Monday, 29 June 2020

ஆவி பிடித்தல்

*ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம்  கொடுத்துள்ளார்கள். அதிலும் கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தல். (இன்று நேச்சரோபதி என்று  ஸ்டீம் பாத் என்று நவீன படுத்தி இருக்கிறார்கள் .)*

*போர்வையால் மூடி அந்த ஆவியை நாசியில் உள்ளே மெதுவாக விட நுரையீரலில் புகும் ஆவி கிருமிகளை அழிக்கும் உடனே வியர்வையாக வெளியேற்றும். அந்த ஆவி பிடித்த போர்வையை வேர்வையை தோடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்த கூடாது.*

*கொரானாவிற்கு தடுப்பு ஊசி மருந்து தேடுகிறார்கள். கொரானா சூடான ஆவியில் தான் மடியும். ஆவி பிடித்தல் கொரானாவை கொல்லும் ஆயுதம். இதை அனைவரும் சோதனை செய்து பாருங்கள்.  வெற்றி நிச்சயம்.*

*கொரானாவை நிச்சயமாக கொல்லும் செய்முறை (எளிமைமான)*

*தண்ணீருடன் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி இது போதும்.*

*தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆவி நன்கு வரும்போது  இறக்கி வைத்து பாதுகாப்பாக அமர்ந்து ஆவியை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும் ஒரு ஏழு  முறை பிடிக்க வேண்டும்.*

*ஆர்வ கோலாறில் அதிக நேரம் பிடிக்க கூடாது. உங்களால் தாங்க முடிந்த அளவு பிடியுங்கள்.* 

*எப்படி...???*

*கொரானா கிருமி  கபத்தை கூட்டுகிறது.* *அதாவது  உடலில் இருக்கும் தண்ணீரை சளியாக மாற்றுகிறது.* *கொரானா கிருமியால் வெகு வேகமாக நுரையீரல் முழுவதும் சளி பரவுகிறது. இங்குதான் உயிர் போகும் ஒரு பிரச்சனை வருகிறது.*

*நாசி வழியே  உள்ளே நுரையீரலுக்கு போக வேண்டிய பிராணன் உள்ளே போக முடியவில்லை..*

*நுரையீரலுக்கு உள்ளே கழிவுகளாக வெளியேற வேண்டிய கரியமில வாயு அதை வெளியேற்ற முடியவில்லை. மூளைக்கும் உறுப்புகளுக்கும் பிராணன் தேவை. அது தடை படுகிறது*

*இதற்கு தான் செயற்கை சுவாசம் கொடுக்க தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்கிறார்கள்.  உள்ளே இருக்கும் சளியை அழிப்பதுதான் மருத்துவம்.*


*எளிமையான விளக்கம்*
                         *ஒரு தண்ணீரை குளிர் பெட்டியில் வைக்க அது ஐஸ் கட்டி ஆகிறது. வெளியே எடுத்தால் உருகி ஓடுகிறது. இப்ப புரிந்துகொள்ளுங்கள். கொரோனா என்பது குளிர்விக்கும் ஒரு நோய். அதற்கு எதிரி வெப்ப படுத்துதல். அவ்வளவு தான். கொரானா  காலி*

*இந்த ஆவி பிடித்தலில் மஞ்சள், எலுமிச்சை, துளசி, இஞ்சி, இவைகளின் ஆவி கிருமி நாசினி.* *சாதாரணமாக ஆவி பிடித்தாலே சளி கரையும். துப்பாக்கியில்  ஒரு தோட்டா வைத்து சுடுவது போல,*
             *ஆவியில் கிருமி நாசினியான எலுமிச்சை, மிளகு போன்றவை கிருமிகளை அழிக்கும். ஆவி சூடுபடுத்தி  சளியை கரைத்து வெளியேற்றும்.*

*இதை செய்யும் போது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.  தினமும்  காலையில் அனைவரும் செய்யவும்.*

*கொரானாவின் முக்கிய குறிப்பு:-*
*************************************

*(1)உடலை குளிர்விக்கும் பொருளை உண்ணக்கூடாது.*
*உதாரணம் - ஐஸ், தண்ணீர், பழங்கள்.*

*(2)உடலை குளிர்விக்கும் பயிற்சிகளை செய்ய கூடாது.*
*உதாரணம் -  தியானம் ஆழ் நிலை தியானம்.*

*(3)உடற் பயிற்சி  சிறந்த மருத்துவம் கோரானாவிற்கு.*

*(4)வெயிலில்  நடக்க வேண்டும்.*

*(5)அதிகாலையில் குளிக்க கூடாது.*

*(6)இரவில் குளிக்க  கூடாது.*

*(7)நடத்தல்( வீட்டிலேயே) ஜிம் பயிற்சி..*
*புல்லப்ஸ் சிறந்த பயிற்சி  நுரையீரல் காப்புக்கு*

*கொரானா  ஆங்கில மருந்துக்கு*
*கட்டுப்படாது. அதன் வீரியம்  அப்படி.*

*மூலிகை வழி, பயிற்சி வழி, சுவாச பயிற்சி வழி, உணவு  வழியில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.*
*நம்மை சரி பண்ண  வேறு யாரும் வர முடியாது தற்சமயம்.*

*நமக்கு நாமே உதவி நாமே கொல்வோம் கோரானாவை...*

*அனைவரும் கண்டிப்பாக  இதை செய்யுங்கள்....*

*பலன் நிச்சயம்...*

*நவீன மருத்துவம், மருத்துவ மனைகள், ஸ்டீம் பாத் வழியை தேடலாம்....*

*அனைவரும் ஆவி பிடியுங்கள்.*

*அதிகம் தூங்காதீர்கள்,*
*பகலில் தூங்காதீர்கள்,*
*அதிகம் உண்ணாதீர்கள்,*
*அது உடலை குளிர்வித்து கபத்தை கூட்டி வாயுவை உற்பத்தி செய்துவிடும்.*

*அவசியம் share செய்யுங்கள்......*

Thursday, 25 June 2020

உமிழ்நீர் அது உயிர்நீர்..!!!!!



●●விழிப்புணர்வுபதிவு...

◆ 108 வியாதிகளுக்கும் ஒரே மருந்து....
◆ அதுவே, உமிழ் நீர், உயிர் நீர் !

சர்க்கரை நோய்க்கான எளிய, இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே இருக்கு !
உமிழ் நீராக இருக்கு !

◆ சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் என்ன சம்பந்தம்?.....

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் 
சுரக்கத்தூண்டுகிறது !...

உமிழ் நீர் எனும் இயற்கை மருந்தை, 
நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே, அதிக அளவு 
எடுத்துக் கொண்டனர் !...

வாழ்வதற்காக  உண்டனர்!.... உண்பதற்காக வாழ்ந்தனர் !....

அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் 
உணவு உண்டனர் !
அதனால்,....
அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது...

கூடுதலாக உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச் 
சிறிதளவு எடுத்துக் கொண்டனர்...
நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்...
உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் வராது.

◆ "தூண்டல், துலங்கல்" என்ற விதியின்படி, உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !.

● நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு, 
வேலை பார்த்தனர்.

◆ தற்காலத்தில், நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை 
பார்க்கிறோம்..

அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்துவிட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

◆ உணவை ரசித்து, ருசித்து, மென்று,
உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு, லபக் லபக்
என்று, விழுங்குகிறோம். நாம் விழுங்கும் உணவில், உமிழ் நீர் கலக்க வாய்ப்பு இல்லாததால், நாம் உண்ணும் உணவுக்கு தேவையான இன்சுலின்,
கணையத்தில் சுரக்காது.

எனவே,....
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் 
தங்கிவிடுகிறது. நாளடைவில்,
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், 
நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.

◆ சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

எனவே, நாம் சாப்பிடும்போது, உணவை
மெதுவாக மென்று, ரசித்து, ருசித்து,
சாப்பிட வேண்டும். அப்போது, 
இயற்கையாக உமிழ்நீர் சுரக்கும்.

கூடுதலாக, உணவு செரிமானமும்
சிறப்பாக நடக்கும். ஜீரணக் கோளாறு
என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

●நோயற்ற வாழ்வு வாழலாம்....

குடிநீர்,
குளிர் பானம்,
கூழ்,
சூப், 
தேநீர் 
அருந்தினால் கூட,  உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள் போகிறபடி, மெதுவாக
ரசித்து, ருசித்து, அனுப்ப வேண்டும்.

●நீரிழிவு நோய் எனும் தற்கால
கொடிய நோயை,  'உமிழ்நீர்' எனும் அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து, 
ஒழிப்போம்.

"நொறுங்கத் தின்றால், நூறு வயசு..." என்று, நம் முன்னோர்கள் சொன்னார்கள்...

Veg / Non - Veg எந்த வகை உணவானாலும், கூழ், தேநீர், சூப் போன்ற எந்த உணவானாலும்...

1. பசித்த பின் சாப்பிட வேண்டும்.
2. ரசித்து சாப்பிட வேண்டும்.
3. உமிழ் நீர் சுரக்கிறபடி மென்று, ருசித்து,
சாப்பிட வேண்டும்.

●●108 வியாதிகளுக்கும் இதுவே
மருந்தென்றால், மிகை அல்ல !!!!!!!●●

Tuesday, 23 June 2020

Trance - திரைப்படம்



21 ம் நூற்றாண்டின் மிகப்பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்று நூற்றுக்கணக்கான பெந்தகோஸ்தே சபைகள் மூலமாக கோடிக்கணக்கான கோடி டாலர்கள் இறைக்கப்பட்டு இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்படும் யேசு வியாபாரம். 

பெரு நகரங்களில் தொடங்கி இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் ஆசிர்வாத பெருவிழா, எழுப்புதல் விழா, சுவிசேஷ பெருவிழா என பலவிதமான பெயர்களில் அரங்கேறிவரும் அராஜகத்தை தட்டி கேட்க யாருமே துணியவில்லை. கருத்து சுதந்திரம் குறித்து பேசும் எந்த ஊடகவியலாளரோ, படைப்பு சுதந்திரம் குறித்து பேசும் எந்த சினிமா இயக்குனரோ, இந்த மாபெரும் அராஜகத்தை குறித்து வாய் திறப்பதே இல்லை.  ஆனால் சமீபத்தில் வெளியான ஒரே ஒரு திரைப்படம் அந்த குறையை தீர்த்து விட்டது.  அதுதான் Trance எனும் மலையாள திரைப்படம். எனினும் துரதிஷ்டவசமாக கொரானா பிரச்சனையால் இந்த படம் குறித்து இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை.

அச்சு அசல் ஒரு சுவிசேஷக் கூட்டத்தின் பின்னனியில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறதோ, அதை அப்படியே படம் பிடித்து காட்டி உள்ளது Trance. படம் பார்க்கையில் ஒருவேளை ஒரு உண்மையான பெந்தகோஸ்தே கூட்டத்தில் அவர்களுக்கு தெரியாமல் கேமரா வைத்து படத்தை எடுத்து விட்டார்களோ என அடியேனுக்கு தோன்றியது. இந்த படத்தில் யாருமே நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கதாநாயகன் ஃபஹத் ஃபைசல் (பேங்களூர் டேஸ் புகழ்) பின்னி எடுத்திருக்கிறார். மக்களை சுவிசேஷக் கூட்டங்களில் எப்படி பாஸ்டர்கள் தூண்டி, உணர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போய் அடிமைகள் ஆக்கிறார்கள் என மிகச்சிறப்பாக தன் அசாத்திய நடிப்பின் மூலமாக சித்தரித்துள்ளார். (பல ஆயிரம் கோடி சம்பாதித்து விட்ட சுவிசேஷ பேச்சாளர் 'பென்னி ஹின்' ஐ நினைவு படுத்துகிறார்)

கன்னியாக்குமரியில் தன்னம்பிக்கை பேச்சாளராக இருக்கும் விஜு பிரசாதோடு (ஃபஹத்) பயனிக்கிறது திரைப்படம். சிறு வயதிலேயே தாய் தற்கொலை செய்து கொள்ள, தம்பியோடு வாழ்கிறார். தாயின் தற்கொலையால் மனம் பாதிக்கப்பட்ட தம்பியும் தற்கொலை செய்துக் கொள்ள, மனமுடைந்து பம்பாய் செல்கிறார். வறுமையின் பிடியில் இருக்கும் அவரை அங்குதான் அகில உலக இவாண்ஜிலிஸ்ட் குழுக்கள் தொடர்பு கொள்கிறது. சிறந்த மோட்டிவேஷனல் பேச்சாளரான அவரை ஒரு பாஸ்டராக தேர்ந்தெடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.  தங்களிடம் அனைவரை குறித்த தகவல்களும் உள்ளது என்றும் நாதியற்று இருக்கும் விஜு பிரசாத்தின் பின்னனி தங்களுக்கு நன்கு தெரியும் என்று சொல்கிறது அந்த குழு. 

இதுவரை இறை மறுப்பாளராக இருந்த விஜு பிரசாத் பாஸ்டராக மாறி மிகப்பெரும் பணம், புகழ் அந்தஸ்து என மாறுகிறார். அதன் பின் அவரை வளர்த்து விட்ட இவாண்ஜிலிஸ்டு குழுக்களுக்கு அடிமையாக இருக்க விரும்பாமல் சுய முடிவுகளை எடுக்கிறார் விஜு பிரசாத். இவர்களுக்குள் நடக்கும் மோதல்தான் பிற்பாதி கதை.

எப்படி மக்களின் உணர்வுகளை வைத்து சம்பாதிக்கிறார்கள். எப்படி நுட்பமாக திட்ட்மிடுகிறார்கள். எப்படியெல்லாம் நாடகங்களை நிகழ்த்துகிறார்க்ள். எப்படி மக்களை ஆட்டு மந்தைகளாக மாற்றுகிறார்கள் என உண்மை நிலையை அக்கு அக்காக உரித்துப் போட்டுள்ளது இந்த படம்.

எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லை, மத துவேஷம் இல்லை. ஒரு உண்மையை, உலகுக்கு எடுத்து சொல்லும் ஒரு படைப்பாளியின் துணிவு மட்டுமே படத்தில் பார்க்க முடிகிறது. நூற்றுக்கணக்கான இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து எடுத்திருந்தால் கூட இப்படி ஒரு நிஜத்தை நிதர்சனமாக தோலுரித்து போட்டிருக்க இயலுமா என்பது சந்தேகம்தான்.

