Monday, 21 November 2022

முலைவரி கதை உருவான விதம்

💥முலைவரி கதை உருவான விதம்

💙திருவாங்கூர் சமஸ்தானம் பெண்களின் மார்புக்கு முலைவரி போட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நங்கேலி என்ற பெண் தன் மார்பை அறுத்துக் கொண்டு   இறந்து போனாள் என்றும்... அவள் இறந்த இடம் ஆலப்புழாவில் உள்ள முலைச்சி பறம்பு என்று அழைக்கப்படுவதாகவும் பல காலமாக மிஷனரிகள் புரட்டு.
👉(முலைவரி போட்ட ஆவணம், முலைவரி கட்டிய ரசீது என்று எந்த ஆதாரமும் இல்லை என்பது வேறு விஷயம்)
 
👉சரி.... உண்மை என்ன.....?

❤️கோவலன் இறந்த துயரத்தில், கண்ணகி தன் இடதுபுற மார்பை அறுத்துப்போட்டு  மதுரையை சபித்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
______________________________________
ஏகிலாள் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி (216:8,9) என்று கண்ணகியை நற்றிணை குறிப்பிடுகிறது .
 ______________________________________
💙கண்ணகியை ஒற்றை முலையுடன், திருச்செங்குன்றம் குரவர்கள் கண்டு, சேரன் செங்குட்டுவனிடம் சொன்னதால், "ஒற்றை முலைச்சி" என்ற பெயரிலேயே கேரளத்தில் பல இடங்களில் மலைவாழ், பழங்குடி மக்கள் கண்ணகிக்கு பல கோவில்கள் கட்டி வணங்கினர்.

💜மலைவாழ், பழங்குடி மக்களை குறிவைத்து மதமாற்றத்தில் ஈடுபட்ட மிஷனரிகளுக்கு இந்த கோவில்கள் இடையூறாக தெரியவே, வரலாற்றை திரித்து, ஒற்றை முலைச்சி கோவில்களை அவமான சின்னங்களாக மாற்ற செய்த சூழ்ச்சியே நங்கேலி கதை.
 
💜முதலில் கட்டப்பட்ட கதை...  ஒரு தாழ்த்தப்பட்ட சமூக பெண் மேலாடை அணிந்ததால், கோபமுற்ற திருவாங்கூர் சமஸ்தான ராணி ஒருவர் அந்த பெண்ணின் ஒரு மார்பை அறுத்துவிட்டார். அந்த பெண்ணின் பெயர் "நாஞ்சிலி".  அவர் தான் இந்த "ஒற்றை முலைச்சி" என்று கதை புனையப்பட்டது.  
👉"நாஞ்சிலி" என்றால் கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் நாட்டு பெண் என்று பொருள். இந்த கதை திருவாங்கூர் மிஷனரிகளால் அவிழ்த்து விடப்பட்டது. ஆனால் திருவாங்கூர் அரச குடும்பத்தின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த கேரள மக்கள்  இந்த கதையை  ஏற்றுக்கொள்ளவில்லை.  

❤️பின்பு..... அந்த கதை மாற்றி எழுதப்பட்டு, திருநெல்வேலி மிஷனரிகளால் தமிழர்களிடம் அவிழ்த்து விடப்பட்டது. அந்த புது கதை...  திருவாங்கூர் மன்னர் ஒருவர் பெண்களின் மார்புக்கு வரி விதித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பெண் மார்பை அறுத்துக் கொண்டாள் என்பது. அந்த பெண் இறந்த இடம் தான் முலைச்சி பறம்பு என்றார்கள்.  
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥முலைச்சி பறம்பு என்றால் என்ன?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥வில்வமங்கலம் சாமியார்... பத்மநாப சுவாமியை தரிசித்துவிட்டு வரும் வழியில்,  7 பெண்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைக் கண்டதாகவும்... அதில் ஒரு பெண், தவறி சேற்றில் விழுந்து சேறு பூசிய தலையுடன் வர... அந்த பெண் கார்த்தியாயணி தேவி  என்று அவர் உணர்ந்து கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அதனால் அந்த இடம், "சேர்தலை  முலைச்சி பறம்பு" (சேரு பூசிய தலையை உடைய பெண்ணின் நிலம்; முலைச்சி என்றால் பெண்) என்று வழங்கப்பட்டது.
மிஷனரிகள் முலைச்சி பறம்பு என்பது முலைஅறுத்த பெண்ணின் ஊர் என்று கதையை மாற்றினர்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஆனால் அந்த முலை அறுத்த பெண்ணுக்கு முதலில் அவர்கள் வைத்திருந்த பெயரோ "நாஞ்சிலி". ஆலப்புழா மாவட்டம் "சேர்தலை முலைச்சி பறம்பில்", எப்படி கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாட்டு நாஞ்சிலியை நுழைக்க முடியும்? எனவே  "நாஞ்சிலியை"... "நங்கேலி" ஆக்கினர். 
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
💙கேரள மக்களிடம் கன்னியாகுமரியில் நடந்ததாகவும், தமிழக மக்களிடம் ஆலப்புழாவில் நடந்ததாகவும் கூறப்பட்ட கதை இது.

