெருவெள்ளம், மண் சரிவு, குளத்தில் மூழ்கிப் போவது, மரம் விழுந்து மாண்டு போதல் முதலான இயற்கை இடர்பாடுகளால் உயிர் நீத்து போவது, காலரா, அம்மை, காசநோய், புற்றுநோய் முதலான நோய்களினால் இறந்து போவது, பாம்பு, தேள் முதலான விஷ ஜந்துக்களால் ஏற்படும் இறப்பு, மோட்டார் வாகனங்களாலும், மின்சாரம் தாக்குதல் போன்றவற்றாலும் இறந்து போகும் மணமுடிக்காத நபர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இங்கே உலா வருவதாகவும், அந்த ஆத்மாவை சாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இறந்த பின்னும் அவன் நினைவுகளால் மனம் நொந்துபோன உறவுகள் தங்கள் பாசத்தின் வெளிப்பாடாக இறந்துபோன நபரின் ஆத்மாவை மகிழ்விக்கும் விதமாக
செய்யப்படும் வழிபாடே கன்னி வழிபாடு. இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள்.

இதனாலேயே தெய்வ நிலைக்கு அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். என்று இன்றும் நம்பப்படுகிறது. ‘‘ஆயுசு முடியுமுன்னே எமன் அவன் ஜீவனு எடுத்திட்டான். உடம்ப நம்ம எரிச்சிட்டோம். அவன் ஆத்மா எங்க போகும். இங்க தான் சுத்தும்.’’ ‘‘இங்கத்தான்னா எங்க தாத்தா, ’’ ‘‘குளத்தாங்கரை, ஆத்தாங்கரை, கிணத்தாங்கரை மயானகரை, நாலு முக்கு சந்தி, நம்ம வீடு’’ இப்படி பெரியவர்கள் இன்னும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள். இதில் 15 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இறந்தால் அவர்கள் துடியான கன்னியாக இருப்பதாக கூறுகிறார்கள். கன்னியாக வழிபடப்படுபவர் இறந்து ஓர் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். அதன் பிறகு தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டு சுவற்றிற்கு சுண்ணாம்பு அல்லது வண்ணம் தீட்டி சுத்தப்படுத்த வேண்டும்.

அந்திக் கருக்கலில் வீட்டின் பூஜை அறையில் கன்னி மூலையில், பூஜை அறை இல்லாத வீட்டில் தென்மேற்கு மூலையில் அதுதான் கன்னிமூலை. அந்த கன்னி மூலையில் குத்து விளக்கேற்றி, விளக்கின் கீழே இளநார்பெட்டி வைப்பர். இதை தென் மாவட்டங்களில் கட்டுப்பெட்டி என்றும் கெட்டுப்பெட்டி என்றும் கூறுகின்றனர். புதுத்துணி எடுத்து அதை அன்றைய தினம் காலையில் நனைத்து காய வைத்து மாலையில் அந்த துணியை சுருட்டி முறுக்கி மூலையில் வைக்க வேண்டும். ஆண் என்றால் எந்த மாதிரி ஆடை அணிவாரோ அது போன்றும் அதற்கு துணையான பொருட்கள் குறிப்பாக மணிபர்ஸ், வாசனை திரவியம், முகப்பவுடர் முதலான பொருட்களும், பெண்கள் என்றால் சேலை முதலான துணிமணிகளும், வளையல், மை, நகப் பூச்சு, நெத்திச் சுட்டி, ஒட்டியாணம் என்று அந்தப் பெண் அணிந்து மகிழும் அனைத்து பொருட்களும் எடுத்து வைக்க வேண்டும். சிலர் இறந்தபெண் அதிகம் நேசிப்பாள் என்பதற்காக தாயக்கட்டை, பல்லாங்குழி முதலான விளையாட்டு உபகரணங்களையும் கூட வைப்பதுண்டு.