படத்தில் கிறிஸ்தவர்கள் பலரும் பணியாற்றி இருப்பதுதான் ஹைலைட். சொல்லப்போனால் இது கிறிஸ்தவத்திற்கு எதிரான படம் அல்ல.  கிறிஸ்தவத்தையும் யேசுவையும் வைத்து மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் எவாண்ஜிலிஸ்டுகள், அற்புதங்களை நிகழ்த்துவதாக ஏமாற்றும் தீர்கதரிசிகள், போலி யேசு ஏஜண்டுகள் என அத்தனை பேரையும் உரித்துப் போடும் படம். சொல்லப் போனால் இந்த படத்தை கிறிஸ்தவர்கள்தான் அதிகம் பார்க்க வேண்டும். இயக்குனர் அன்வர் ரஷீதிற்கு இருகரம் கூப்பிய நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.  (ரசூல் பூக்குட்டியின் பின்னனி இசையும் அருமை). இன்னும் பிரபலமான மனோத்தத்துவ மற்றும் மனோவசிய யுக்திகளை எப்படி பெந்தகோஸ்தே சபையினர் கையாள்கிறார்கள் என்பதையும் காட்டியிருக்கலாம். 

நண்பர்களே, இந்த படத்தை அமேஜான் பிரைமில் நீங்கள் பார்க்காவிட்டால் மிகப்பெரும் துரோகத்தை செய்தவராவீர்.  பார்த்துவிட்டு பலரையும் பார்க்கச் சொல்லுங்கள். இந்த படத்தை எப்படியாவது தமிழில் குறைந்தபட்சம் டப்பிங் செய்து வெளியிட இந்து அமைப்பினர் முயற்சிகள் எடுக்க வேண்டும். அடியேனும் இயன்ற முயற்சிகளை எடுக்க உள்ளேன்.

(எப்படி மிகப்பெரும் அல்லேலூயா நெட்வர்க்குகளை மீறி இந்த படம் வெளிவந்தது என்பதே அடியேனுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. விசாரித்ததில் முதலில் 17 நிமிடம் படம் வெட்டப்பட வேண்டும் என்று மாநில சென்சார் போர்டு நிர்பந்திக்க, மறு ஆய்வுக்கு மும்பைக்கு அனுப்பி கட் இல்லாமல் படத்தை வெளியிட்டு சாதித்துள்ளாராம் இயக்குநர்)

இப்படத்தை பார்க்குமாறு கடந்த இரண்டு மாதமாக பலர் இன்பாக்ஸில் கூறி வந்தனர். நண்பர் Sugumaran Uppili ஒரு கட்டம் அதிகமாகப் போய் அமேஜான் பிரைமில் உள்ள தன் கணக்கு விவரங்களை வழங்கி பார்க்கவே வைத்து விட்டார். அவருக்கு நன்றிகள் பல !!

மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து இந்த படத்தை காசு கொடுத்து அமேஜான் பிரைமில் பார்த்து விடுங்கள். மற்றவர்களையும் பார்க்க வையுங்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

1962 - குமோன் ரெஜிமென்ட் - ஷைதான் சிங்




இப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ள 1962 இல் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவத்திற்கு தோல்வி கிடைத்தது. சீன ராணுவம் வெற்றி பெற்றது. அதில் எனக்கு எவ்விதமான குழப்பமோ மழுப்பலோ இல்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை

