Saturday, 22 October 2022

மருத்துவ கதை

11/10/2019.

எனக்கு மிகவும் பிடித்த மருத்துவக்கதையை இங்கே உங்களுக்கும் சொல்லப்போறேன்.

மரு. கோ. பிரேமா BHMS,

முதன்முறையாக செம்மை மரபுக்கூடலில் இரண்டரை வருடங்கள் முன்,மக்களிடம் தடுப்பூசி சார்ந்த வெளிப்படைத்தன்மைக்காக பேசிவருவதற்கு விருது வாங்கும்போது சொன்ன கதை. இன்று வரை பெரும்பாலான நிகழ்வுகளில் இந்தக்கதையே ஆரம்பப்புள்ளி. 

கதைக்கு போவோமா!

ஒரு சீனப்பழங்கதை. 
நவீனம் புகாத, பண்டமாற்றுமுறை புழக்கத்தில் இருந்த காலம் அது. 
நம்ம ஊருல இருக்கிறதுபோல அங்கயும் ஊருக்கு ஒரு மருத்துவச்சி வைத்தியர் இருந்திட்டு வந்தாங்க. 
அவங்களுக்கு அவங்க வாழ்வாதாரமா அவங்க மருத்துவ சேவைக்காக ஊர் மக்கள் முறை வைத்து தினமும் படி அனுப்பிருவாங்க. 
இந்தப்படி தினமும் மருத்துவர் வீட்டுக்கு சன்மானமா போகும்.
தினமும் சன்மானம்னா தினமும் வைத்தியம் பாக்கிறாரா? ரொம்ப கைராசி வைத்தியர்தான் போலனு தப்புக்கணக்கு போடாதீங்க. 
இந்தப்படி எப்பவேணா ஒருநாள் திடீர்னு நிறுத்தப்படும். எப்போ தெரியுமா?
எப்போ அந்தக்கிராமத்துல ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் குன்றி நோய்வாய்ப்படுறாரோ அன்னைக்கு மருத்துவருக்கு படி நிறுத்தப்படும். 
அப்புறம்?

அப்புறம் என்ன?
வைத்தியர் எவ்வளவு தீவிரமா அந்த நோயுற்றவரை ஆரோக்கியமடைய செய்றாரோ அன்னைல இருந்து தான் மீண்டும் படி மருத்துவர் வீடு வந்து சேரும்.

மருத்துவர் வேலை/சேவை செய்யும்போதுதானே படி கொடுக்கனும்? இதென்ன?! அவர் சும்மா இருக்கும்போது படி அளப்பதும், நோயாளிக்கு வைத்தியம் பாக்கும்போது படிய நிறுத்தி வைக்கிறதும்?!
என்னடா இது? புதுசா இருக்கா?
இல்லை!
இது ரொம்ப பழைய பழக்கம். சீனாவில. உண்மையாவே இருந்ததாம்!

அதாவது, மருத்துவரோட உண்மையான வேலைக்கு சன்மானம் தருவாங்க. 

அங்க அவருடைய  வேலை, நோய் வந்தபின்னால வைத்தியம் பாக்கிறது இல்லை. 

பின்ன?!

அந்தக்கிராமத்தில யாருக்கும் எந்த நோயும் வராம கிராமமக்கள் அனைவரும் ஆரோக்கியமா இருக்கவைக்கிறது தான் அவருடைய வேலையா பாக்கப்பட்டிச்சு.
அதனால எப்போ ஒருவர் நோயுருகிறாரோ அப்போ மருத்துவருக்கு சன்மானம் இரத்து. 
எப்பேற்பட்ட புரிதல் இது!!

இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க!
இன்னைக்கு இந்த யுக்தி மருத்துவத்துறைக்கு வந்திட்டா எப்படி இருக்கும்?!

போட்டியாவது நீட்டாவது ஆள்மாறாட்டமாவது! 

வீட்டுக்கு மொத்தம் நாலு நபர்கள் இருக்காங்களோ இல்லையோ, கண்டிப்பா மூன்று நோயாளி இருப்பாங்க!
உலகளவில் அதிக சன்மானம்/சம்பளம் பெறும் ஊதியங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மருத்துவத்துறை அதளபாதாளத்ததுக்கு போயிடும். 

ஒரு பய மருத்துவராகனும்னு கனா காணமாட்டாங்க! 😂
மருத்துவர் என்றாலே கடவுள்போல பார்க்கும் வழக்கமும் சீச்சீனு போயிறும்!
அப்பாடா!! 😂

இதேக்கதையோட ஆரம்பிச்ச ஊரையாடல்,  இரண்டு மணிநேரத்துக்கும் மேல போச்சு சென்னை பல்கலைக்கழகத்தில கடந்த வெள்ளி அன்று நடந்த சிறப்பு பொழிவில். 

பல கேள்வி பதில்களோடு போய்கிட்டே இருந்த நிகழ்வ கல்லூரி கேட் மூடுறதுக்குள்ள முடிப்போம்னு முடிச்சி கொடுத்தாரு தமிழ் இலக்கியத்துறை தலைவர், பேராசிரியர். பழனி அவர்கள். 

சிலரது மனதிலாவது , ஆரோக்கியம்னா என்ன? மருத்துவம் னா எப்படி இருக்கனும்? நடைமுறையில என்ன இருக்கு? என்னமாதிரி மாற்றங்கள் மருத்துவத்தில் வரவேண்டும்? போன்ற சில கேள்விகள் முளைத்திருந்தது பாக்கமுடிஞ்சது. 

நம்ம வேலை விதைகளை தூவிச்செல்வதுவே. 
அது மரமாவதும் காடாவதும் காலத்தின் நிர்ப்பந்தம்.

பிகு:
இதைத்தான் ஓமியோபதி தந்தை மாமேதை ஹானிமான், இப்படி சொல்லிருக்காரு. 
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு எதுவெல்லாம் நோய்க்காரணியாகுமோ, அவற்றை உணர்ந்து அறிந்து எவர் தன் சமூகத்திலிருந்து முறையாக அவற்றை நீக்குகிறாரோ, அவரே "ஆரோக்கியத்தின் பாதுகாவலர்" ஆவார்!~ மணிமொழி 4.
He is likewise a preserver of health if he knows the things that derange health and cause disease , and how to remove them from persons in health. ~ aphorism 4, Organon of Medicine. Dr. Samuel Hahnemann. 

https://www.facebook.com/1562622139/posts/pfbid0bRWCYWDZ26nHbMx897m69dE8vf54j7BvTyVVDsMz9wCtyj6DRPWNrZ9yMvhETtJkl/

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...