Sunday, 19 June 2022

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா?

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா?

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?

நீங்கள் இதுவரை அருள்மிகு உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்; அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி; விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி; எந்த நாளாக இருந்தாலும் சரி;

பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும், இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும், வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும், கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்; பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;

உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்; அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக  கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!

3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;

உங்களுடைய அப்பா, அம்மா மற்றும் அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள், அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள் என்று முன்னோர்கள் அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு, அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பித்ருக்கள் உலகத்திற்கு செல்கிறார்கள்;

அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து, தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி,உருகி, அழுது, அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்; அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;
பல விதமான விலங்குகள், செடி, கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு, இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக ஆண் மனிதப் பிறவி எடுக்கும்; பசு பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்; அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது, அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!!

நாம் கிரிவலம் செல்லும் போது இதுவரை நாம் எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்திருந்தோமோ அத்தனை பிறவிகளும் நம்முடன் கூடவே ஆவி வடிவில் கிரிவலம் வரும்; அதனால் தான் யார் இந்த பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தீசர் உபதேசித்து இருக்கிறார்;

1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும், புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்; நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;

ஒருவேளை, இப்பிறவியில் ஒரே ஒரு முறை கூட அண்ணாமலை கிரிவலம் வராமல் வாழ்ந்துவிட்டால், நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்?

போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்; போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத்துணை,  வாரிசுகள், சொத்துக்கள், படிப்பு,

புகழ், வருமானம், லாபம், பெருமை, பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;

அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய், அவமானங்கள், கடன், வம்பு வழக்குகள், மாந்திரீகத்தால்  எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல், விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், ஏமாறுதல், துரோகத்தால் துவண்டு போகுதல், பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல், சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல், ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள், விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம், தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;

பல கோடி கர்மவினைகள் ஒரே ஒரு அண்ணாமலை கிரிவலத்தினால் தீர்கின்றன; அதே சமயம், இன்னும் பல ஆயிரம் கோடி கர்மவினைகளை நாமே முற்பிறவிகளில் உருவாக்கி வைத்திருக்கிறோம்;

உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்; பலருக்கு கடினமானதாக இருக்கும்; சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள், காலில் அடிபட்டு ரத்தம் வருதல், தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்; இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;

மிகவும் அபரிதமான தெய்வீக சக்திகளை ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே பெற முடியும்; அதை முறைப்படி பாதுகாப்பது நமது சுய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது;

பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்; அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்; ஜெர்ஸிப்பசுவால்  ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்;அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:

இரவில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை (நாய்களை) பார்க்கலாம்; அவைகளுக்கு உணவு பொருட்கள் தானம் செய்வது ஒரே நேரத்தில் பைரவரின் அருளையும், அண்ணாமலையாரின் ஆசிகளையும் அள்ளித் தரும் என்பதை மறக்காதீர்கள்;

நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால், உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்; விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்; மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்: அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது; ஆனால்,அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்; அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;

மழை பொழியும் போது சுவாமி தரிசனம் செய்வது நமது ரகசியக் குற்றங்களை மன்னித்து அரிய பெரிய வரங்களை அள்ளித் தரும்;மழை பொழியும் போது கிரிவலம் சென்றாலே அருணாச்சலேஸ்வரராகிய அண்ணாமலையார் நமது உணர்ச்சி மேலீட்டால் செய்த பாவங்களை மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம்; ஆனால், இது எப்போதாவது யாருக்காவது மட்டுமே அருளாக கிடைக்கும்;

இந்த வரிகளை வாசித்துவிட்டு, மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே, மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

(மேற்சொன்ன விடங்கள் அனைத்தும் அகத்தியர் விஜயம் நூலில் வெங்கட்ராம சித்தரால் சொல்லப்பட்ட ரகசியங்களை தொகுத்து பகிர்கிறேன்)

சர்ச் பலம்

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் யார், இந்த கட்டுரையைப் படியுங்கள், பெரும்பாலான மக்களுக்கு இது பற்றி தெரியாது
கார்ப்பரேட் மிஷனரிகள் இந்த நிறுவனத்தில் கவனம் செலுத்தவில்லையா?
  இந்த பிரச்சினை மிகவும் பற்றி எரியும் மற்றும் கவலைக்குரிய பிரச்சினை ஆகும்!

 இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் எது தெரியுமா?
  * அம்பானி?  இல்லை*
 அதானி?  இல்லை

அதிர்ச்சி அடைய வேண்டாம் மேலும் படிக்கவும்

300000 (மூன்று லட்சம்) கோடி சொத்து உள்ளவர்கள் வேறு எந்த நிறுவனமும் இல்லை!*
அது...  "தி சைரோ மலபார் சர்ச்", கேரளா!
இது 10000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது தன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது!

 மேலும் பல அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது!

 என் புரிதலில் இது ஒரு போலி வணிக அமைப்பு!