❤️சரி...நங்கேலிக்கு எப்படி உருவம் கொடுப்பது?🙄
👉கண்ணகி சிலை சில இடங்களில் கையில் சிலம்புடனும்,  சில இடங்களில் கையில் அறுத்த ஒரு முலையுடனும் காணப்படும். 

❤️நம்ம மிஷனரிகள் இந்த இரண்டையும் இணைத்து..., ஒரு கையில் சிலம்புக்கு பதில் அரிவாளை கொடுத்து, மறு கையில் அறுத்த ஒரு முலையை கொடுத்து ஒரு உருவத்தை வடிவமைத்தனர். 

💥ஆனால் இந்த கதையை வைத்துக்கொண்டு "ஒற்றை முலைச்சி"  கோவில்களை, நங்கேலி கோவில்களாக அவர்களால் மாற்ற முடியவில்லை. ஏனெனில் ஒற்றை முலைச்சி கோவில்கள் எல்லாம் பகவதி அம்மன் கோவில்களாக மாறின.

💙ஆயினும் நங்கேலி கதை  மதமாற்ற-மிஷனரிகளால் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இந்த நங்கேலி 1803ல் இறந்தாகவும், மறுநாளே முலைவரி நீக்கப்பட்டதாகவும் சமீபத்திய மிஷனரிகள் புரட்டு.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
💙1803ல் திருவாங்கூரை ஆண்ட ராஜா 16 வயது சிறுவன் பாலவர்மா குலசேகர பெருமாள்.  இவரை பொம்மை அரசராக வைத்துவிட்டு 11 ஆண்டுகள் ஊழல், கொடுங்கோல்  ஆட்சி செய்து வரிப்பணத்தில் பெரும் பங்கை சுருட்டியவர் வெள்ளைக்கார ஜெனரல் கொலின் மெக்காலே.

💥இதை எதிர்த்து குரல் எழுப்பிய ஜெயந்தன் சங்கரன், மட்து தரக்கன், சங்கர நாராயணன் ஆகிய 3 அமைச்சர்கள் பொய் குற்றம் சாட்டப்பட்டு பொது இடத்தில் சவுக்கால் அடித்து, காதுகள் அறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

💥மெக்காலேவின் ஊழலை தட்டிக்கேட்ட அமைச்சர் குஞ்சுநிலம் பிள்ளை, பொய் கொலை குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார். 

💥மெக்காலேவின் ஊழலை  வெளிப்படுத்திய செண்பகராமன் பிள்ளை, எராயிமான் பிள்ளை என்ற இரண்டு முன்னாள் திவான் கேசவதாஸின் உறவினர்களும் பொய் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டனர். 

💥கொலின் மெக்காலேவால்  நியமிக்கப்பட்டு, அவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்த திவான் வேலுத்தம்பியே மெக்காலேவின் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல், ஒரு கட்டத்தில் மெக்காலேவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக  கிளர்ந்தெழுந்ததால், 1809ல் அவரும் கொல்லப்பட்டார்.

💥மெக்காலேவின் அட்டகாசத்தை பிரிட்டிஷ் தலைமைக்கு தெரியப்படுத்திய ராஜா பாலவர்மாவும் 1810ல் கொல்லப்பட்டார்

😞ஊழல் பணத்தை மதமாற்றத்துக்கு அள்ளிக் கொடுத்தும், மதமாறியவர்களுக்கு மட்டும் வரிச்சலுகையும், ஞாயிறு விடுமுறையும் கொடுத்து, இந்துக்கள் கோவில் திருவிழா கொண்டாடக் கூட திருவிழா வரி போட்ட  இந்த கொலின் மெக்காலேவை தான் மிஷனரிகள் சீர்திருத்தவாதி என்று கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...