Monday, 28 September 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... அலோபதி மருத்துவ மரணம்...ஒரு பார்வை...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... அலோபதி மருத்துவ மரணம்...
ஒரு பார்வை...

2020 ஆகஸ்ட் மாதம், லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவுதான்…

மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போனவரை இவ்வுலகில் இல்லாமல் செய்து விட்டார்கள்...

மருத்துவமனையில் கல்யாணநாள் கொண்டாடினார், இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார்...

2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்துட்டு 
51நாள் கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல கோடி பணம் பெற்றுக் கொண்டு பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்…

யாரும் கேள்வி கேட்க கூடாது…

ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது...

இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்… 

அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது...

யாரையும், ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது...

எந்த ஊடகமும் வாயை திறக்காது... 

ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ செய்திருந்தால் இன்று உலகமே பொங்கி இருக்கும்...

ஒரு மாதத்துக்கு அதுதான் மீடியாவில் டிரண்டிங்காக இருந்திருக்கும்... 

அதுக்கு அப்புறம் அந்த சித்த வைத்தியர் வாழ்க்கை அவ்வளவுதான்... 
சூன்யம்...

ஆனானப்பட்ட அம்மாவையே அமரர் ஆக்கியவங்ககிட்ட பாலு மாத்திரம் எம்மாத்திரம்… 

இவங்க நிலையே இப்படி இருக்கும் போது, சாதாரண ஜனங்கள் மக்களின் நிலை ?

இந்த அலோபதி மருத்துவர்களால் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. 

அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது… 

பண வெறி பிடித்தவர்கள்…

சரி போகட்டும்…
உங்ககிட்ட ஒரு சந்தேகம்…

நம் பாரம்பரிய சித்த வைத்தியரிடம், சித்த வைத்தியம் பார்த்து இதுவரை எத்தனை மரணங்கள் நீங்கள் கண்ணால் பார்த்திருக்கீங்க ?

இல்லையென்றால் உறுதியான ஆதாரத்தோட கேள்வி பட்டிருக்கீங்க ?

அதுபோல் ஆங்கில அலோபதி மருத்துவம் பார்த்து ஒவ்வொரு நாளும் மரணம் இல்லாத உங்கள் ஊர் அரசு/தனியார் பெரிய மருத்துவமனைகளை காண்பிக்க முடியுமா ? 

கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், நேர்மையான ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை கொண்டு சித்த வைத்தியம் பார்த்து இறந்தவர்களை கணக்கு எடுக்க வேண்டும்.

அதே போல் அலோபதி ஆங்கில மருத்துவத்துவம் பார்த்து கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிகழ்ந்த மரணங்களை கணக்கு எடுக்க வேண்டும்...

அப்புறம் தெரியும் ஆங்கில அலோபதி மருத்துவத்தின் கோர முகம்...

* *இதுவரை அலோபதி ஆங்கில மருத்துவத்தால் முழுவதும் குணப்படுத்திய அல்லது இனி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஒரு வியாதியைச் சொல்ல முடியுமா ?* *

ஒரு சித்த வைத்தியரிடம் வந்து இந்த கஷாயத்தை குடித்தால் பக்க விளைவு வருமா என்று கேட்கும் தைரியமும், ஆம்பளைத்தனமும், எந்த ஆங்கில மருத்துவரிடமும் கேட்க துணிவு வருமா ? 

ஏன் அங்கே கேள்வி கேட்க ஆண்மை வருவதில்லை ?

சும்மா எதுக்கு எடுத்தாலும் அரசை மட்டுமே குறை சொல்ல கூடாது... 

அரசு என்பது நம்மால் நாமே ஆட்சி செய்வது... 

நாம் தேர்ந்து எடுத்தவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள்...

அவர்கள் சரியில்லை என்று சொன்னால், காரணம் நாம் சரியான ஆட்களை தேர்வு செய்யவில்லை என்று அர்த்தம்தானே தவிர அவர்கள் மேல் குறையில்லை...

முதலில் நாம் திருந்துவோம்...

குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 500ரூபாய் பணத்துக்கும், நம் மதிப்பில்லா வாக்கை விற்க்காமல், நல்ல ஆட்களை தேர்ந்து எடுப்போம்...

அடுத்து நம் அனைத்து வியாதிகளுக்கும் சித்த வைத்தியத்தை நாடிச் சென்றால் என்ன கெட்டு விடும் ? 

குறைந்த செலவில் அனைவரும் நலமோடு இருப்போம் தானே...

அலோபதி மருத்துவத்தை விபத்து நேரத்தில் மட்டும் ஊறுகாயைப் போல பயன்படுத்திக் கொண்டு மற்ற அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் சித்த வைத்தியம் பார்க்க ஆரம்பித்தால் நம்மை யார் தடுக்க முடியும் ?

நம் ஆரோக்கியம் நம் கையில்...

நாமே சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்வது மாதிரி நாமே அவர்களிடம் காசையும் கொடுத்து வேதனையையும் வாங்கி ஏன் இறக்கணும் ?
நன்றாக யோசியுங்கள்...