 இந்தியாவின் இந்த சொத்துக்களுக்கு உரிமையாளர் யார்? 

 பொறுங்கள்...
 அம்பானி?
 அதானி?

இதற்காக அதானியை எதிர்க்க முடியுமா? இந்தத் தொழிற்சாலை சார்ந்த வீடுகள் எல்லாம் அதைச் சுற்றியே இல்லை!

 நம்ப முடியவில்லையா???
 சரி, இப்போது இந்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள்!

அவர்களுக்கு உட்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் !
 01)👉 9000 பாதிரியார்
 02)👉 37000 கன்னியாஸ்திரிகள்
 03) 50 மில்லியன் தேவாலய உறுப்பினர்கள்
 04)👉 34 மறைமாவட்டங்கள்
 05)👉 3763 சர்ச்
 06 71 குருமார் கல்வி நிறுவனம்
 07👉 4860 கல்வி நிறுவனம்
 08👉 2614 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள்
 09👉 77 கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்

 * மொத்தம் 11000 சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் செயல்படுகின்றன!*
 
 அவர்களுக்கு மேலே உள்ள மிகவும் சக்திவாய்ந்த தேவாலயம் - "CMA"

  "CMA" க்குள் நாடு முழுவதும் 1514 நிறுவனங்கள் உள்ளன, 
அவற்றில் 
 பள்ளி
 கல்லூரி
 மருத்துவமனை
 மற்றும்
 அனாதை இல்லங்கள் உள்ளன!
 
அத்தகைய திருச்சபையின் 50 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளன!

இந்த தேவாலயத்தின் வருடாந்திர வருவாயை ஒப்பிட்டு பார்த்தால், எந்த நிறுவனமும் அவர்களை நெருங்கக் கூட முடியாது!

இந்த தேவாலயங்கள் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களுடன்  தொடர்புக் கொண்டுள்ளன, மேலும் வெளிநாடுகளில் இணைந்த நிறுவனங்களும் இதற்கு உள்ளன! இந்த தேவாலயத்தின் அனைத்து உறுப்பினர்களும் மலேசியாவை சேர்ந்தவர்கள் மற்றும் முழு நிர்வாக குழுவும் மலேசியாவை சேர்ந்தவர்கள்!
 
ஆயர் இந்த தேவாலயத்தின் மிகவும் சக்திவாய்ந்த குழு, அதன் தலைவர் பிஷப் மட்டுமே!

 SYRO மலபார் தேவாலயம் உலகின் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவு!
யாருடைய சொத்தால் யார் அந்தஸ்து அடைகிறார்!
 

வருமான வரி கூட கட்ட மாட்டார்கள்!
ஏனென்றால் அது ஒரு சிறுபான்மை  நிறுவனம்

 மேலும் அரசு இவர்களது சொத்து விவரங்களைக் கூட பார்க்க முடியாது!
 
 
இதனாலேயே இவர்களது உண்மையான செல்வம் இன்றுவரை நம் நாட்டில் உள்ள எந்த ஒரு அறிஞர், புத்திசாலி, விழிப்புணர்வு பெற்றவர்கள் என்கிறவர்கள், நேர்மையான, மனசாட்சி உள்ள தலைவர்களுக்கு கூட தெரியவில்லை!
ஏனென்றால் அவை தணிக்கை செய்யப்படவில்லை!🤔
 சிறுபான்மையினர் என்ற பெயரில், இந்த மாபெரும் புரட்டு வெளிப்படையாக இந்திய தேசத்திற்குள் நடக்கிறது!

இதுவும் ஒரு வகையில் கிழக்கிந்திய கம்பெனியின் அதே வியாபாரம்தான்!
 
நம் நாட்டின் அரசியல் சாசனமும் தலைவர்களும் இவர்களுக்கு முன்னால் கையாலாகாதவர்களாக இருப்பதுதான் இங்கு ஆச்சரியமான விஷயம்!
நம் நாட்டு அரசிடம் தன்னிடம் உள்ள நிலம் குறித்த முறையான கணக்கு எதுவும் இல்லை!

 யாரேனும் இதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றால்,  இவர்களுக்கு ஆதரவாக  ஆயிரக்கணக்கான மக்கள் புற்றீசல்களைப் போல போல ஒன்றுபட்டு நிற்கிறார்கள்!

ஆனால், நம் நாட்டிற்கு வரி கட்டும் டாடா, அம்பானி, அதானி ராம்தேவ் போன்றோராக இருந்தாலும் நாம் நம் சொந்த மக்களுக்கு எதிரானவர்கள், ஏனெனில் நாம் அவர்களை அறிந்திருப்பதால் அவர்களை எதிர்க்கிறோம்! நாட்டை குழிபறிக்கும் மிஷனரிகளை பற்றி நமக்கும் ஒன்றும் தெரியவதில்லை*!

