Saturday, 30 January 2021

பலஹீனமே_பலம்..#ஜென்_தத்துவம்

#பலஹீனமே_பலம்..
#ஜென்_தத்துவம்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.

#ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.

ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.

கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம்.

கையில்லாத பையன் என்ன செய்வான் ?  
பல மாஸ்டர்களிடம் போனான்.

எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள்

கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு #ஒரே_ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்.

குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

இந்த #ஒரே_ஒரு_தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன்.

ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.

பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய்வந்திறங்கினான்.  
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வை யாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்.

குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்  
புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று ஜூடோவிலுள்ள மிக  
கடுமையான ஒரு தாக்குதலை  
நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

:sunflower: இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே !

:sunflower: உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”

:sunflower:குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது.

:tangerine:ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது.
நன்றி!
*வெற்றியை நோக்கி மனம் தளராமல்... தோல்விகளையே வெற்றி படியாக்கி ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்*

*டி.எம்.மோகன்*
சிவா அச்சுக்கலையகம்
மல்டிகலர் - ஆப்செட் பிரிண்டர்ஸ்
பழைய ஜோதி தியேட்டர் வழி
பலபட்டரை மாரியம்மன் கோயில் அருகில்
நாமக்கல்
அழைக்க : 9994386779

Saturday, 23 January 2021

பாட்டி சொல்

*பாட்டி அடிக்கடி சொல்லுவாள்*

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

Monday, 18 January 2021

மாட்டுப்பொங்கல் - ஆதங்கம்

பட்டி ஆடுகள் இல்லை 

பத்திற்கு மேற்பட்ட மாடுகள் இல்லை 

பட்டி படல் கட்ட வேண்டியதில்லை 

படல் கட்ட மின்ன மரங்களை தேடி அலைய வேண்டியதில்லை 

பன நார் கிழிக்க அவசியமில்லை

ஒண்டுகளை பாதுகாக்க வேண்டியதில்லை

கரையான் அரிக்காமல் கம்பைகளை காக்க வேண்டியதில்லை

அடுப்பு கூட்ட கல் தேடி பழைய இடம் போக வேண்டியதில்லை

சாமிகளை தேடி கரணம் போட வேண்டியதில்லை 

பச்சமாவு இடிக்க அவசியமில்லை

அரசாணிக்காய் பொறியல் செய்ய ஆட்கள் இல்லை

முடக்கத்தான் கொடி தேடி கால் முள் தைக்க வேண்டியதில்லை 

சோழக்கட்டைகள் பிடுங்கி காடு சுத்தப்படுத்த தேவையில்லை 

மாடுகளை குளிப்பாட்ட வேண்டியதில்லை

கன்று கழுவையில் பின் உதை வாங்க ஆள் இல்லை..

பட்டை தீட்ட காளை கொம்புகள் இல்லை 

காளையை ஈன்ற நாட்டு மாடுகள் இல்லை 

தார் முள் குத்திய உழைக்கால் தடிகள் இல்லை

சில நேரத்தில் நம் காலை கூட பதம் பார்க்கும் கூரிய கலப்பைகள் இல்லை

ஏறு பூட்டிய நுகங்கள் இல்லை

அத்தி கொழுந்து இல்லை 

இழந்தை கொழுந்திற்கோ இனி வேலை இல்லை 

தெப்பக்குளம் கட்ட காலையிலிருந்து சானி சேகரிக்க வேண்டியதில்லை

காப்பு கட்டுவார்கள் என பட்டி காக்கவில்லை

காவி பூச இனி அவசியமில்லை

மஞ்சள் கொத்துக்கள் வாங்கவேண்டியதில்லை

காவல் காக்கும் இரண்டு நாய்கள் இல்லை

உறவினருக்கு இனி இடமில்லை 

மாலை நேரத்தை எதிர் நோக்கும் குழந்தைகள் இல்லை

கட்டில் போட்டு அமர பெரியோர்கள் இல்லை

பட்டி பொங்கல் வைக்க மங்கைகள் இல்லை

சாமி கும்பிட இங்கு ஆட்களும் இல்லை

விளக்கு மாவு எடுக்க இன்றய குழந்தைகளுக்கு தெரிவதில்லை

"அரசனம் பட்டியாரே அரசனம் கைத்தண்ணி பட்டியாரே கைத்தண்ணி 
உண்ணுன்னு பட்டியாரே உண்ணுன்னு
வாய்கழுவு பட்டியிரே வாய்கழுவு"
இவ்வார்த்தைகள் காதுகளில் கேட்கவில்லை

கொடுத்ததும் பிரசாதம் உண்ணும் மாடு இல்லை

வருடத்தில் ஒரு நாள் விருந்து உண்ணும் சங்கராந்தி(நாய்) இல்லை 

வென்பொங்கலில் விருந்து உண்ணும் பழக்கமும் இல்லை

பல பொறியல் கூட்டு பலகாரம் இல்லை

கொட்டு கொட்டி தெப்பக்குளத்தில் கன்றுகள் ஓட்ட சிறுவர்கள் இல்லை

சூந்தாடும் இளைஞர்கள் இல்லை 

பால் பொங்க வைத்து அடுப்பு அனையவில்லை

இறுதியாய் கொல்லிக்கட்டையில் சுத்திப்போடும் பெரியவர்கள் இல்லை..

தலையில் சும்மாடு கூட்டி பொருட்கள் அனைத்தும் வீடு கொண்டுவர அவசியமில்லை

இது அனைத்தும் இருந்தது அன்று..

எதுமே இல்லை இன்று.. அனைத்தும் கண்டு பழகி அதில் வாழ்ந்தவன் நான் இன்று வீட்டிலேயே தொலைக்காட்சி முன் கழிகிறது மாட்டுப்பொங்கல் , மனக்குமுறலுடன்...

ஈடு கட்ட முடியாத இழப்புடன் வாழ்க்கை... 
மூலதனமான விவசாயமே இல்லாத கிராமங்கள்...
உணவுக்கான பஞ்சம் வெகு தூரத்தில் இல்லை...
நம் பண்டய நாகரீகத்தை அழிக்க வெளியிலிருந்து ஒருவர் வர அவசியமில்லை..
விவசாயத்தையும் விவசாயியையும் மதிக்கும் குடியானவன் கூட குறைந்து விட்டனர்..

மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் சொந்தங்களே..

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...