Monday, 26 December 2022

சித்த மருத்துவர் திரு.வீரபாபு

கடந்த கொரோனாவில் எந்த உயிரிழப்பும் இல்லாமல் 6000 பேரை சிறப்பாக எந்த ஓர் உயிரிழப்பும் இல்லாமல் குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு (குறிப்பு இதில் சிகிச்சை பெற்றவர்களில் 300 பேர் ஆங்கில மருத்துவர்கள் ) அவர் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு ,,துணை மருந்தாக அவர் அறிந்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தரா மருந்துகளைக் கொண்டே கொரோனாவை குணப்படுத்தி வருகிறார்.

அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.அதன் விபரங்கள் 

#மூலிகை #தேநீர்:

சுக்கு - 100 கிராம்,
அதிமதுரம் - 100 கிராம்,
சித்தரத்தை - 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் - 10 கிராம்,
திப்பிலி - 5 கிராம்,
ஓமம் - 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு - 5 கிராம்

மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.

பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.

இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.

இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.
இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!பத்தியமில்லை. எனவும் அவர் தெரிவித்தார் அவரை பற்றி தெரிந்தவர்கள் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சை வழிமுறைகளை தயவு கூர்ந்து அறிந்து வையுங்கள் ..

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை நம் நாட்டு மூலிகைகள் ஓட ஓட விரட்டுகிறது என்பது வியப்பான நற்செய்தி. எல்லோருக்கும் பயனுள்ளது

Wednesday, 21 December 2022

போட்டி

நான் இன்று காலை jogging ( ஜாகிங்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.

அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.

இறுதியாக, சாதித்து விட்டேன்!

அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.

எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.

அவரைக் கடந்த பிறகு, நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....

1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.

2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.

3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.

4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.

5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.

அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,

ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

உங்களை விட நல்ல வேலை.

நல்ல கார்.

வங்கியில் நிறைய பணம்.

நல்ல படிப்பு.

அழகிய மனைவி.

அழகான கணவன்.

நல்ல குழந்தைகள்.

நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.

நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,?

எங்கே செல்கின்றார்கள்,?

என்ன அணிகிறார்கள்,?

என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,?

என்ன பேசுகிறார்கள்?..

என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.

நாம் யாருக்கும் போட்டி இல்லை.

யாரும் நமக்கு போட்டி இல்லை.

அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.

வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்'

(எழுதியது யாரோ ஆனால் படித்ததில் பிடித்தது)

Sunday, 11 December 2022

சுவை எனும் நஞ்சு

😳🤔😔😡😡😭

படித்தேன்…அதிர்ந்தேன்…பகிர்ந்தேன்….

*## சுவை எனும் நஞ்சு ##*

இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அது வேறொன்றும் இல்லை, எங்கு நோக்கிலும் உணவு.. உணவு.. உணவு…

தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.


எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌


அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.

 உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. 

பல உணவகங்களில் இவை இல்லை.


ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது.


மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது.

இந்த வரிசையில், காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன்.

 விரைவில் அதனையும், ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம்.

 *தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.*

ஒரே ஒரு வகை உணவு பரிமாறப்பட்ட என் சொந்தங்கள் வீட்டில் அனைத்திலும், இரண்டு மூன்று வகை சேர்த்து பரிமாறப்படுகிறது.

 இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

 ஆனால் இவையெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் நடந்தேறியிருக்கிறது. அதனை அவர்கள் உணரவே இல்லை.

 யூடியூப் போன்ற வலையொலிகளின் உணவு நிகழ்ச்சிகள் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

*ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்.*

 *ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்டா ஏன் ?*

*உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து நேரங்களிலும் கிடைக்கிறது.*

பிசா(சு), சவ(ம்)ர்மா (PIZZA, SHAWARMA,PAROTTA, FRIED RICE ) போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.

*திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார்.* 

சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்.

ஊரில் எவருக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை.

 கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை.

 இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் 🎂🍰🍮பெருகிவிட்டது.

 இனிப்பு பெருகிவிட்டு, நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.

அண்ணாச்சி கடைகளிலும், பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை.




 பெரும்பாலும் வேற்று மாநில பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது.

 ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது.

 ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர்.

*இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் சூப்பர் மார்கெட் போன்ற கடைகள் தான்.*


 அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும்.

 ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள்.

அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும். என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள். 

அந்த மக்களைத் தங்கள் கடைக்கு அழைக்க அண்ணாச்சிகளும் அதே பொருளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இதனால். தமிழ் பொருட்களை உற்பத்தி செய்த பல குடும்பங்கள் அழிந்து இருக்கும்.

 எங்கள் ஊரில் கூட மெட்ரோ என்ற பெரும் கடை மற்ற அனைத்தையும் உண்டு வளர்கிறது.

100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி நான்கு மணி நேரம் செல்லும் ரயில் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. 

மக்கள் அதற்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள்.

 உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. 

அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.

*மிக முக்கியமாக, தற்போது உணவை, மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள்; பிறகு கண்களால் தின்கிறார்கள்;* 

பிறகு கண்டதையெல்லாம் வாங்கி, பிடித்ததை தின்றுவிட்டு, பிடிக்காததைத் தூக்கி எறிகிறார்கள்.

முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால், வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது.

 ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto #தூதுணவு வந்துவிட்டது.

*இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது.*

*ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் அனைத்து நேரங்களிலும் கொண்டு சேர்ப்பது மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர்.*

அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று ஒரு நடிகர் பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை, என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது.

*தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை.* 

*அதேபோல் அந்நிய உணவால், தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.*

சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும்.


 அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

*இது நடக்காவிட்டால்… எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.*

 *அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும்;*

 *இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.*

*முடிந்தவரை பகிருங்கள்…உடல்நலம் பேணுங்கள்…*

☘️🙏☘️🙏☘️🙏

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...