அவர்களின் மொத்த செல்வத்தில் 50% கல்வி நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது!
 பெரும்பாலான இந்துக்களின் குழந்தைகள் விலை உயர்ந்த கட்டணம் செலுத்தி படிக்கும் இடங்களில், இந்த குழந்தைகள் இந்திய விழுமியங்களை  தவிர்த்து, அவர்களுக்கு கிறிஸ்தவ உணர்வு கொடுக்கப்படுகிறது.

இது மக்களை மதம் மாற்றும் பணம் ஆகும்!
சாதுக்களின் கொலையைத் திட்டமிடுவதர்கான பணம்.
இது நக்சலிசத்திலும் இன்னும் பல சதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.....?*

இந்து நிறுவனங்கள் நடத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் வரி விதிக்கப்படுகிறது!
 RTE போன்ற சட்டங்களும் உள்ளன!

இவர்கள் நடத்த்தும் கான்வென்ட் பள்ளிக்கு இது பொருந்தாது
அதன் மாபெரும் உண்மையைப் படித்து புரிந்து கொண்ட பிறகு,  உங்களின் ஒவ்வொரு அடியும் வரும் தலைமுறைக்கான முன்னேற்றப் படிகளை இந்த நாட்டில் உறுதியாக அமைக்கும்!

இப்போது நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

இப்போது இவற்றையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும், நம்முடைய சொந்தப் பணம் ஒரு நாளும் அவர்களின் வருங்கால சந்ததியினரால் விழுங்கப்படக்கூடாது!

இந்த பயங்கரமான உண்மையை அழிக்காமல் காப்பி பேஸ்ட் செய்யுங்கள்!
   
இதைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள்!

ஜெய் பாரத் ஜெய் ஹிந்த்

Tuesday, 14 June 2022

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ! 

இது கவியரசர் எழுதிய ஒரு அற்புதமான பக்திப் பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!  இந்தப் பாடலுக்கான ஒரு விளக்க உரையாக எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கட்டுரையை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  

இப்படி ஒரு அற்புதமான விளக்கவுரை தந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நண்பருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    

உண்மையிலேயே ஒரு அற்புதமான விளக்கத்தை அவர்  கொடுத்திருக்கிறார். 

"கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள்.

எங்கும் அவநம்பிக்கைகளும், அச்சங்களும், எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் இறைவனின் அருள்தன்மையை விவரிக்கும் இது போன்ற பதிவுகள் படிப்பதற்கே அத்தனை இனிமை தருபவை. சர்வ மங்கலம் தருபவை. இந்த ஒரு பதிவுக்குள் தான் எத்தனை எத்தனை வரலாறு. பீமனை ஆபத்திலிருந்து காத்தது முதல் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் வரை பல கிளைக்கதைகள் இப்பதிவில் உள்ளன.

கண்ணனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடிய கவியரசர், மேலும் கண்ணனைப் பற்றிப் பாட ஆசைப்படுகிறார். அதனால் கண்ணனைப் பற்றி, கண்ணனிடம் நன்கு பழக்கப்பட்டவர்களைக் கூப்பிட்டுக் கண்ணனைப் பற்றிக் கேட்க நினைக்கிறார். ‘கண்ணனுடன் நன்கு பழக்கப்பட்டவர்கள் யார், யார்?’ என்று சிந்தனை செய்யும் கவியரசருக்கு, முதலில் புல்லாங்குழல்தான் நினைவுக்கு வருகிறது.

‘புல்லாங்குழல் கண்ணனின்் கைகளில் தவழ்ந்ததோடு, அவன் உதடுகளிலும் பொருந்தி எல்லோரையும் மகிழ்விப்பதாயிற்றே.. வாசிக்கப்படாத நேரங்களில் கண்ணன் இடுப்பில் இருந்த பெருமையும் கொண்டதாயிற்றே.. அதனால்தான் கவியரசர் முதலில், புல்லாங்குழலைத் தந்த மூங்கில்களை அழைத்துப் பாடச் சொல்கிறார். அதுவும் யாரைப்பற்றி? புருஷர்களிலேயே உத்தமனான கண்ணனைப் பற்றி, தேவகியின் பிள்ளையான கண்ணன்தான் புருஷோத்தமன் என்று அமரசிம்மனின் அமரகோசம் (வடமொழி நிகண்டு) சொல்கிறது. ஆதிசங்கரரால் காப்பாற்றப்பட்ட அருமையான நூல் இது.

அதனால்தான் புல்லாங்குழலைப் புருஷோத்தமன் புகழ்பாட அழைக்கிறார்..

‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே..’

அடுத்தது, கவியரசருக்குக் கண்ணன் கங்கைக் கரையில் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்து விடுகின்றன. கங்கைக் கரைத் தோட்டங்களை அழைத்தால், அவை இங்கு வந்து நிற்குமா? புல்லாங்குழலைத் தந்த மூங்கில்களைக் கொண்டு வந்துவிடலாம். கங்கைக் கரைத் தோட்டங்களை எப்படி…?