இவை அனைத்தும் வைப்பதற்கு முன்பு இறந்த போனவரின் உருவப் படத்தை மூலையில் வைக்க வேண்டும். அந்த படத்திற்கு சந்தன குங்குமம் கொண்டு பொட்டு வைத்து படத்திற்கு பிச்சிப்பூ மாலை (ஜாதி மல்லி) சூட்ட வேண்டும். சிலர் அதிகப்படியான தொகைக்கு ரோஜாப்பூ ஆரம் வாங்கி போடுவதுண்டு. அது கூடாது. கன்னி வழிபாட்டிற்கு பிச்சிப்பூவும், மட்டிப் பழம் (ஏலக்கி), செவ்வாழை, நாட்டுப்பழம் போன்றவற்றை மட்டும்தான் வைக்கப்பட வேண்டும். கருப்பு நிறத்தில் துணியோ, வேறு பொருட்களோ வைக்கக் கூடாது. இவற்றை இறந்தவர் படத்திற்கு முன்பு இலை போட்டு அதில் வைக்க வேண்டும். ஐந்து தலை வாழை இலைகளை போட வேண்டும். முதலில் உடைத்த தேங்காய் மற்றும் 5, 7, 9 எண்ணிக்கையில் பழங்கள் வைக்க வேண்டும். அதோடு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு அதிலுள்ள மூன்று கண்ணில் ஒரு கண் பகுதியில் துவாரமிட்டு, அதிலுள்ள தண்ணீரில் சிறிது பச்சரிசி, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை, சிறிது மஞ்சள்தூள் ஆகியவற்றை இட வேண்டும்.

அடுத்த இலையில் அரிசிச் சாதம், குழம்பு, கூட்டு வகைகளுடன் பரிமாற வேண்டும். அதில் இறந்த நபருக்கு பிடித்தமானவை அதிகம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூன்றாவது இலையில் எல்லா பழ வகைகளிலும் ஒவ்வொன்று வாங்கி வைத்திருக்க வேண்டும். நான்காவது இலையில் பலகாரங்கள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் இனிப்புகளே இடம் பெற வேண்டும். பூஜைக்குரியவர் காரம் விரும்புவார் என்றால் ஒரு வகை பலகாரம் மட்டும் காரமாக இருக்கலாம். ஐந்தாவது இலையில் துணிமணிகள் என வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டும். பூஜையின் போது கற்பூரம் காட்டக் கூடாது. வீடு முழுக்க சாம்பிராணி வாசமே இருக்க வேண்டும். மணி ஓசையை எழுப்பக் கூடாது. அப்போது நிசப்தமாக இருக்க வேண்டும். இறந்துபோனவருக்கு மிகவும் பிடித்த உறவுக்காரர்களில் ஒருவர் மீது அவர் சக்தி வந்திறங்கி ஆடி பேசுவதாகவும் சொல்லப்படுகிறது. இது சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் இந்த மாதிரி இல்லை. பெரும்பாலான வீடுகளில் அந்த நேரம் பல்லி ஓசை எழுப்பும் என்றும் சொல்கிறார்கள்.

சிலர் அன்றைய தினம் எங்களது கனவில் வந்து பேசுவான் என்றும் கூறுகிறார்கள். மறுநாள் கட்டுப்பெட்டி என்ற அந்த இளநார்பெட்டியில் மஞ்சள் கிழங்கு, துணிகள், கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து கன்னி மூலையில் உயரமான இடத்தில் கட்டி  வைத்து விடவேண்டும். அடுத்த வருடப் பொங்கலன்று வீட்டை சுத்தம் செய்து காலையில் கன்னிப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். அதற்குள் வைத்திருந்த துணியை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அணிந்து கொள்வார். இந்தக் கன்னி வழிபாடு தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர் வசதிக்கு ஏற்ப வழிபடப்படுகிறது. சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி நகரம் வரை தொடர்ந்து வருகிறது.

தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் தை மாதத்தில் வணங்கும் வழக்கம் தென் மாவட்டங்களில் மிகுதியாக காணப்படுகிறது. குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும். துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்குவைத்த துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண்.

தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்பது கூட கன்னி வழிபாட்டில் முக்கிய அம்சம் ஆண் கன்னியை வழிபடும் அக்கா, தங்கையர்கள், பெண் கன்னியை வழிபடும் அண்ணன், தம்பிகள் வளமுடனும், பலமுடனும் திகழ்கிறார்கள் என்கின்றனர், கன்னி வழிபாடு செய்வோர். பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடீர் திடீரென அழுதால்கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் கேட்கலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது. குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து.