1962 போரில் லடாக்கில் உள்ள ரேசங் லா என்னுமிடத்தை குமாஒன் ரெஜிமென்ட்டை சேர்ந்த (சார்லி கம்பெனி படைப்பிரிவு) வீரர்கள் 120 பேர் Major Shaitan Singh Bhati, தலைமையில் காவல் காத்திருந்தனர். (அவரையும் சேர்த்து இந்திய தரப்பில் மொத்தமே 121 பேர்)(M)
........
சீனப்படை பெரிய அளவிலான ஆயுதங்கள் (7.62 mm self-loading rifles; MMG’s and LMG’s; 120 mm, 81 mm and 60 mm mortars; 132 mm rockets; and 75 mm and 57 mm recoil less guns to bust bunkers, tanks, and cannons loaded on jeeps) கொண்டு இந்திய நிலையை தாக்கி ரேசங் லாவை கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருந்தனர்(u).
..........
5000 சீன வீரர்கள் ஆர்ட்டில்லரி மற்றும் பெரிய மெசின் துப்பாக்கிகளுடன் அலை அலையாய் அந்த போஸ்டைதாக்க தொடங்கினர்.(r)
...
மேஜர் சைதன் சிங் இராணுவத்திடம் மேலதிக படைகளை அனுப்ப கோரினார் மேலும் துப்பாக்கிக்கு தோட்டாக்கள் வழங்க கோரினார்.அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை பின்வாங்க சொல்லியது இராணுவ தலைமையகம் . ஏனென்றால் இது நமது படை வெல்ல வாய்ப்பில்லாத போராக ராணுவ தலைமையகத்தால் கணிக்கப்பட்டிருந்தது .(ஆயுத ஸ்டாக்கும் நம்மிடையே இல்லை)(a)
....
ஆனால் மேஜர் மறுத்தார்.இத்தனை வருடங்கள் எதைப் பாதுகாக்க இங்கு இருந்தோமோ அதைக் காப்பாற்றாமல் இங்கிருந்து வரமாட்டோம்... எங்களுக்கு உணவளித்த ரேசங் லாவை எதிரிகள் கைப்பற்ற விடமாட்டோம் என தலைமையகத்திற்கும் .தனது சக வீரர்களிடமும் கூறினார்.அதற்கு அவர்கள் Rezang la has served us food for years and now it is time for us to protect it, Sher sahab we too would stand firm with you and fight to protect Rezang la” எனப் பதிலளித்தனர்.(l)
........
பெரும் அலையாய் திரண்டு வந்த சீ்னர்களை எதிர்க்க தயாரானது நமது சிறு படை.. Major Shaitan Singh Bhati, தனது வீரர்களிடம் யாரும் சீனர்களை தொலைவில் வரும் போது தாக்க வேண்டாம்.அவர்கள் பக்கத்தில் வரும் போது தாக்குங்கள் அப்போது தான் தோட்டாக்கள் வீணாகாமல் சீனர்களை தாக்க முடியும் என்றார்.(i)
........
நம் வீரர்களிடம் ஆர்ட்டில்லரி உதவி இல்லை....அவ்வளவு ஏன் ? சொல்லிக்கொள்ளும் படி ஒரு மெசின் துப்பாக்கி கூட இல்லை....சில துப்பாக்கிகள் மற்றும் சிறிய வகை மெசின் கன் உதவியுடன் சீனப் படையை எதிர்க்க தொடங்கினர்.(d)
.........
முதல் அலை சீன வீரர்களை நம்மவர்கள் எதிர்த்து நின்று போராடினர்... சீனாவிற்கு இழப்பு. சீனர்கள் குழம்பினார்கள்... தங்களது கணிப்பு தவறாகிப்போனது எனவும்,கிட்டத்தட்ட 5000 இந்திய வீரர்கள் இருப்பது போல தெரிகிறது என தலைமையிடத்தில் புலம்பினார்கள்....மீண்டும் மேலதிகப் படை மற்றும் ஆயுதங்களுடன் தாக்கினர்.(h)
.........
இரண்டாவது அலையாக அடுத்த குழு தாக்க தொடங்கியது.இப்போதும் அவர்களுக்கு இழப்பு (a)
.........
மூன்றாவது குழு இந்திய போஸ்டை தாக்க தொடங்கிய போது இந்திய வீரர்களிடம் இருந்த தோட்டாக்கள் ammunitation சுத்தமாக தீர்ந்து போய் இருந்தது .(r). ..
........
வேறு வழியில்லாமல் பின்னர் வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்க தொடங்கினர்... ஹரியாணாவைச்  சேர்ந்த ராம் சிங் மற்றும் குலாப் சிங் ஆகிய இரு வீரர்களிடம் தோட்டாக்கள் முடிவடைந்திருந்தது.கையில் இருந்த கத்தியை எடுத்து சீனர்களை வெறும் கைகளால் தாக்க தொடங்கினர்.சீனர்களின் தொண்டைகள் கிழிக்கப்பட்டன.(b)
.....
நமது சிறு படையினர் இந்த ரேசங் லா போரில் கிட்டத்தட்ட 1300 சீன வீரர்களை கொன்று குவித்தனர்.
......
நம் 120 வீரர்களில் 114 வீரர்கள் யுத்தத்தில் வீரமரணம் அடைந்தனர்... ஐந்து பேர் காயங்களுடன் (துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்த்திருந்த காரணத்தால்) சீனர்களால் POW போர்க் கைதிகளாக பிடிபட்டனர்..(a)
...
(சில நாட்களிலேயே சீனர்களின் சிறையிலிருந்து இந்த வீரர்களும் துணிச்சலாக தப்பித்து இந்தியாவிற்கு ஓடி வந்தது ஒரு தனி சாகச வரலாறு).
...
ஒரே ஒரு காயமடைந்த வீரரை மட்டும் நடந்ததை போய் ராணுவத் தலைமையிடம் சொல்லு என்று முக்கால் வாசி யுத்தம் முடிந்த இறுதிக்கட்டத்தில் Major Shaitan Singh Bhati திருப்பி அனுப்பியிருந்தார்.(b)
.........
போரில் தலைமை தாங்கிய வீரர் Major Shaitan Singh Bhati அவர்களின் உடல் தோட்டாக்கள் துளைத்து உயிரற்று கிடந்தது.அவர் சீன வீரர் ஒருவரின் இயந்திரத் துப்பாக்கியை பறித்து சீனர்களை நோக்கி சுட்டுகொண்டிருந்தார். அவர் உடலிலிருந்து உயிர் பிரிந்த நிலையிலும் துப்பாக்கி ட்ரிகரை அழுத்திய படியே பிணமாக கிடந்தார்..(u).
......
அந்த 121 வீரர்களால் தான் இன்றளவும் லடாக் இந்தியாவில் உள்ளது....
....
நம்மிடம் போதிய ஆயுதம் இல்லை நாம் வீழ்வோம்,நாம் கொல்லப்படுவோம் என்ற எந்த பயமும் இன்றி மோதிப்பார்ப்போம் என நெஞ்சை நிமிர்த்தி நின்றார்களே அவர்கள் தான் இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள்.
...........
இதையல்லவா நாம் பள்ளிகளில் பாடப் புத்தகத்தில் கற்றிருக்க வேண்டும்.? போரில் வென்ற வெளிநாட்டவர்கள் பற்றி படிக்கிறோமே தவிர நாட்டுக்காக உயிரை துறந்த நமது வீரர்களின் வீரங்கள் பற்றி நமது குழந்தைகளு்க்கு சொல்லிக் கொடுப்பதில்லை.. 
...
ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய பெயர் மேஜர் சைதன் சிங்கின் பெயராகும். ஆனால் அநேக தமிழ் பேசும் இந்தியர்களுக்கு இவர் பெயர் தெரியவில்லை என்பது தான் (எனக்கு) வருத்தமான விஷயம் 
.........
இன்று நம் நாட்டில் பல பேர் கூறுவது என்ன??
...........
சீனர்கள் நிறைய ஆயுதம் வைத்துள்ளனர்.நாம் போரிட்டால் நமக்கு இழப்பு தான் என எதிர்மறையாக பேசுகின்றர்.அன்றும் இதே கதை தானே . .அந்த வீரர்கள் பின்வாங்கியிருந்தால் இன்று லடாக் சீனர்கள் வசம் தானே..??
...
அவன் மிக அதிகமாக ஆயுதம் வைத்திருக்கிறான் என தெரிந்தும் வெறும் கைகளால் போரிட்டு நம்மை நாட்டை காப்பாற்றியிருக்கிறார்கள் தானே ???.
.......
இப்பதிவின் மூலம் நான் சொல்லிக்கொள்ள விழைவது "இது ஒன்றும் 1962 இல் இருந்த இந்தியா அல்ல" அதைவிட பன்மடங்கு வலிமை வாய்ந்த இந்தியா  . 
........
பின்குறிப்பு 1: போரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக கம்பெனி கமாண்டர் Major Shaitan Singh Bhati அவர்களுக்கு பரம் வீர் சக்ரா posthumous ஆக வழங்கப்பட்டது.
......
பின்குறிப்பு 2: ஃபேஸ் புக்கில் தமிழ் சினிமா நடிகன்ஸ் அண்ட் நடிகைஸ்களை பற்றியே துதி பாடும் சினிமா பைத்தியம் பிடித்த என் இனிய தமிழ் மாக்களுக்கு உண்மையான வீரம் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை தான்.
.....
பின்குறிப்பு 3 என் அருமை தமிழ் மக்களே..LEARN TO RESPECT REAL HEROES INSTEAD OF ADORING AND GLORIFYING REEL HEROES. நாடு உருப்படும்.

கல்வான் - இந்திய ராணுவத்தின் பதிலடி

இதன் உண்மைத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.  ஆனால் நமது ராணுவ பதிலடி கொடுத்தது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்திய ராணுவம் ஆக்ரோஷமாக துணிந்து தாக்குகிறது.  பதினோரு மணிவரை நடந்த இந்த சண்டையில் இரு பக்கமும் பலத்த சேதம்.  கர்னல் பாபுவின் சடலத்தையும் மற்றும் வீரமரணமடைந்த வீரர்களின் சடலத்தையும் தூக்கிக் கொண்டு இந்திய ராணுவம் தனது கூடாரத்திற்கு செல்கிறது.

கர்னல் பாபு தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சிப்பிழம்பில் இருந்தனர் பீகார் ரெஜிமென்ட் வீரர்கள்.  