அதனால் என்ன? கங்கைக் கரையிலேயே கண்ணன் செய்த இன்னொரு நிகழ்ச்சியும் கவியரசர் நினைவுக்கு வந்துவிடுகிறது. கங்கையில் பிராமணகோடி என்ற இடத்தில் ஆழம் மிகவும் அதிகமாக இருக்கும். பீமன் வழக்கப்படி அங்குதான் குதித்துக் குளிப்பான். அது தெரிந்த துரியோதனன், அதன் மூலமே பீமனை அழித்துவிடத் திட்டம் தீட்டுகிறான்.

பீமன் குதிக்கும் இடத்தில் (வெளியில் தெரியாதபடி) தண்ணீருக்குள் கூர்மையான ஈட்டிகளை நட்டு வைத்தான். அந்த ஈட்டிகளின் நுனிகளில் கடுமையான விஷம் பூசப்பட்டிருந்தன. அந்த விஷம் தண்ணீரில் கரையாதது. ஆனால் ரத்தத்தில் உடனே கரைந்துவிடும்.

‘பீமன் ஓடிவந்து குதிப்பான். ஈட்டிகள் அவன் உடம்பில் குத்தும். கடுமையான விஷம் உடனே அவன் ரத்தத்துடன் கலக்கும். பீமன் அவ்வளவுதான், அழிந்துபோய்விடுவான்.. ஆஹ்..ஆஹ்.. என்று எண்ணிச் சிரித்தான் துரியோதனன்.

பீமன் வழக்கப்படி குளிக்க வந்தான்.. ஓடிக் குதிக்க வேண்டியதுதான் பாக்கி.. அப்போது.. கண்ணன் அங்கே வந்துவிட்டான்.

‘பீமா! குதிக்கப் போகிறாயா? என்று பீமனிடம் பேச்சைத் துவக்கினான்.

பீமனும், ‘ஆமாம் கண்ணா! இதோ ஓ…டிப்போய் குதிக்கப் போகிறேன்’ என்று பதில் சொன்னான்.

அதற்குள் எதையோ உற்றுப் பார்த்தபடி கண்ணன் தண்ணீரை நெருங்கினான். அத்துடன் கையை நீட்டி பீமனை அருகில் அழைத்தபடியே.. ‘பீமா! சற்றுப் பொறு! அதோ பார்.. நீ குதிக்கும் இடத்தில், ஏதோ தெரிகின்றது’.. என்று சுட்டிக்காட்டினான்.

பீமன் கண்ணனை நெருங்கி, கண்ணன் சுட்டிக் காட்டிய இடத்தை உற்றுப் பார்த்தான். அங்கு, தண்ணீரில் பட்டும் படாததுமாகச் சில வண்டுகள் தாவிக் கொண்டிருந்தன. துரியோதனன் நட்டு வைத்திருந்த விஷ ஈட்டிகளின் மேல் பகுதியில்தான் அந்த வண்டுகள் தாவிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட பீமன், ‘ஆமாம் கண்ணா! சில வண்டுகள்’ என்று இழுத்தான்.

கண்ணன், இப்போது என்ன செய்யப் போகிறாய்? அவைகளைக் கொல்லக் கூடாது.. போ.. ஓடி வந்து அவைகளைத் தாண்டி குதித்து விடு! என்று யோசனை சொன்னான்.

இரக்க குணம் மிகுந்த பீமன் கண்ணன் யோசனையை அப்படியே ஒப்புக் கொண்டு வண்டுகளைத் தாண்டிக் குதித்தான். குளித்து விட்டுக் கரை ஏறினான்.

துரியோதனன் எண்ணம் பலிக்காதபடி கண்ணன் வண்டுகள் மூலம் பீமனைக் காப்பாற்றி விட்டான்.

கவியரசர் நினைவில் இந்த நிகழ்ச்சி நிழலாடுகிறது. மலர்கள் மலர்ந்திருக்கும் தோட்டம் மெளனமாகத்தான் கண்ணன் புகழைப் பாடும். ஆனால், அந்த மலர்களுடன் ரீங்காரமிட்டுப் பழகிய வண்டு, கண்ணன் புகழை ரீங்காரமிட்டுப் பாடுமே.. அதனால்,

வண்டாடும் கங்கை மலர்த்தோட்டங்களே.. எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களே..

என்று வாகான வார்த்தைகள் வந்து விழுகின்றன!

அடுத்து, இன்னும் யாரைக் கூப்பிடலாம் என்று எண்ணுகிறார், கவியரசர். அவர் நினைவில் அப்போது வந்தது மேகங்கள்தான். மழைபொழியும் மேகங்கள்தான் மெல்ல கர்ஜனை செய்தபடி முதலில் கண்ணனை தரிசித்தன.

இதைக் கவியரசர் சொல்லும்போது, வேறொரு அற்புதமான தகவலும் கிடைக்கிறது.

