Sunday, 23 October 2022

சுஜாதா பதில்கள்

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்.

கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? - 

பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

கேள்வி:  திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. 

பதில்:   திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை. 

கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –

பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி:  தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –

பதில்:  கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

கேள்வி:  லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? 

பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? 

பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! 

பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!

கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? 

பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? 

பதில்: சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

கேள்வி: ஊழல்பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? 

பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? 

பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? 

பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது? 

பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’.

கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? 

பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்...

சுஜாதாவை ருசிப்பவருக்காக....

Saturday, 22 October 2022

மருத்துவ கதை

11/10/2019.

எனக்கு மிகவும் பிடித்த மருத்துவக்கதையை இங்கே உங்களுக்கும் சொல்லப்போறேன்.

மரு. கோ. பிரேமா BHMS,

முதன்முறையாக செம்மை மரபுக்கூடலில் இரண்டரை வருடங்கள் முன்,மக்களிடம் தடுப்பூசி சார்ந்த வெளிப்படைத்தன்மைக்காக பேசிவருவதற்கு விருது வாங்கும்போது சொன்ன கதை. இன்று வரை பெரும்பாலான நிகழ்வுகளில் இந்தக்கதையே ஆரம்பப்புள்ளி. 

கதைக்கு போவோமா!

ஒரு சீனப்பழங்கதை. 
நவீனம் புகாத, பண்டமாற்றுமுறை புழக்கத்தில் இருந்த காலம் அது. 
நம்ம ஊருல இருக்கிறதுபோல அங்கயும் ஊருக்கு ஒரு மருத்துவச்சி வைத்தியர் இருந்திட்டு வந்தாங்க. 
அவங்களுக்கு அவங்க வாழ்வாதாரமா அவங்க மருத்துவ சேவைக்காக ஊர் மக்கள் முறை வைத்து தினமும் படி அனுப்பிருவாங்க. 
இந்தப்படி தினமும் மருத்துவர் வீட்டுக்கு சன்மானமா போகும்.
தினமும் சன்மானம்னா தினமும் வைத்தியம் பாக்கிறாரா? ரொம்ப கைராசி வைத்தியர்தான் போலனு தப்புக்கணக்கு போடாதீங்க. 
இந்தப்படி எப்பவேணா ஒருநாள் திடீர்னு நிறுத்தப்படும். எப்போ தெரியுமா?
எப்போ அந்தக்கிராமத்துல ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் குன்றி நோய்வாய்ப்படுறாரோ அன்னைக்கு மருத்துவருக்கு படி நிறுத்தப்படும். 
அப்புறம்?

அப்புறம் என்ன?
வைத்தியர் எவ்வளவு தீவிரமா அந்த நோயுற்றவரை ஆரோக்கியமடைய செய்றாரோ அன்னைல இருந்து தான் மீண்டும் படி மருத்துவர் வீடு வந்து சேரும்.

மருத்துவர் வேலை/சேவை செய்யும்போதுதானே படி கொடுக்கனும்? இதென்ன?! அவர் சும்மா இருக்கும்போது படி அளப்பதும், நோயாளிக்கு வைத்தியம் பாக்கும்போது படிய நிறுத்தி வைக்கிறதும்?!
என்னடா இது? புதுசா இருக்கா?
இல்லை!
இது ரொம்ப பழைய பழக்கம். சீனாவில. உண்மையாவே இருந்ததாம்!

அதாவது, மருத்துவரோட உண்மையான வேலைக்கு சன்மானம் தருவாங்க. 

அங்க அவருடைய  வேலை, நோய் வந்தபின்னால வைத்தியம் பாக்கிறது இல்லை. 

பின்ன?!

அந்தக்கிராமத்தில யாருக்கும் எந்த நோயும் வராம கிராமமக்கள் அனைவரும் ஆரோக்கியமா இருக்கவைக்கிறது தான் அவருடைய வேலையா பாக்கப்பட்டிச்சு.
அதனால எப்போ ஒருவர் நோயுருகிறாரோ அப்போ மருத்துவருக்கு சன்மானம் இரத்து. 
எப்பேற்பட்ட புரிதல் இது!!

இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க!
இன்னைக்கு இந்த யுக்தி மருத்துவத்துறைக்கு வந்திட்டா எப்படி இருக்கும்?!

போட்டியாவது நீட்டாவது ஆள்மாறாட்டமாவது! 

வீட்டுக்கு மொத்தம் நாலு நபர்கள் இருக்காங்களோ இல்லையோ, கண்டிப்பா மூன்று நோயாளி இருப்பாங்க!
உலகளவில் அதிக சன்மானம்/சம்பளம் பெறும் ஊதியங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மருத்துவத்துறை அதளபாதாளத்ததுக்கு போயிடும். 

ஒரு பய மருத்துவராகனும்னு கனா காணமாட்டாங்க! 😂
மருத்துவர் என்றாலே கடவுள்போல பார்க்கும் வழக்கமும் சீச்சீனு போயிறும்!
அப்பாடா!! 😂

இதேக்கதையோட ஆரம்பிச்ச ஊரையாடல்,  இரண்டு மணிநேரத்துக்கும் மேல போச்சு சென்னை பல்கலைக்கழகத்தில கடந்த வெள்ளி அன்று நடந்த சிறப்பு பொழிவில். 

பல கேள்வி பதில்களோடு போய்கிட்டே இருந்த நிகழ்வ கல்லூரி கேட் மூடுறதுக்குள்ள முடிப்போம்னு முடிச்சி கொடுத்தாரு தமிழ் இலக்கியத்துறை தலைவர், பேராசிரியர். பழனி அவர்கள். 

சிலரது மனதிலாவது , ஆரோக்கியம்னா என்ன? மருத்துவம் னா எப்படி இருக்கனும்? நடைமுறையில என்ன இருக்கு? என்னமாதிரி மாற்றங்கள் மருத்துவத்தில் வரவேண்டும்? போன்ற சில கேள்விகள் முளைத்திருந்தது பாக்கமுடிஞ்சது. 

நம்ம வேலை விதைகளை தூவிச்செல்வதுவே. 
அது மரமாவதும் காடாவதும் காலத்தின் நிர்ப்பந்தம்.

பிகு:
இதைத்தான் ஓமியோபதி தந்தை மாமேதை ஹானிமான், இப்படி சொல்லிருக்காரு. 
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு எதுவெல்லாம் நோய்க்காரணியாகுமோ, அவற்றை உணர்ந்து அறிந்து எவர் தன் சமூகத்திலிருந்து முறையாக அவற்றை நீக்குகிறாரோ, அவரே "ஆரோக்கியத்தின் பாதுகாவலர்" ஆவார்!~ மணிமொழி 4.
He is likewise a preserver of health if he knows the things that derange health and cause disease , and how to remove them from persons in health. ~ aphorism 4, Organon of Medicine. Dr. Samuel Hahnemann. 

https://www.facebook.com/1562622139/posts/pfbid0bRWCYWDZ26nHbMx897m69dE8vf54j7BvTyVVDsMz9wCtyj6DRPWNrZ9yMvhETtJkl/

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...