*2,000ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சித்த வைத்தியத்தை தான் இனி பார்ப்போம் என்றால், இன்று அலோபதி மருத்துவமனையாக இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் 6வருடத்தில் சித்த மருத்துவமனையாக தானாக மாறி விடும்.*

*எப்படி என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் செக்குல ஆட்டின எண்ணை கிடைக்காது*.

*ஆனால் இன்றைக்கு ஊர் ஊருக்கு செக்கு இருக்கு, இயற்கை முறையில் ஆட்டிய எண்ணை கிடைக்குது.*

*அதேபோல் நாம் சித்த வைத்தியத்தை நாடினால் மட்டுமே, ஊர் முழுக்க உள்ள மல்டி ஷ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், இனி சித்த மருத்துவமனைகளாக மாறி விடும் சூழல் அமையும்*.

*இல்லை என்றால் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாட்டுக்கு பிணவரவு அதிகமாகிவிடும்*.
அவ்வளவுதான்...
*மு டி வு  உ ங் க ள்  கை க ளி ல்*.

_பாடும்  நிலா பாலுவின் மருத்துவ போராட்டம்_ 
*ந ம க் கு   வி ழி ப் பு ண ர் வை   ஏ ற் ப டு த் து ம்   ஒ ரு   பா ட மா க   இ ரு க் க ட் டு ம்*.

இனி இப்படி ஒரு சாவு 
எவர் வீட்டிலும் நிகழாமல் இருப்பது நம் கையில்...

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்.?

_மரபுவழி தமிழ் மருத்துவர் -.                                                                                                      _*சுந்தர்ஜி.*_

Thursday, 17 September 2020

வாழ்ந்து கெட்டவர்கள்

*மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா  ?* 

வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை.

பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

பாகவதரைப்போல் வாழ்ந்தவருமில்லை; வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர்.

எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை.

வாழ்க்கையின் அபத்தங்களை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் வாழ்க்கையில்தான் விதி கொலை தாண்டவமாடும்.

கீழுள்ளவை கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள். 
😢😢😢😢😢😢😢

"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் .

# 1 "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

# 2 ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

# 3 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்' என்று மெல்லிய குரலில் சொன்னார்.

# 4 சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

'ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

# 1 கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.

# 2 என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

# 3 நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

# 4 எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், 'நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!

எதுவும் மரணம் வரைதான். இதுதான் மனிதவாழ்க்கை.

இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தைவிட கொடூரமானது.

சமயங்களில் மரணம்தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது.

படித்ததில் மனம் கசிந்தது.......

Saturday, 12 September 2020

சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் !!!*

*சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் !!!*

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2. சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

11. கோமாதா பூஜை செய்யலாம்.

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்த து.

14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

Friday, 11 September 2020

கருப்பு _எள்

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் 
#கருப்பு _எள்

#எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சாப்பிடுங்க. 

*முன்னோர்களின் பாதை..!* 
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும்

 முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம். 

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!* 
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம். 

*எதிர்ப்பு சக்தி கொண்ட 
#எள்..!* 
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..? 

*காரணம் என்ன..?* 
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம். 

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் 

Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள்

 பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான். 

#Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. 

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..! 
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது. 

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம். 

அட, இதுக்கூடவா..? 
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் 

இரும்பு சத்து, 
வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும்

 முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

*அழுக்குகளை வெளியேற்ற*

எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக 

......கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.

தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

 குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்...நற்பவி

Sunday, 6 September 2020

மின்சாரம் - கடவுள்

*“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”*

*"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"*

*எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?*

கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”

வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..

மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா.

சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.

கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். 

“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...”

- அருள்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள்...

🎇💢🎇💢🎇💢🎇💢🎇

Thursday, 3 September 2020

scientist jokes

*Hi Level Scientific Jokes:* 

Scientists were playing hide & seek in heaven.
Einstein was seeker.
Newton didn't hide & stood in a square of 1 meter.

Einstein: I found u Newton !! Thhappa !!!

Newton: U are Wrong.
I am not Newton.
As I am standing in 1 mtr square, I am Newton/per mt sq. 
So I am Pascal..
😛😛😛

-------------------------
Q: What did the thermometer say to the graduated cylinder?

A: "You may have graduated but I've got so many degrees".
🏮👻🏮

------------------------

Did you hear oxygen and magnesium dating together?
OMg!! 
😱😱😱
------------------------

What if Oxygen went on a date with Potassium?
Its OK.. 
😉😉😉
------------------------

Atom 1: I just lost an electron. 
Atom 2: how u feel? 
Atom 1: positive.
😛😳😛
------------------------

Q:What do you get when you put a Cobalt & 2 iron atoms in mixer
CoFFee.
😛☕😜
------------------------

What do you get after reaction of a Barium atom with  two sodium atoms... 
BaNaNa.
🍌🍌🍌
------------------------

And finally ....

Can't end without a movie dialogue.
😄😂😂

Electron to neutron : mere pass charge hai , spin hai, magnetic field hai, reactivity hai ... Tumhare pass kya hai...

Neutron : mere pass..... 
MASS hai.

😂😂😂
Reminding your Chemistry with a smile.
😊😊😊

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...