வி.ஐ.பிக்கள் வரும்போது.. பன்னீரைத் தெளித்தோ.. பூக்களைத் தூவியோ வரவேற்போம். சாதாரண வி.ஐ.பிக்களுக்கே இப்படி என்றால் ஜகத்குரு. க்ருஷண்ம் வந்தே ஜகத்குரும் என்று புகழ்பெற்ற கண்ணன் முதன் முதலில் திருவீதியுலா வருவது போல அதுவும் பிறந்தவுடன் வெளிக்கிளம்பி வரும்போது எப்படிப்பட்ட வரவேற்பை அளிக்க வேண்டும்? அதனால்தான் மழை மேகங்கள் பூத்தூவலாக மழைத்துளிகளைத் தூவி கண்ணனுக்கு ஒரு பெருத்த வரவேற்பை அளிக்கின்றன.

இதை உணர்ந்ததால்தான், கவியரசர் அந்த மேகங்களை அழைத்துக் கண்ணனைப் பற்றிப் பாடச் சொல்கிறார்.

பன்னீர் மலர்சொரியும் மேகங்களே.. எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே..

இதுவரை ‘புகழ் பாடுங்களே’ என்று சொல்லி வந்த கவியரசர், மேகங்களிடம் சொல்லும்போது மட்டும் ‘மெய்யழகைப் பாடுங்களே’ என்று சொல்லும் அழகைக் கவனிக்க வேண்டும்.

கண்ணனின் மெய்யழகை, திருமேனி அழகை முதலில் பார்த்தது மேகங்கள்தானே! அதனால்தான், கவியரசர் மேகங்களை அழைத்துப் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே.. என்று வேண்டுகிறார்.

கவியரசர் அடுத்து, ராகங்களை அழைத்துக் கண்ணன் பற்றிப் பாடச் சொல்கிறார். அதுவும் தென்கோடியில் இருந்து ராகங்களை அழைத்துப் பாடச் சொல்கிறார்.

கண்ணன் பிறந்தது வடக்கில்.. அதுவும் மதுராவில் அல்லவா பிறந்தான்? வடக்கே இருந்த ராகங்கள அழைத்து பாடச் சொல்லி இருக்கக் கூடாதா? தெற்கே இருந்து ராகங்களை ஏன் அழைக்க வேண்டும்?

கண்ணன் பிறந்தது வடக்கே என்று இருந்தாலும் கண்ணனைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களையும் கண்ணனையே கணவனாக அடைந்த ஆண்டாள் பாடல்களையும் தந்தது தென்திசைதான். ஆதிசங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆசார்யப் புருஷர்களில் இருந்து கண்ணனைப் பலவகையாகவும் பாடிய பாரதியார் வரை எல்லோரும் தோன்றியது தென்பகுதியில்தான். வடக்கில் இல்லை.

அது மட்டுமல்ல.. சங்கீதம், நாட்டியம் முதலான எல்லாக் கலைகளுக்கும் பிறப்பிடமே நம் பகுதியான தென்பக்கம்தான். அதனால்தான், நீண்ட கால அனுபவம் உள்ள தென்கோடியில் இருந்து ராகங்களை அழைத்துக் கண்ணனைப் பற்றிப் பாடச் சொல்கிறார் கவியரசர். வடகோடியில் இருந்து அழைக்கவில்லை.

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே.. எங்கள்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ்பாடுங்களே

‘பாடுங்களே’ என்று சொல்லிக் கவியரசர் அழைத்தவைகளில் இன்னொரு விசேஷமும் உண்டு. கவியரசரின் அழைப்புக்கு இணங்கி, புல்லாங்குழல், வண்டு, மழைபொழியும் மேகங்கள், ராகங்கள் முதலானவை எல்லாம் வந்து விட்டன.

கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் பாடியது போல, யாருமே ராமனின் குழந்தைப் பருவத்தைப் பாடவில்லை. நமக்கே தெரிந்திருக்கும் இது ராகங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? அதனால் அவைகளும் கண்ணன் தவழ்ந்ததைப் பாடிக் கச்சேரியை ஆரம்பிக்கின்றன.

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்

தாங்கள் அனுபவித்த கண்ணன், ‘இதோ இன்றும் குருவாயூரில் அருள் புரிந்து கொண்டிருக்கிறான்’ என்பதைக் குறிக்கும் முகமாகத்தான் ‘தவழ்ந்தான்’ என்று பாடாமல், தவழ்கின்றவன் என்று நிகழ்காலத்திலேயே பாடுகின்றனர்.

‘அவன்’ என்று தாங்கள் கண்ட கண்ணனைச் சுட்டி, அவன் தான் இதோ குருவாயூரில் என்கின்றன.

கண்ணனைப் பற்றிப் பாட ஆரம்பித்த அவைகளுக்கு, உடனே கண்ணனின் மதுரா நகரம் நினைவுக்கு வந்து விடுகிறது.

ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்.. என்று பாடுகின்றன.

மதுராவில் ஒரே ஒரு கொடிதான் என்கின்றன. அதாவது, இரண்டாவது கட்சி என்பது கிடையாது.