10-12 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்தனர்.  சீன எல்லைக்குள் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் வரை உள்ளே ஊடுருவிச் சென்றனர்.  அப்போது நடந்தது தான் மிகவும் ஆக்ரோஷமான சண்டை.  திடீரென்று இந்திய ராணுவத்தின்  கட்டக் வீரர்களும் (Ghatak platoons) இணைகிறார்கள்.  கட்டக் வீரர்கள் அதிபயங்கரமாக சண்டையிட கூடியவர்கள். இரண்டு குழுக்களும் இணைந்து நடத்திய தாக்குதல் ராணுவ வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமானது என்று செய்தியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (The jawans of 16 Bihar were reportedly joined by the 'Ghatak' troops. Together, they "unleashed a reign of terror, unheard in modern military history", the report said)

சீன எல்லையின் உள்ளே இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரையில் பல இடங்களில் சண்டை நடந்தது.  இது ஒருவகையான தற்கொலைப்படை தாக்குதல் என்றுதான் சொல்லவேண்டும்.  சீன ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துகொண்டே இருந்தனர்.  இருந்தாலும் இந்திய வீரர்கள் தாக்குதலை நிறுத்தவே இல்லை.  

பீகார் ரெஜிமென்ட் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனியாளாக சண்டையிட்டு 30 சீனர்களை கொன்றதாக செய்திகள் கூறுகின்றன.  5 மணி நேரத்திற்கு மேல் இந்த சண்டை நீடித்தது.  மறுநாள் காலையில் சீனர்கள் இறந்தவர்களை பார்த்தபோது கதி கலங்கி நின்றனர்.

இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதல் அதிபயங்கரமாக இருந்ததால் பல சீன வீரர்களின் முகம் கூட தெரியாத அளவுக்கு உருக்குலைந்து இருந்தது; பலரது கழுத்து தனியாக தொங்கிக்கொண்டிருந்தது.  சொல்ல முடியாத அளவுக்கு பயங்கரமான தாக்குதல்.  குறைந்தபட்சம் 150-200 சீனர்கள் இறந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மருத்துவமனையில் பலரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.  

பீகார் ரெஜிமென்ட் நடத்திய மினி சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் பலியான சீனர்களின் எண்ணிக்கை 300க்கும் மேலே கூட இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அருகிலிருந்து பார்த்த சீன ராணுவ வீரன் ஒருவன் கூறினான், "எனக்கு பீகார் எங்கிருக்கிறது என்று தெரியாது; ஆனால் நான் இனிமேல் ராணுவத்தில் இருக்க மாட்டேன்" .

கர்னல் பாபு தாக்கப்பட்டதை கேட்டவுடன், பீகார் ரெஜிமென்டுக்கு, சீன எல்லைக்குள் நுழைந்து பதில்தாக்குதல் நடந்த வேண்டும் என்ற உத்தரவு, தில்லியிலிருந்து வந்ததாக தெரிகிறது.  

"இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் ..." என்று பாரதப் பிரதமர் மோடி அறிக்கை விடுகிறார்.  
வேறு யார் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ சீன ராணுவம் நன்கு புரிந்து கொண்டது.

கர்னல் சந்தோஷ் பாபுவின் மரணத்திற்கு பலியாக பலநூறு உயிர்களை எடுத்ததால் பீகார் ரெஜிமென்ட் வீரர்களின் கோபம் தணிந்துள்ளது.

ஆக்ரோஷமான தாக்குதலை நேரில் கண்ட சீனர்கள் கதி கலங்கிப் போய் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்போது எல்லையில் அமைதி.  மயான அமைதி.
இந்த உண்மை புரியாமல் இந்தியாவிற்குள் இருந்து கொண்டே இந்தியாவிற்கு எதிராகவும், இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராகவும் பேசும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது ???

- பத்மநாபன் நாகராஜன்

Irish slaves

Corporate Equality !
-------------------------

Through their NGOs and governments, Corporates push the idea that there is no difference based on race, religion, language, gender, etc., 

They actually mean it. 

Such differences affect their business profits.

________________________________________

By: Daniel Wissert

The Irish slave trade began when 30,000 Irish prisoners were sold as slaves to the New World. The King James I Proclamation of 1625 required Irish political prisoners be sent overseas and sold to English settlers in the West Indies. By the mid 1600s, the Irish were the main slaves sold to Antigua and Montserrat. At that time, 70% of the total population of Montserrat were Irish slaves.

Ireland quickly became the biggest source of human livestock for English merchants. The majority of the early slaves to the New World were actually white.

From 1641 to 1652, over 500,000 Irish were killed by the English and another 300,000 were sold as slaves. Ireland’s population fell from about 1,500,000 to 600,000 in one single decade. 

Families were ripped apart as the British did not allow Irish dads to take their wives and children with them across the Atlantic. 

This led to a helpless population of homeless women and children. Britain’s solution was to auction them off as well.

During the 1650s, over 100,000 Irish children between the ages of 10 and 14 were taken from their parents and sold as slaves in the West Indies, Virginia and New England. In this decade, 

52,000 Irish (mostly women and children) were sold to Barbados and Virginia. Another 30,000 Irish men and women were also transported and sold to the highest bidder. In 1656, Cromwell ordered that 2000 Irish children be taken to Jamaica and sold as slaves to English settlers.

Many people today will avoid calling the Irish slaves what they truly were: Slaves. They’ll come up with terms like “Indentured Servants” to describe what occurred to the Irish. However, in most cases from the 17th and 18th centuries, Irish slaves were nothing more than human cattle.

As an example, the African slave trade was just beginning during this same period. It is well recorded that African slaves, not tainted with the stain of the hated Catholic theology and more expensive to purchase, were often treated far better than their Irish counterparts.

African slaves were very expensive during the late 1600s (50 Sterling). Irish slaves came cheap (no more than 5 Sterling). If a planter whipped or branded or beat an Irish slave to death, it was never a crime. A death was a monetary setback, but far cheaper than killing a more expensive African. The English masters quickly began breeding the Irish women for both their own personal pleasure and for greater profit. Children of slaves were themselves slaves, which increased the size of the master’s free workforce. Even if an Irish woman somehow obtained her freedom, her kids would remain slaves of her master. Thus, Irish moms, even with this new found emancipation, would seldom abandon their kids and would remain in servitude.

In time, the English thought of a better way to use these women (in many cases, girls as young as 12) to increase their market share: The settlers began to breed Irish women and girls with African men to produce slaves with a distinct complexion. These new “mulatto” slaves brought a higher price than Irish livestock and, likewise, enabled the settlers to save money rather than purchase new African slaves. This practice of interbreeding Irish females with African men went on for several decades and was so widespread that, in 1681, legislation was passed “forbidding the practice of mating Irish slave women to African slave men for the purpose of producing slaves for sale.” In short, it was stopped only because it interfered with the profits of a large slave transport company.

England continued to ship tens of thousands of Irish slaves for more than a century. Records state that, after the 1798 Irish Rebellion, thousands of Irish slaves were sold to both America and Australia. There were horrible abuses of both African and Irish captives. One British ship even dumped 1,302 slaves into the Atlantic Ocean so that the crew would have plenty of food to eat.

There is little question that the Irish experienced the horrors of slavery as much (if not more in the 17th Century) as the Africans did. There is, also, very little question that those brown, tanned faces you witness in your travels to the West Indies are very likely a combination of African and Irish ancestry. In 1839, Britain finally decided on its own to end its participation in Satan’s highway to hell and stopped transporting slaves. While their decision did not stop pirates from doing what they desired, the new law slowly concluded THIS chapter of nightmarish Irish misery.

But, if anyone, black or white, believes that slavery was only an African experience, then they’ve got it completely wrong.
Irish slavery is a subject worth remembering, not erasing from our memories.