கன்னி வழிபாடுகளின் நிகழ்வுகள் பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல மனதை உருக்குவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த ஒருவர் மாடு முட்டியதில் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவாடை சட்டை எடுத்து வைத்துக் கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவாடை சட்டைதானா... போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை, ஜாக்கெட் வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னி குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி, கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.  

புதிதாக கன்னிக்கு பூஜை செய்பவர்கள், கன்னியை வீட்டிற்கு ஏற்றி வைக்க வேண்டும் என்று கருதி அதற்கான பூஜை செய்வார்கள். அந்த பூஜை இதே போலத்தான் என்றாலும். முன்னதாக வாசலில் ஒரு வெள்ளை நூலை, வாசலை இடை மறித்துக் கட்டி விடுவார்கள். பூஜை உச்சமாக நடந்து கொண்டிருக்கும் போது அந்த நூல் தானே அறுந்து விழும். எவரோ ஒருவர் கத்திரிக்கோலைக் கொண்டு வெட்டி விட்டது போல இரண்டாக முறிந்து போகும். அவ்வாறு நடந்ததும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ அல்லது பங்காளிகளில் எவரேனும் ஒருவரோ அருள் வந்து ஆடுவர். இவ்வாறு கன்னியை வீட்டிற்குள் ஏற்றும் பூஜை நடக்கிறது.  இறந்தது போனவர் செய்யும் மகிழ்ச்சியான சேட்டைகளையும், அவர் பேசிய வார்த்தைகளையும், நையாண்டிகளையும் சொல்லி, நினைவு கூர்தல் நடக்கும். அது மட்டுமன்றி, அந்தத் துயர சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன் அவர் செய்த செயல்கள், உச்சரித்த சொற்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப உறவுகள் கூறி அவர் பால் தங்களது நினைவுகள் ஒருவருக்கு ஒருவர் பேசிப் பேசி அவரைப்பற்றி அந்த பூஜையின் போது நினைவு கூர்ந்து கொள்வர்.
பின்னே நடப்பதை முன்னே கனவில் வந்து கன்னி சொல்லிவிடும் என்கிறார்கள் வழிபடும் அன்பர்கள். இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி  பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது கன்னி.

பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என்று பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை. தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்துவிட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி கும்பிடுகின்றனர்.

தைப் பொங்கலையொட்டிய நாளில் அந்திக் கருக்கலில் இந்த சம்பிரதாயம் நடந்தேறுகிறது. இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் பிச்சிப்பூ நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகின்றனர். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர். கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு வரும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இள நார்பெட்டியை வைத்து விடுவார்கள்.

அடுத்த வருடப் பொங்கலன்று வீட்டை சுத்தம் செய்து காலையில் கன்னிப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். அதற்குள் வைத்திருந்த துணியை உரியவர்கள் உடுத்தக் கொடுப்பார்கள். இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. தென் தமிழகத்தில் சமீப காலம் வரை பிரபலமாக இருந்த சிறுவீட்டுப் பொங்கல் கூட, கன்னிப்பொங்கல்தான். மணமாகாத கன்னியர் களிமண்ணால் வீடு கட்டி சிறு பாத்திரங்களில் பொங்கலிட்டு அண்டை வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவர்.
தென்னிந்தியாவில் பரவலாக பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்துகன்யா, சுகஸகன்யா, வனகன்யா, சுமதிகன்யா என ஏழு கன்னிமார் பெயர்களைக் கூறுவர்.

பழமை வாய்ந்த கோயில்களில் இந்த தெய்வங்கள் வடக்கு திசை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கிராமக் கோயில்களிலும் இந்த தெய்வங்கள் வழிபடப்படும். வெண்பொங்கலுடன், பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரையோடு காதோலை கருகமணி வைத்து பூஜை செய்வார்கள். சப்த கன்னிகளுக்கு சிவப்புத் துணி கட்டுவர். பட்டாரிகாவை வழிபட்டால் வீரம் கிட்டும். வனகன்யாவை வழிபட்டால் வேளாண்மை செழிக்கும். சிந்து கன்யாவால் ஆறு, குளம் உள்பட நீர் நிலைகள் பெருக்கும்; மழை அருள் கிடைக்கும். சுகஸ கன்யாவை வழிபட்டால் குடும்ப உறவு சிறக்கும். பத்ம கன்யாவால் வீட்டில் செல்வம் கொழிக்கும். தேவகன்யாவை வழிபட்டால் தேவர்களின் அருள் கிடைக்கும். சுமதி கன்யாவை வழிபட்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாவர்.