அதற்குக் காரணம், கண்ணனின் மதுரத் தன்மைதான். அதாவது இனிமையான தன்மை என்பது பொருள். மதுராவில் இருந்தவர்கள் அனைவரும் கண்ணிடம் தங்களை இழந்தவர்கள். அங்கே எந்த விதமான பேதமும் கிடையாது. உண்மைதானே! மதுரம் இருக்கின்ற இடத்தில் எப்படி பேதம் வரும்? தானே வந்து விடாதா ஒற்றுமை? இப்படி உண்மையிலேயே தங்களைக் கண்ணனிடம் ஒப்படைத்து அவன் ஆளுமைக்கே உட்பட்டிருப்பவர்களுக்கு ஒரு கவலையும் கிடையாது. ஆள்பவன் கண்ணன் என்னும்போது கஷ்டங்கள் வர வழியே கிடையாது.

அதெல்லாம் சரிதான்.. அந்தக் கண்ணன் துவாபர யுகம். அதுவில்லாமல், கண்ணன் ஆண்ட வட மதுரா இங்கிருந்து தூரம் ஆயிற்றே? நாங்கள் எப்படி அவனை தரிசித்து எங்கள் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்வது? என்ற சந்தேகம் வந்து விடுகிறதல்லவா? அதற்கு விளக்கம் பாடலின் அடுத்த வரியில் வருகிறது.

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்..

திருப்பதி தல புராணம், ஸ்ரீ வேங்கடேச்வரலீலா மகாத்மியம் முதலான நூல்கள் எல்லாம், கண்ணன்தான் திருப்பதியில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக வந்தான் என்று தெளிவாகக் கூறுகின்றன.

கண்ணன் செய்த திருவிளையாடல்கள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். எல்லாவற்றையும் யசோதை நேருக்கு நேராகவே பார்த்திருக்கிறாள். ஆனால், கண்ணனின் திருமணம் ஒன்றைக் கூட யசோதை பார்க்கவில்லை. ஒரு நாள் அவள் கண்ணனிடம் ‘கண்ணா ! எல்லோர் குறைகளையும் தீர்க்கும் நீ, என் குறையைத் தீர்க்கக் கூடாதா? என்று வேண்டுகிறாள்.

‘என்ன குறை தாயே’ என்று கேட்டான் கண்ணன்.

‘ஒவ்வொரு தாயும் தன் மகனுக்குத் திருமணம் நடப்பதைக் கண் குளிரப் பார்க்க வேண்டும் என்று நினைப்பாள். அந்த பாக்கியம் எனக்கு இல்லையே! உன் திருமணத்தை என்னால் பார்க்க முடியவில்லை! அந்தக் குறையை எப்படிப் போக்கப் போகிறாய்?’ என்று கேட்டாள் யசோதை..

‘அம்மா! கவலைப்படாதே! கலியுகத்தில் நான் ஸ்ரீநிவாசனாக அவதரிப்பேன்.. அப்போது மறுபடியும் நீயே எனக்குத் தாயாக வருவாய். உன் முன்னிலையிலேயே நான் திருமணம் செய்து கொண்டு, உன் குறையைத் தீர்த்து வைப்பேன்’ என்று கண்ணன் பதில் சொன்னான்.

கண்ணன் ஸ்ரீநிவாசப் பெருமாளாக வர, யசோதை வகுளமாலிகையாக வந்து ஸ்ரீநிவாசக் கல்யாணத்தில் தன் குறையைத் தீர்த்துக் கொண்டாள். இது திருப்பதி ஏழுமலையான் வரலாறு.

அதே கண்ணன், இதோ ஸ்ரீநிவாசப் பெருமாளாகத் திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கிறான்.. வாருங்கள் என்று பாடுகின்றன ராகங்கள்!!

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்..

(இதை ‘அருள்கின்றவன்’ என்று நிகழ் காலத்திலேயே கவியரசர் கண்ணதாசன் சொல்லி இருப்பதை உணரும்போது அவரது பக்தி நம்மை வியக்க வைக்கிறது).

இப்படி சுவராசியமாகக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போது, பாடிக் கொண்டிருந்த ராகங்களுக்கு ஓர் எண்ணம் வந்து விடுகிறது.

அடடா.. குருவாயூர் சொன்னோம். வட மதுரா சொன்னோம். திருப்பதியும் சொன்னோம். ஆனால், முக்கியமான அதுவும் மிகவும் முக்கியமான ஒன்றை விட்டு விட்டோமே.. சொல்லவில்லையே.. என்று நினைக்கின்றன.. என்ன அது?

திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்தான் அது.

வைஷ்ணவத்தில் ‘கோயில்’ என்று எந்தவிதமான அடைமொழியும் இல்லாமல் சொன்னால், அது ஸ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும். மற்ற கோயில்களைச் சொல்லும்போது ஊர் பெயரையோ அல்லது சுவாமி பெயரையோ சொல்லிச் சொல்வோம். ஆனால் ஸ்ரீரங்கத்தை மட்டுமே கோயில் என்ற தனிச் சொல்லால் குறிப்போம். வைஷ்ணவத்தில் ராஜதானியாகவே மதிக்கப்படுவது ஸ்ரீரங்கம்.

அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்..

என்று பாடுகின்றன.

மகான்கள், ராகங்களைப் பெண் தேவதைகளாகச் சொல்வார்கள். பாடிக் கொண்டிருக்கின்ற பெண் பாலான ராகங்களுக்குத் தங்களைப் போன்ற ஒரு பெண், ராஜ சபையில் கதறி அழுதது நினைவுக்கு வருகிறது. ஆம்.. அந்தப் பெண் திரெளபதிதான். மாபெரும் வீரர்களான கணவர்கள் ஐவர் இருந்தும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது, பாஞ்சாலி கண்ணனை நினைத்துக் கதறி அழுகிறாள்.

பாஞ்சாலியின் கதறல் குரல் பரந்தாமன் கண்ணன் காதில் விழுகின்றது. உடனே அருள் புரிகின்றான். பாஞ்சாலியின் துயரம் நொடிப் பொழுதில் விலகி விடுகின்றது.

ராக தேவதைகளின் மனதில் இந்த நிகழ்ச்சி நிழலாடுகின்றது. உடனே அவை,

‘பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்’

என்று பாடுகின்றன.

கூடவே, ‘அன்று பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்..’ என்றும் பாடுகின்றன..

பாஞ்சாலிக்கு அருள்புரிந்த கண்ணன் அப்போதே பாரதப் போரைத் தீர்மானம் செய்துவிட்டான். ‘சங்கை’ என்ற சொல்லுக்குப் (பகாப்பதமாகக் கொண்டால்) பயம், சந்தேகம் என்று பொருள்.

‘சங்கை எடுத்தான்’ பாஞ்சாலியின் மனதில் இருந்த பயத்தையும், சந்தேகத்தையும் நீக்கினான் கண்ணன்.

‘சங்கை எடுத்தான்’ என்ற சொல்லுக்குச் சங்கை முழக்கினான் என்ற பொருள் வரும் (பகுபதமாகக் கொண்டால் சங்கு+ஐ – சங்கை எடுத்தான்)

பாரதப்போர் ஆரம்பத்தில் உள்ள பகவத்கீதையில் கண்ணன் சங்கை முழக்கியதும் அதனால் உண்டான செயல்களும் அழகாக விளக்கப்படுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட சங்கை முழக்கினான். (மற்ற பாண்டவர்களும் தங்கள் சங்குகளை முழக்கினார்கள்) அந்தச் சங்கு முழக்க ஒலி திருதராஷ்டிர அணியினரின் இதயங்களைப் பிளந்திடச் செய்தது. இவ்வளவு நிகழ்ச்சிகளையும் மனக் கண்ணில் கண்டதால்தான் ராகங்கள், பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்.. என்று பாடுகின்றன..

சரி.. இதையெல்லாம் கண்ணன் செஞ்சு என்ன ஐயா பிரயோஜனம்? அடுத்தவன் சொத்தைப் பிடுங்கி பாண்டவர்களுக்குக் குடுத்துட்டாரே’ என்ற எண்ணம் வருகிறது அல்லவா? அதற்கு அடுத்த வரியில் ராகங்கள் விளக்கம் சொல்கின்றன.

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்..

கண்ணன், யார் சொத்தையே பிடுங்கி பாண்டவர்களுக்குத் தந்துவிடவில்லை. பாண்டவர்களுக்கு உரிமையான பங்கைத்தான் கொடுத்தான். என்று கவியரசர் கண்ணதாசனின் ராகங்கள் பாடுகின்றன.

சரி! இதனால் நமக்கு என்ன லாபம்? என்று தோன்றுகிறது. எங்கு போனாலும், எதைச் செய்தாலும் நமக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்கும் சாதாரண மனிதனின் சுபவாம் அது. பாடலின் முடிவில் அதற்கு விளக்கம் வருகின்றது.

நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்..

என்று பாடி ராகங்கள் கச்சேரியை நிறைவு செய்கின்றன.

கீதையை நாம் படிப்பதற்காகக் கொடுத்திருக்கிறான் கண்ணன். இங்குக் கீதையைப் பாடம் என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

பாடத்தை ஒருமுறை படித்தால் மனதில் பதியமாட்டேன் என்கிறது. பலமுறை படித்தால்தான் மனதில் பதிகிறது. இப்படிப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு மட்டும் பிரயோஜனம் இல்லை. பரீட்சை எழுதும்போது அதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் வேண்டும்.

அதேபோலத்தான் பகவத் கீதையையும் பலமுறை படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் பிரயோஜனமில்லை. வாழ்வில் அது செயலாகவும் பரிணமிக்க வேண்டும். அப்போதுதான் துயரங்கள் நீங்கும்! உயர்வு வரும்!!

இதை நினைக்கும்போது, கவியரசர் கண்ணதாசன் ‘பாடம்’ என்ற சொல்லை இங்குப் பிரயோகித்து இருப்பதில் உள்ள அதிசயத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

கவியரசர் பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பகவத் கீதையையும் சேர்த்துச் சொல்வது அவரது வழக்கம்.. உதாரணம்..