ஜெகன்னாதர் வரலாறு

ஸ்ரீ ஜகந்நாதர் தோன்றிய வரலாறு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு மேலுள்ள படத்திலிருக்கும் விக்ரஹங்களை பார்க்கும் தமிழக மக்களில் பெரும்பாலோர் கேட்கும் முதல் கேள்வி, “இவர்கள் யார்?” என்பதே. நமது வலது ஓரத்தில் கருமை நிறத்தில் இருப்பவர் முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஜகந்நாதர் (கிருஷ்ணர்) என்றும், இடது ஓரத்தில் இருப்பவர் ஸ்ரீ பலராமர் என்றும், நடுவில் இருப்பவர் அவர்களது சகோதரியான சுபத்ரை என்றும் விளக்கம் கொடுப்பது வழக்கம். “இவர்கள் ஏன் விசித்திரமாகத் தென்படுகின்றனர், இவர்களின் வரலாறு என்ன?” என்று கேட்கப்படும் அடுத்த கேள்விகளுக்கு இதோ இங்கு பதில்கள். இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள ஜகந்நாத பூரியில் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் வசித்துவருகிறார், ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரை (தேர் திருவிழா) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஜகந்நாதர் தனது சகோதரர் ஸ்ரீ பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரையுடன் பிரம்மாண்டமான ரதங்களில் பவனி வரும் கோலாகலமான விழாவே ரதயாத்திரை திருவிழா. ஜகந்நாத பூரியில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதரின் ஆலயம் இந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்று. ஸ்ரீ ஜகந்நாதர் இப்பூவுலகில் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம் புராணங்களில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

நீலமாதவரைக் காண விருப்பம் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒருமுறை பகவான் விஷ்ணுவின் பெரும் பக்தரான மன்னர் இந்திரத்யும்னரின் அரசவைக்கு விஜயம் செய்த விஷ்ணு பக்தரொருவர், நீலமாதவர் என்னும் வடிவிலிருந்த பகவானைப் பற்றிப் புகழ்ந்து பேசலானார். இதனால் மிகவும் கவரப்பட்ட மன்னர், பல்வேறு திசைகளுக்கு பிராமணர்களை அனுப்பி நீலமாதவரின் இருப்பிடத்தை அறிந்து வர கட்டளையிட்டார். அனைவரும் தோல்வியுடன் திரும்ப, சளைக்காமல் தேடி அலைந்த வித்யாபதி என்பவர், சபர இன மக்கள் வாழ்ந்து வந்த பகுதியை அடைந்து, விஸ்வாசு என்பவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார், விஸ்வாசு தனது மகளான லலிதாவை பிராமண விருந்தாளிக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்ய நியமித்தார். அங்கேயே சிலகாலம் தங்கிய வித்யாபதி, விஸ்வாசுவின் வேண்டுகோளின்படி லலிதாவை மணம் புரிந்தார். விஸ்வாசுவின் வீட்டில் வித்யாபதி தங்கியிருந்தபோது, விஸ்வாசுவின் நடவடிக்கைகளில் சில விசித்திரங்களை கவனித்தார். ஒவ்வோர் இரவும் விஸ்வாசு தனியே எங்கோ சென்று மறுநாள் மதியம் சந்தனம், கற்பூரம் மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணத்துடன் வீடு திரும்புவதை கண்டார். இதற்கான காரணத்தை தனது மனைவியிடம் வித்யாபதி விசாரிக்க, தனது தந்தை இரகசியமான இடத்தில் ஸ்ரீ நீலமாதவரை வழிபடச் செல்வதாக அவள் கூறினாள்.

வித்யாபதி நீலமாதவரைக் காணுதல் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அதை கேட்ட வித்யாபதி அளவற்ற மகிழ்ச்சியுற்றார். ஸ்ரீ நீலமாதவரை பற்றி எவரிடமும் கூறக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை, லலிதா, கணவனிடம் கூறியதன் மூலம் மீறினாள். நீலமாதவரை உடனடியாக காண வித்யாபதி ஆவலுற்றபோதிலும், லலிதாவின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப்பின், விஸ்வாசு, வித்யாபதியின் கண்களைக் கட்டியபடி ஸ்ரீ நீலமாதவரின் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றார். இருப்பினும், பாதையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, வித்யாபதி தனது மேலங்கியில் சிறிதளவு கடுகினை இரகசியமாக எடுத்து வந்தார். கட்டப்பட்ட கண்களுடன் சென்ற வித்யாபதி, வழியெங்கும் கடுகினைத் தூவியபடி நடந்தார். ஸ்ரீ நீலமாதவரின் கோயிலை அடைந்தவுடன் வித்யாபதியின் கண்களைக் கட்டியிருந்த துணியை விஸ்வாசு அகற்ற, விக்ரஹ உருவிலிருந்த நீலமாதவரின் அதிஅற்புதமான அழகை வித்யாபதி கண்டார், பேரானந்தத்தில் மூழ்கி பிரார்த்திக்க தொடங்கினார். 

காக்கைக்கும் முக்தி 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வித்யாபதி பிரார்த்தனை செய்த பின்னர், விஸ்வாசு அவரை அங்கேயே விட்டுவிட்டு மலர்களைச் சேகரிக்கச் சென்றார். அப்போது, பிரமிக்கச் செய்யும் ஓர் அற்புத காட்சியினை வித்யாபதி கண்டார்: அருகிலிருந்த மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த காகம் ஒன்று, கிளையிலிருந்து தவறி ஏரியில் விழுந்தது, உடனடியாக அக்காகம் நான்கு கைகளையுடைய வைகுண்ட ரூபத்தைப் பெற்று ஆன்மீக வானத்தை நோக்கிப் புறப்பட்டது. குளத்தில் விழுந்து இறந்த காக்கை கூட முக்தியடைந்து விட்டதைக் கண்ட வித்யாபதி, மரக்கிளையில் ஏறி தானும் அந்த ஏரியில் குதிக்கத் தயாரானான். அப்போது வானத்திலிருந்து ஓர் அசரிரீ, “வித்யாபதி! நீலமாதவரை நீ தரிசித்த விஷயத்தை மன்னர் இந்திரத்யும்னரிடம் உடனடியாக தெரிவிப்பாயாக” என்று கூறியது. வித்யாபதி மரக்கிளையில் இருந்து இறங்கி காத்திருக்க, விஸ்வாசு காட்டு மலர்களையும் வேர்களையும் எடுத்துக் கொண்டு விரைவில் திரும்பினார். பின்னர் நீலமாதவருக்கான தனது தினசரி வழிபாட்டைத் தொடங்கினார். அவ்வாறு வழிபட்டுக் கொண்டிருக்கையில், “வெகுகாலமாக நீ எமக்கு அர்ப்பணித்த காட்டு மலர்களையும் வேர்களையும் ஏற்றுக் கொண்டேன். தற்போது எனது பக்தனான மன்னன் இந்திரத்யும்னனின் இராஜபோக சேவையை ஏற்க விரும்புகிறேன்” என்று நீலமாதவர் கூறினார். 