இந்த ஏழு கன்னிகளின் பெயர்கள் இடத்துக்கு இடம் மாறுகிறது. பழங்குடிகளான காணிகள் அடையாளம் காட்டும் ஏழு கன்னிகள் வேறாக இருக்கிறார்கள். இவர்கள் கன்னி தெய்வங்களை அடியுலவுக் கன்னி, நடு உலவுக் கன்னி, தலையுலவு கன்னி, மேலுலவு கன்னி, அங்கு குய் கன்னி, ஆறு வெட்டிக்கன்னி, சொக்கன் கன்னி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இவர்கள் ஏழு நிறம் கொண்ட தேரேறி (வானவில்) விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு நீராட வருகின்றனர். அவர்கள் நீராடுவதை மானிடர்கள் பார்த்து விடுவதால் தீட்டுப் பட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர். இவர்களை வன தேவதைகளாக வழிபடும் வழக்கமும் உண்டு. ‘‘வட தமிழகத்திலும் கன்னி தெய்வ வழிபாடு பிரசித்தம்!’’ என்கிறார் பேராசிரியர் தனஞ்செயன். ‘‘நாகை உள்ளிட்ட தமிழக கடலோரங்களில் கொட்டகைகளில் 7 கற்களை நட்டு கன்னி தெய்வத்தை வணங்குகின்றனர்.

தனது சகோதரர்களை தொலைத்துவிட்டு தீவுகளில் சென்று தேடியபோது உதவிய 7 கன்னியரை, கடலோர அரச குமாரர்கள் இங்கு தை 3ம் நாள் வரவேற்கின்றனர். அவர்கள் வந்ததும் உபசரிக்கிறார்கள். அப்போது கன்னியர் எழுவர் சாமியாடி குறி சொல்கின்றனர். மாசி மகம் வரை அவர்களுக்கு உபசரிப்பு நடக்கிறது. மாசி மகத்தன்று கன்னியாடிகள் 7 பேரையும்    சாமியாடிகள் சவுக்கால் அடிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ‘கன்னி விலக்கல்’ என்று பெயர். சவுக்கடி நிகழ்ச்சிக்குப் பின்னர் கன்னித்தெய்வங்களை அக்னி வடிவில் மாற்றி சட்டியில் வைத்து கட்டுமரத்தில் ஏற்றி கடலுக்கு அனுப்புகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் நோய்வாய்ப்பட்டால், குணமாக வேண்டும் என நேர்ந்து கன்னி சிலை செய்து வைப்பார்கள். வயிற்று வலி வந்தால், வயிற்றில் இலை பரப்பி மாவிளக்கு ஏற்றி வைப்பர். இதற்கு ‘மாவு பள்ளயம்’ எனப்பெயர்’’ என்கிறார் அவர்.

‘‘கன்னிமார் வழிபாடு தமிழகத்தில் பண்டைக்காலம் தொட்டே நடைபெற்றதை பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. நாகர்கோவிலை சம்புகேஸ்வரம் என்று முன்பு அழைத்தனர். வள்ளியூர் அருகே உள்ள சம்பூற்றுவும் அதற்கு சமகால பூமிதான். அங்கு சிவராத்திரி அன்று சப்த கன்னியர் சிவபூஜை செய்வதாக ஐதீகம். சம்புகேஸ்வரமான நாகர்கோவிலில் தலை வைத்து, சப்த கன்னியர் என்னை வழிபடும் சம்பூற்றில் வாலை வைத்து பரிபாலனம் செய்ய வேண்டும் என்று நாகராஜனுக்கு ஈசன் உத்தரவிட, அவ்வாறே அவன் செய்ததாகவும், அவன் வால் பகுதியில் கன்னிமார் குடிகொண்ட கோயில் உள்ளதென்றும் கர்ண பரம்பரையாக வழங்கி வருகிறது’’ என்கிறார் வள்ளியூர் ஆறுமுகம் பிள்ளை.