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் – அந்தப்
பார்த்தன் அவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்

ஆட்டுவித்தால் என்கிற பாடலில் மேற்கண்ட பிரயோகம் உள்ளது.

ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? இதை உணர்ந்து கொண்டால் கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீக ஞானம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

பாஞ்சாலிக்கு அருள் புரியும்போது, கண்ணன் நேருக்கு நேராக அங்கு வரவில்லை. தான் இருந்த இடத்தில் இருந்தபடியே மறைவாக அருள் புரிந்தான். ஆனால், அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்த போதே நேருக்கு நேராக அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தான்.

கண்ணா! மாயவனே! நீ நேரில் தோன்றாமல் பாஞ்சாலிக்கு அருள் புரிந்தபடி செய்தாலும் சரி, அல்லது நேரில் (தேரில்) இருந்தபடியே பார்த்தனுக்குப் பகவத் கீதையை உபதேசித்து அருள் புரிந்தபடி செய்தாலும் சரி.. எப்படியோ எனக்கு உன் அருள் கிடைக்க வேண்டும் என்கிறார் கவியரசர்.

இப்படித் தன்னை மறந்த நிலையில் கவியரசர் கண்ணதாசன் இருந்தபோது,

கண்ணதாசா! கவி மன்னா! என்று அழைக்கும் குரல்கள் கேட்கின்றன! நீர் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த அவர் கண்களில் புல்லாங்குழல், வண்டு, மேகம், ராகங்கள் முதலியவை தெரிகின்றன. கச்சேரியை முடித்துவிட்டுக் கவி அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு போவதற்காகத்தான் அவை அழைத்தன!

‘எங்கள் கண்ணனுக்கு உள்ள ஒரே ஒரு தாசனே! நாங்கள் சென்று வருகிறோம்.. விடை கொடுங்கள்! மறுமுறை நீங்கள் எப்போது அழைத்தாலும் நாங்கள் வருவோம்! என்று சொல்லி விடைபெற்று அவை போய்விட்டன.

அவைகளுக்கு விடை கொடுத்த கவியரசர், அந்த நிகழ்ச்சியை அப்படியே பதிவு செய்தார்.. அதுதான் ‘புல்லாங்குழல்’ என்ற பாடல்!

ஒற்றைப் பாடலில் ஓராயிரம் பொருள் வைத்து என்று நாம் குறிப்பிடுவதற்கு இந்த ஒரு பாடல் அர்த்தம் சொல்கிறதே!! கற்பக விருட்சம் போல் கற்பனைகளும் கருத்துக்களும் கைகூடிய நந்தவனம் என் மன்னன் மனம்! ஆம் கவிதையின் மன்னவன் – கண்ணதாசன் பாடல் என்பது ஏதோ எழுத்தல்ல! அவன் எழுதியதுதான் எழுத்து!! அத்தனையிலும் உள்ளது ஆயிரமாயிரம் கருத்து!! "

Friday, 10 June 2022

சிவபூஜை

சிவபூஜை :

ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு அண்டசம், சுவேதசம், உத்பிச்சம், சராயுசம் என நால்வகைப்படும். இவைகளின் விரிவு என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதமாகும். இவ்வாறுள்ள யோனிகளுள் மற்றை யோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயசித்தம் முதலியவற்றாலும் நீக்கி, மனிதப்பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாகும். இந்த அருமையாகிய மனிதப்பிறப்பைத் தந்தது பசுபதியாகிய பரமேசுவரனை மனசினாலே நினைத்தற்கும் வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும் கால்களினாலே வலம்வருதற்கும் தலையினாலே வணங்குதற்கும் செவிகளினாலே அவரது புகழைக் கேட்பதற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்திலுள்ள பிரமா, விட்டுணு முதலிய தேவர்களும் இப்பூமியிலே வந்து சிவபெருமானை அருச்சிப்பார்கள். ஆதலால் *கிடைத்தற்கரிய இச்சரீரம் உள்ளபோதே* சிவபூசை பண்ணி பரமபுருஷார்த்தத்தை அடைதல் வேண்டும்.

"இப்படி எவன் பக்தியினோடு சிவனைப் பூசிக்கிறானோ அவனுக்கு ஆதித்தியோதயத்தினால் இருள் நீங்குதல் போல பாபம் உண்டாவதில்லை; அவனுக்கு உற்பாதங்களும் கிரகபீடைகளும் அழிகின்றன; எல்லா வியாதிகளும் நீங்கப்பெற்றவனாகின்றான்; சிவசாயுச்சியத்தை அடைகிறான்" என்று சிவபூசையின் பயன் சொல்லப்பட்டிருக்கின்றது..

சிவபூசாவிதி (சிவஸ்ரீ ச.குமாரசாமி குருக்கள் - 1956 - இரண்டாம் பதிப்பு) என்னும் நூலின் உபோற்காதப் பகுதியில் இருந்து...

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...