இந்திரத்யும்னரின் ஏமாற்றம் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஸ்ரீ நீலமாதவரின் சேவை தனக்குக் கிடைக்காமல் போய்விடும் என்று விஸ்வாசு வருந்தினார். இருப்பினும், வித்யாபதியை மன்னரிடம் செல்ல அனுமதித்தார். உடனடியாக மன்னர் இந்திரத்யும்னரிடம் சென்ற வித்யாபதி, நீலமாதவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததைப் பற்றித் தெரிவித்தார். பெரும் பரவசமடைந்த அரசன், ஸ்ரீ நீலமாதவரை தரிசித்து அங்கேயே வாழ்நாள் முழுவதும் தங்கிவிடலாம் என்ற எண்ணத்துடன் பல்வேறு மக்களைக் கூட்டிக் கொண்டு காட்டிற்கு விரைந்தார். வித்யாபதி வழிநெடுக தூவிய சில கடுகு விதைகளிலிருந்து சிறு செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றை பின் தொடர்ந்த அனைவரும் ஸ்ரீ நீலமாதவரின் இருப்பிடத்தை அடைந்தனர். ஆனால், நீலமாதவரை அங்குக் காணவில்லை, மன்னருக்கு ஏமாற்றமே மிச்சமாக அமைந்தது. அப்பகுதி முழுவதும் மணலினால் மூடப்பட்டுவிட்டது. மன்னர் வருத்தமடைய,  “வருத்தப்படாதே! நீலமலையின் உச்சியில் நீ எனக்காக ஒரு கோயிலைக் கட்டுவாயாக. அங்கு பரம்பொருளாகிய நான் தாரு-பிரம்மனாக (மரத்தின் வடிவில்) தோன்றுவேன். இனி என்னை நீலமாதவராகக் காண இயலாது,” என்று ஓர் அசிரிரீயின் மூலம் பகவான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

கோவில் கட்டுமானம் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அரசர் இந்திரத்யும்னர் கோவில் கட்டுவதில் தீவிரமானார், பௌமலை என்ற இடத்திலிருந்து கற்களை கொண்டு வருவதற்காக, அங்கிருந்து நீல கந்தாரமலை வரை சாலை அமைத்தான். ஸ்ரீ க்ஷேத்திரம் அல்லது பூரி என்று அழைக்கப்பட்ட அந்த புனித ஸ்தலம் ஒரு சங்கின் வடிவில் அமைந்திருந்தது. அதன் மையப் பகுதியில், இராமகிருஷ்ணபுரம் என்ற நகரத்தை அமைத்த மன்னர், அங்கு ஜகந்நாதருக்கு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டினார். கோயிலின் உச்சியில் கலசமும் அதற்கு மேல் ஒரு சக்கரமும் அமையுமாறு கட்டினார். கோயிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார். பிரம்மதேவரே நேரில் வந்து மஹா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பிய அரசர் இந்திரத்யும்னர், பிரம்ம லோகம் வரை சென்று அவரை அழைத்து வந்தார்.

பிரம்மதேவரின் அருள் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பின்னர், இந்திரத்யும்னர் பிரம்ம தேவரிடம் உயர்ந்த முக்தியை நல்கும் ஸ்ரீ க்ஷேத்திரம் என்ற அப்பகுதியையும் கோயிலையும் புனிதப்படுத்த வேண்டினார். பிரம்மதேவரோ, பகவானின் அந்தரங்க சக்தியால் தோன்றியுள்ள இந்த ஸ்ரீ க்ஷேத்திரத்தில் பகவானே எழுந்தருளியிருக்கிறார் என்பதால், அவரை இங்கு ஸ்தாபிப்பது தனது சக்திக்கு உட்பட்டதல்ல என்று கூறினார். அக்கோயிலின் உச்சியில் ஒரு கொடியினை அமைத்த பிரம்மதேவர், அதனை ஒருவர் தூரத்திலிருந்து தரிசித்து தலை வணங்கினாலும் எளிமையாக முக்தி அடைவர் என்று ஆசிர்வதித்தார். பிரம்மதேவர் யாகம் ஒன்றினைச் செய்து ஸ்ரீ நரசிம்மதேவரின் விக்ரஹத்தை அங்கு முதலில் பிரதிஷ்டை செய்தார். தற்போது கோயில் இருக்கும் இடம் அந்த யாகம் நடந்த இடமே என்று கூறப்படுகிறது. கோயில் வளாகத்தில் இருக்கும் முக்தி மண்டபத்தின் மேற்கு புறத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி பிரம்மதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அதே நரசிம்ம மூர்த்தியாகும்.   

ஜகந்நாதரின் வரவு 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நீலமாதவரின் வரவிற்காகக் காத்திருந்த மன்னர் இந்திரத்யும்னர், அவரைக் காண இயலாததால், தனது வாழ்வே பயனற்றது என்று எண்ணி தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதன்மீது உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்க தீர்மானித்தார். அச்சமயம் அவரது கனவில் தோன்றிய பகவான், “அன்பான அரசனே! கவலைப்படாதே. பாங்கிமுஹான் என்ற இடத்தில் மரத்துண்டின் வடிவில் நான் கடலில் மிதந்தவாறு வருவேன்,” என்று கூறினார். மகிழ்ச்சியுற்ற மன்னர், தனது படைவீரர்களுடன் அவ்விடத்திற்குச் செல்ல, பெரிய மரத்துண்டு ஒன்று சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரைச் சின்னங்களுடன் கரையை வந்தடைந்தது. பலசாலி மனிதர்களாலும் யானைகளாலும்கூட அந்த தாரு-பிரம்மனை (மரத்தின் வடிவிலிருக்கும் முழுமுதற் கடவுளை) சற்றும் அசைக்க முடியவில்லை. மீண்டும் வருத்தமடைந்த மன்னரின் கனவில், அன்றிரவு ஸ்ரீ ஜகந்நாதர் மீண்டும் தோன்றி, “நீலமாதவனாக என்னை சேவித்த விஸ்வாசுவை அழைத்து வா, ஒரு தங்க ரதத்தை தாரு-பிரம்மனின் முன்பு நிற்க வை,” என்று கூறினார். அக்கட்டளையின்படி, தாரு பிரம்மனின் ஒரு புறம் விஸ்வாசுவையும் மறுபுறம் பிராமணர் வித்யாபதியையும் மன்னர் நிற்க வைத்தார், தங்க ரதத்தை தாரு பிரம்மனின் முன்பு நிறுத்தினார். பின்னர், பரம புருஷ பகவானது புனித நாமங்களை அனைவரும் கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். மன்னர் தாரு பிரம்மனிடம் ரதத்தில் ஏறுமாறு வேண்ட, அவர் மிகவும் எளிமையாக ரதத்தில் அமர்த்தப்பட்டு வேண்டிய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார். 

