Saturday, 18 February 2023

காகத்துக்கு உணவு

**காகத்திற்கு இப்படி சாதம் வைத்தால் நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். காகத்தைப் பற்றி இதுவரை அறிந்திடாத அபூர்வமான தகவல்கள் இதோ உங்களுக்காக.**

காக்கை ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம். ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ சக்தி நிறையவே இருக்கின்றது.

மனிதர்களை விட பல மடங்கு உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய உயிரினம் தான் இந்த காகம். நம்முடைய இந்து சாஸ்திரப்படி காகம் நம்முடைய முன்னோர்களாக கருதப்படுகிறது. இந்த காகத்தை பற்றிய சில அரிதான புத்தம்புதிய விஷயங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பொதுவாக மற்ற பறவைகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் வீதியில் இறந்து கிடப்பதை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த காகம் அப்படி எல்லா இடங்களிலும் இறந்தபடி இருக்காது. அரிதாக சில இடங்களில் பார்க்கலாம். ஆனாலும் கூட்டம் கூட்டமாக பெரிய பெரிய ஆல மரத்தின் மேல் கூடு கட்டி வாழக்கூடிய நூற்றுக்கணக்கான காக்கைகள் எங்கு சென்று இறக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது.

நம் வீட்டின் அருகில் பெரிய மரம் இருந்தால் அங்கே நூற்றுக்கணக்கான காகங்களை பார்க்கலாம். அந்த காகங்கள் எல்லாம் எப்படி உயிர் விடுகின்றன என்று நாம் என்றாவது சிந்தித்து இருக்கின்றோமா.

காகத்திற்கு, தான் உயிர் விடக்கூடிய நேரம் எப்போது வரும் என்பது முன்கூட்டியே தெரிய வருமாம். அப்போது அது அடர்ந்த காடுகளுக்குள் சென்று தனக்குத் தானே ஒரு கூடு அமைத்துக் கொண்டு ஜீவசமாதி அடைந்துவிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இப்படி ஒரு அற்புத சக்தி வாய்ந்த இந்த காகத்திற்கு தினம் தோறும் உணவு வைப்பவன் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புகளை பெறுவான் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமே கிடையாது.

இனி காகத்திற்கு நீங்கள் உணவு வைத்தால் இந்த விஷயத்தை கவனித்து பாருங்கள். தினமும் நீங்கள் காகத்திற்கு உணவு வைக்கும் போது அந்த காகம் சந்தோஷமாக அந்த உணவை எடுத்துவிட்டு, உணவு வைத்த வரை ஒரு முறை பார்த்து விட்டு தான் பறந்து செல்லும். பொதுவாக தெரியாத இடத்தில், அதாவது முன் பின் பழக்கம் இல்லாத இடத்தில் உணவு வைத்தால் காகம் அவ்வளவு எளிதில் வந்து எடுக்காது.

தினமும் சாப்பாடு வைத்து பழகி விட்டால் சாதத்தை வைத்த உடனேயே காகம் கூப்பிடாமலே வந்து அந்த சாதத்தை எடுத்து சாப்பிட்டு விடும். (அப்போது சாதத்தை வைத்த உங்களுடைய மனதில் ஒரு திருப்தி ஏற்படும் பாருங்கள். அதை சொல்வதற்கு வார்த்தை கிடையாது. இதை நிறைய பேர் உணர்ந்தும் இருப்பீர்கள்.)

இப்படி நாம் வைக்கக்கூடிய சாதத்தை தினமும் வந்து எடுக்கக்கூடிய அந்த காகமானது நமக்கு சில நல்ல சகுனங்களையும் அறிவுறுத்தும். சில சமயம், சில கெட்ட சகுனங்களையும் தெரியப்படுத்தும். உதாரணத்திற்கு நம்முடைய ஜன்னல் பக்கத்திலோ அல்லது வாசலிலோ காகம் வந்து கா கா என்று அழைத்தால் உறவினர்கள் வருவதாக அர்த்தம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதே போல் தான் இதுவும்.