தென்காசி பழைய பஸ் நிலையம் எதிரே கன்னிமாரம்மன் கோயில் உள்ளது. அந்த தெருவுக்கே கன்னிமாரம்மன் பெயர்தான். ‘‘தென்காசியில் காசி விஸ்வநாதர் அருளாட்சி செய்யும் முன்பே கன்னிமாரம்மன் கோயில் இருந்தது’’ என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன்.
‘‘தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே எழுவரை முக்கியில் உள்ள சப்த கன்னியர் கோயில் 17ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது’’ என்கிறார் கோயில் பூசாரி மணிப்பிள்ளை. இங்குள்ள ஊருணியில் குளித்த 7 கன்னிமாரின் ஆடைகளை ஆடு மேய்த்தவர் கவர்ந்துவிட, வெட்கிப்போய் திரும்பக் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் ‘நாங்கள் கல்லாய் சமைகிறோம். நீயும் கல்லாய்ப் போ’ என்று சபித்துவிட்டு 7 கன்னியரும் கல்லானார்களாம்.

அன்று இரவே முத்து பார்வதி அம்மன் கோயில் பூசாரியின் கனவில் தோன்றிய சப்த கன்னியர், ‘நாங்கள் ஊருணியில் இருந்து சற்று தொலைவில் கற்சிலையாய் கிடக்கிறோம். எங்களை நிலைப்படுத்துங்கள், ஊர் செழிக்கும்’ என்று கூறி மறைந்தார்களாம். ‘‘கார்த்திகை 2வது செவ்வாய் தோறும் இங்கு பாயசத்தை பெருக்கி படப்பு கஞ்சி ஊற்றுகிறோம். பூசாரியான நான் முன்னே வர, அடுத்து கிராமத்தின் 7 சிறுமிகள் நடந்து வர, கணியான் பின் தொடர விழா நடக்கிறது. 7 சிறுமிகளுக்கும் கன்னிமார் நினைவாக குங்குமம், பூ, மஞ்சள் கொடுத்து கௌரவிக்கிறோம். அவர்களுக்கு பரிமாறிய பின்பு மற்றவர்களுக்கு பனை ஓலைப்பட்டையில் கஞ்சி வழங்குகிறோம்’’ என்கிறார் மணிப்பிள்ளை. குலம் தழைப்பது பெண்ணின் குணத்தால் என்பார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு தீங்கிழைத்தால் கேடு நிச்சயம் என்பதற்கு சான்று தான் கன்னி தெய்வக் கோயில்கள். இந்தப் பாரம்பரியத்தால்தான் தமிழகம் பெண்களை மதிப்பதில் என்றும் முன்னணியில் இருக்கிறது...

கொங்குநாட்டில் கன்னியர் வழிபாடு

கொங்குநாட்டில் ஊர்கள் மற்றும் தோட்டம் தவிறாமல் கன்னிமார் கருப்பாரயனுடன் சேர்த்து வழிபடப்படுகிறது. கொங்கில் கன்னிமார் இல்லாத இடமே இல்லை எனலாம். அண்ணன்மார் கதையில் பொன்னர் சங்கர் படுகளம் ஆன பின்னர் அருக்காணி தங்கம் அண்ணன்மாரை எழுப்பி வாய்மொழி கேக்கும்போது, தங்கையை பெரியகாண்டியம்மனுடன் வந்த கன்னியர் அறுவருடன் ஏழாங்கன்னியா இளைய கன்னியாக சென்று சேர்ந்துகொள். கலிமுடியும் வரை காராளர் உள்ளவரை அவர்களின் தோட்டத்தில் தெய்வமாக வீற்றிக்கும் படியும் தாம் கருப்பராயனாக துணையிருப்பதாக வரம் அளித்தனர்

மாட்டுப்பொங்கல் பட்டிப்பொங்கல் அன்று தெப்பக்குளம் வெட்டி வைத்து கரையில் ஏழு கன்னியரை முதன்மையாக வைத்து எதிரில் மல்லாண்டை வைத்து சுற்றிலும் அண்ணன்மார் , மாயவர் தெய்வங்களை வைத்து வழிபடப்படுகிறது.

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...