விஸ்வகர்மாவின் உதவி 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தாரு பிரம்மனிலிருந்து இறைவனின் வடிவத்தைச் செதுக்க பல்வேறு கைதேர்ந்த சிற்பிகளை மன்னர் இந்திரத்யும்னன் நியமித்தார். ஆனால் அவர்கள் செதுக்க ஆரம்பிக்கும்போது, அவர்களது உளிகள் உடைந்து துகள்களானதே மிச்சம், தாரு பிரம்மனை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இறுதியில், பகவான் விஷ்ணுவின் விருப்பத்தின்படி, தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மர் வயதான சிற்பியின் உருவில் அரசவைக்கு வந்தார். இருபத்தோரு நாள்கள் கதவை மூடிவிட்டு தனிமையில் தன்னை வேலை செய்ய அனுமதித்தால், விக்ரஹங்களை தான் செதுக்குவதாக அவர் வாக்களித்தார். உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன, வயதான சிற்பியின் வழிகாட்டுதலின்படி மற்ற சிற்பிகள் மூன்று தேர்களை செய்வதில் ஈடுபட்டனர். இருபத்தோரு நாள்களுக்கு முன்னர் எவரும் கதவைத் திறக்கக் கூடாது என்று அரசரிடம் வாக்குறுதியை பெற்ற வயதான சிற்பி, தாரு பிரம்மனை கோயிலுக்குள் எடுத்துச் சென்று கதவை மூடிக் கொண்டார். பதினான்கு நாள்கள் கழிந்த பின்னர், செதுக்கும் ஓசை எதுவும் கேட்காததால், அரசர் மிகவும் கவலையுற்றார். வயதான சிற்பிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்னும் அரசியின் ஆலோசனையின் பேரில், கோயிலின் கதவை மன்னர் தனது கைகளாலேயே மிகுந்த விசையுடன் திறந்தார்.

ஜகந்நாதரின் அருள் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

உள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே கதவை திறந்தமையால், விக்ரஹங்கள் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன்னை பெரும் குற்றவாளியாக எண்ணி உயிரை விட்டுவிட தீர்மானித்தார். தர்ப்பை புல்லை பரப்பி, உண்ணாவிரதத்தை தொடங்கிய மன்னரின் கனவில், ஜகந்நாதர் தோன்றி, “வருத்தப்படாதே, இவையனைத்தும் எனது ஏற்பாடுகளே. நான் தோன்றும்போது எனது விருப்பத் தின்படியே தோன்றுகிறேன். எனக்கு புற உலகத்தின் கைகளோ, கால்களோ இல்லை, ஆயினும் எனது தெய்வீகப் புலன்களால் எனது பக்தர்களின் சேவைகளை ஏற்பேன்,” என்று கூறினார். ஜகந்நாதரின் வார்த்தைகளால் திருப்தியுற்ற அரசர் அவரிடம் பிரார்த்தனை செய்தார்: “எம்பெருமானே! உமது தோற்றத்திற்கு காரணமாகயிருந்த சிற்பியின் வம்சாவழியினர் இந்த மூன்று ரதங்களை வடிவமைக்கும் பணியில் காலம் காலமாக தொடர்ந்து இருக்க வேண்டும்.” அதற்கு அனுமதி வழங்கிய ஸ்ரீ ஜகந்நாதர், அரசரிடம், “நீலமாதவராக எனக்கு சேவை செய்த விஸ்வாசுவின் சந்ததியினரே எனக்கு எப்போதும் சேவை செய்ய வேண்டும். அவர்கள் எனது தைத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்; வித்யாபதியின் வழிவந்தோர் எனக்கு அர்ச்சா வழிபாடு செய்ய வேண்டும்” என்று கூறினார். பிறகு, அரசர் இந்திரத்யும்னர் ஜகந்நாதரிடம், “இக்கோவிலின் கதவுகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே மூடியிருக்க வேண்டும், அப்போது உலகத்தோர் அனைவரும் வந்து உம்மை தரிசிக்க முடியும். நாள் முழுவதும் தாங்கள் உணவருந்த வேண்டும், அதன் மூலம் உமது தாமரை விரல்கள் காய்ந்திராமல் இருக்க வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை,” என்று வேண்டினார். அந்த ஆசியையும் வழங்கிய ஜகந்நாதர், உமக்காக நீ என்ன வரம் வேண்டுகிறாய்?” என்று கேட்டார். தனிப்பட்ட முறையில் யாரும் உம்முடைய கோயிலை உரிமை கொண்டாடக் கூடாது, இந்த ஒரு வரத்தை எனக்கு அளியுங்கள்” என்று வேண்டினார். ஜகந்நாதரும், அவ்வாறே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தார். ஜகந்நாதரின் இத்தகு விநோதமான வடிவத்தினை ஏதோ அறைகுறையான உருவம் என்று எண்ணிவிடக் கூடாது. ஒருமுறை, கிருஷ்ணரின் ராணியர் அனைவரும் அவரது விருந்தாவன லீலைகளை கேட்க ஆவல் கொண்டு அன்னை ரோகிணியை சூழ்ந்து கொண்டனர். அந்த அற்புத லீலைகளை அன்னையும் வர்ணிக்க, கிருஷ்ண பலராமர் வந்தால் சைகை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையுடன் காவலுக்கு வைக்கப்பட்ட சுபத்ரையும் அந்த லீலைகளில் மூழ்கிவிட்டார். கண்களை விரித்து லீலைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சுபத்ரையின் அருகில் வந்த கிருஷ்ண பலராமரும், தங்களது சொந்த லீலைகளை கேட்டு ஆனந்தத்தில் கண்களை விரித்தனர், கூட்டத்தினுள் புகுந்தபடி கேட்டுக் கொண்டிருந்ததால், கைகளும் ஒடுங்கி இருந்தன. இந்த அற்புத தோற்றமே ஜகந்நாதரின் தற்போதைய தோற்றம். இவ்வாறாக கருணையின் கடலாகிய ஸ்ரீ ஜகந்நாதர், தனது சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரையுடன் இவ்வுலகின் அனைத்து உயிர்வாழிகளின் நன்மைக்காகத் தோன்றினார்.

"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது.

Monday, 22 June 2020

பசுவதைக்கு எதிராக உச்சநீதிமன்ற வாதம்

லஷ்மியாம் பசுவினால் பல லட்சம் லாபம் என நிருபித்த வழக்கு
முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள்…
பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை:
மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (கட்டணம் 22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (கட்டணம் 35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக்கேட்க அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது.
பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன:
1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும்.
2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது.
3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும்.
4. நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும்.
5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும்.
இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது.

ராஜு பாயின் பதில் வாதம்:
நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும். அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும்.  இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-. பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-. மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/- ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/-.
ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும். 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம். இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம். ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள்.
அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின்பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார். இதனை IRC  விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர். இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர். இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர். சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும் இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட 10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார். மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/-என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும் (33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/. இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை.
திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான்.  ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர்.
பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்:
ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது.
ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும். உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும். இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது. பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும். இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-. இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்பமறுத்தார். உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன். பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார். அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார். மேலும் டீசல் போல இதில் புகையோ , இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை. எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார்.
ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார். இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/-கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார். நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை. இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை. உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும். இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதிசெய்தது.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர். இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன் படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.  அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர். இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  
இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது:
நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும்,  ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும், தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி  வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி  உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள். அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்டஹாவ்ரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார்.
அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார். இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார். இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால் இஸ்லாம் மன்னர்களான  இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹோமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வியெழுப்பினார். இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார். எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர். மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார். திரு.முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார். இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில் புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும், இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார். அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார்.
பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது.
இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம். இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது.

மொழி பெயர்ப்பு 
வினோபா

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...