அன்றாடம் வந்து சாதம் எடுக்கக்கூடிய காகம் திடீரென்று ஒரு நாள் நீங்கள் வைத்த சாதத்தை எடுக்க வரவில்லை. அப்படியே சாதம் வைத்தவுடன் காகம் வந்தாலும், அந்த சாதத்தின் அருகில் அமர்ந்து கொண்டு உங்களைப் பார்த்து சத்தம் எழுப்பிக் கொண்டுதான் எடுக்கும். அந்த சாதத்தை எடுக்காது. அப்போது உங்களுக்கு ஏதோ ஒரு எதிர்பாராத குழப்பம், எதிர்பாராத பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உங்களுக்கு அறிவுறுத்துவதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாகவே இறந்தவர்கள் வீட்டில், இறந்தவர்களுக்கு உணவை வைத்து படைத்து, சாமி கும்பிட்ட பிறகு அந்த சாப்பாட்டை கொண்டு போய் முதலில் காகத்திற்கு தான் வைப்பார்கள். சில பேர் வீடுகளில் இந்த சம்பிரதாயத்தை செய்யும்போது சாப்பாட்டை வைத்த உடன் எங்கிருந்தோ காகம் பறந்து வந்து அந்த சாப்பாட்டை எடுத்துச் செல்லும். இப்படி இறந்தவர்கள் வீட்டில் சாதம் வைத்த உடன், காகம் வந்து எடுக்கின்றது என்றால் அந்த இறந்த ஆத்மா சாந்தி அடைந்து விட்டது. இறந்த ஆத்மா பரிபூரணமாய் நல்ல ஆத்மாவாக முக்தி அடைந்து விட்டது என்று அர்த்தம்.

சில பேர் வீடுகளில் இப்படி சாதம் வைக்கும் போது, அந்த காகம் வந்து எடுக்கவே எடுக்காது. மேலே காகம் அங்கும் இங்கும் ஆக பறந்தாலும், அந்த சாப்பாட்டை உண்ணுவதற்கு காகம் வரவே வராது. இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் நிச்சயமாக இறந்தவர்கள் செய்த பாவங்கள் தான் இதற்கு காரணம். இப்படி மேலே பறக்கும்போதே சாதம் வைப்பவர்களை பற்றிய இறந்த காலத்தை, நிகழ்காலத்தை எதிர்காலத்தை ஆராய கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு. யார் வைத்த சாதத்தை எடுக்க வேண்டும். யார் வைத்த சாதத்தை எடுக்கக் கூடாது என்பதை காகம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்படி எல்லா விஷயங்களும் தெரிந்த இந்த உயிரினத்திற்கு தினமும் மனதார சந்தோஷத்தோடு காலை எழுந்தவுடன் உங்களால் இயன்ற உணவை வைத்து வாருங்கள்.‌ உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள். செய்த கர்மாவும் படிப்படியாக குறையும். என்னால் இந்த சாப்பாடு வைக்க முடியவில்லை, அந்த சாப்பாடு வைக்க முடியவில்லை என்ற கஷ்டப்படாதீங்க.

ஒரு மிக்சர், ஒரு பிஸ்கட் என்று எந்த உணவை நீங்கள் வைத்தாலும் உங்கள் மனம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வைத்த உணவை தினந்தோறும் அந்த காகம் வந்து சாப்பிடும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

இது வெறும் காக்கா தானே மற்ற பறவைகள் போல இதுவும் ஒரு ஜீவராசி என்பவர்களுக்கு மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மூடநம்பிக்கையாக தெரியும்.  காகத்தை சனி பகவானின் வாகனமாக பார்த்து, அதை நம் முன்னோர்களாக நினைத்து சாஸ்திரம் சம்பிரதாய முறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயங்களை நம்பி பின்பற்றும் போது உங்களுக்கு தானாக நல்லது நடக்கும் 

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

Wednesday, 15 February 2023

பாதங்களின் அடிப்பகுதி

உங்கள்  பாதங்களின்  அடிப்பகுதியில் *தேங்காய் எண்ணெயை*   பயன்படுத்திப் பாருங்கள்....

என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை ....

ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார்.  அம்முதியவர் "நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.  மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார் .

ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த  முதிய காவலாளி ஒருவர், "என்ன விஷயம்?"  என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்!  அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் *தேங்காய் எண்ணெய்* இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார்.  இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றிருக்கிறார்.  அவ்வாறே அவர் செய்த பின்னர் நன்றாக தூங்கி விட்டாராம்.  

அவர் சொன்னபடி நானும் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து பார்த்தேன். *உண்மையாகவே நன்றாக தூங்கவும் சோர்வு நீங்கவும் செய்கிறது*.

எனக்கு *வயிற்று பிரச்சினை* இருந்தது.  என் *கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ்* செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை *2 நாட்களில்* குணமாகியது.

உண்மையில்!  இந்த செயல்முறை *ஒரு மந்திர விளைவை* கொண்டுள்ளது

நான் பல ஆண்டுகளாக இந்த தந்திரத்தை கையாண்டு வருகிறேன்.  இது எனக்கு *மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும்* வைத்திருக்கிறது.

இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்ததிலிருந்து 
என் கால்களில் எப்போதும் இருந்த வீக்கத்தினால் ஏற்பட்ட வலியும் சோர்வும் நீங்கின, 

தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை கடைபிடிக்க ஆரம்பித்த *2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.*

இது ஒரு அற்புதமான விஷயம்.  

💐 *நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது.*💐  இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.

என் தாத்தாவின் *காலில் இருந்த எரிச்சல் உணர்வும், தலைவலியும்*  ​​நீங்கின.

*தைராய்டு பிரச்சனை* இருந்த ஒருவர் கூறுகையில்,  என் கால்கள் எல்லா நேரத்திலும் வலித்துக் கொண்டே இருக்கும்.   தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய ஆரம்பித்தபின் அவ்வலி நீங்கி இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.

வேறொருவர் கூறுகையில் "எனக்கு *பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய்* இருந்தது.  என் நண்பர் என்னை  ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார்.  தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: *நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில்* விட்டு தூங்கச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.  

அவர் கூறியபடி பின்பற்றத் தொடங்கிய பின் எனது *மலச்சிக்கல்* பிரச்சினையையும் தீர்த்தது.  என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன்.  *குறட்டையை* கூட தடுக்கிறது.

கால்களில் *கொப்புளங்கள், முழங்கால்களில் வலி, முதுகுவலி* கூட இந்த மசாஜால் குறைகிறதாம்.

எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது தேங்காய் எண்ணெய். 
"நீங்கள் *தேங்காய் எண்ணெயை* மட்டுமே பயன்படுத்த வேண்டும் எஎன்பதில்லை.... மாறாக *கடுகெண்ணெய், நல்லெண்ணெய்* போன்றவற்றை கூட கால்களிலும் பாதங்களில் தடவலாம். குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும்  மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள்.

 உங்கள் *வாழ்நாள்* முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் *இயற்கையின்* அற்புதத்தை பாருங்கள். 

நம் கால்களின் பாதங்களில்.
*பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில்* *சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.*
*ஒவ்வொன்றும் மனித உறுப்புகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன. பாதங்களை அழுத்தி மசாஜ்* செய்வதன் மூலம் அவ்வுறுப்புகளும் ஆரோக்கியம் அடைகின்றன.

*கால் ரிஃப்ளெக்சாலஜி* என்றும்
இது கூறப்படுகிறது. *கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.*

தயவுசெய்து இந்த தகவலை *உங்கள் நண்பர்களுடன்* முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.
படித்ததில் பிடித்தது......

Saturday, 4 February 2023

தியானம்

த்யானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை! 😀

எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் 
திடீரென்று எழுந்தது. 

கூடவே, 'உன்னால் முடியுமா ...?' என்று உள் மனம் கேள்வி கேட்டது.

'அதிகமில்லை ஜென்டில்மேன்! - ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே ... என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் 
இறங்கினேன்.

கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். 
சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.

"மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார் 
கூறியிருக்கிறார்..."

"அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆஃப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது 
தியானம் பண்ண விடு!"

ரேடியோ அணைக்கப் பட்டது. ஏன் கடவுள் காது களுக்கு கதவு வைக்க வில்லை? உஸ்ஸ் ... மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம். 
ஒழுங்காக தியானம் செய்.

அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும்தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்ற வேண்டும். ஐந்நூறு ரூபாயாவது ஆகும்.

 தியானம்... தியானம்... எங்கேயோ போகுதே.

கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது. சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும். 

சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?

தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. 

அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே. அவரால் எப்படி முடிந்தது. பசியே எடுத்திருக்காதா? 
மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை? நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.

"ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!"

எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.

"இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?... கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?"

கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள். நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள்தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் 
பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.

சரி சரி... மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ. 

தியானம் செய்தால் மனம் அமைதி பெறும். 

'அமைதியான நதியினிலே ஓடம்...' அருமையான பாட்டு. சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே... 

ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!

ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம். இப்போது, மாத்திரை போட்டுக் கொண்டால்தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலியை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?

 உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது? 

அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு.

தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டு மானாலும் நினை. ப்ளீஸ்... கொஞ்சம் ஒத்துழையேன்.

 அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.

'அலை பாயுதே கண்ணே...! 
என் மனம் அலைபாயுதே..!' 

கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்துகொண்டு விட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப் படவில்லை.

அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்? 

ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.

இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன் 
இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.

முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி, 

ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை. அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.

ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. 

இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா... 

நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன். 
லீவு நாள்லகூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!

திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ... இதுதான் தியானமா?

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.

யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.

"ஏங்க... எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை?"

- சோ

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...