Tuesday, 19 November 2024

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் குபேர கிரிவலம். சிலருக்கு இது பற்றி தெரிந்திருக்கும். பலருக்கும் இந்த குபேர கிரிவலம் பற்றி தெரிந்திருக்காது. அப்படி தெரியாதவர்கள் இந்த குபேர கிரிவலத்தை பற்றியும், அதன் மகிமையை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

​கிரிவலத்தின் மகிமை :
சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிரிவலமும் விதியையே மாற்றி எழுதக் கூடிய சக்தி வாய்ந்தது என சொல்வார்கள்.

திருவண்ணாமலையை எங்கு இருந்தும் நினைத்து, மனதார வழிபட்டாலே அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆன்மிக பூமியில் கிரிவல பாதையில் அடிக்கு 108 லிங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை அனைத்தையும் நினைத்து, வழிபட்டு, வலம் வந்தால் எத்தனை மகா புண்ணியம் கிடைக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் கிரிவலம் வந்தால் அளவில்லாத பலன்களை வாழ்க்கையில் பெற முடியும்.

#கோடீஸ்வர_யோகம்_தரும்_குபேர_கிரிவலம் :

நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் செய்த ஏதோ ஒரு பாவத்தின் பலனாக, கர்மவினையால் இப்பிறவியில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் செய்த கர்மவினைகளின் பலன்களில் ஒரு பகுதி நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி கர்மவினையின் பயனாக வரும் துன்பங்களில் ஒன்று தான் பணக்கஷ்டமும். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம். பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை உருவாக்கி தருவது தான் குபேர கிரிவலம்.

அதென்ன குபேர கிரிவலம்?
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேர லிங்கத்துக்கு தினப் பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாமும், நமது முன்னோர்களும் செய்த பாவங்கள் தீரும். நாம் மட்டுமல்ல நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச் செழிப்புடனும் வாழும் என்பது ஐதீகம்.

குபேர கிரிவலம் செல்லும் முறை :

கார்த்திகை மாத சிவராத்திரி அன்று ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும். இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க முடியாவிட்டால் வருத்தப்பட வேண்டாம். மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும். இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் குபேர லிங்கத்தில் வந்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிரிவலம் செல்வதற்கான விதிமுறைகள் :

* கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.

* கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.

* ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை) அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.

* கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேர கிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.

* கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது என்பதால் வீண் பேச்சுக்கள் இன்றி கிரிவலம் செல்ல வேண்டும் என்பது விதி.

* முடிந்தால் கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் , வஸ்திர தானம் செய்வது கோடி புண்ணியம்.

குபேர கிரிவலம் 2024

குபேர கிரிவலம் 29.11.2024 வெள்ளி காலை 9.06 முதல் 30.11.2024 சனி காலை 10.46 வரை இருக்கிறது.

Tuesday, 28 May 2024

கார் வைத்திருப்போர்களுக்கு

கார் வைத்திருப்பது இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பெருமைக்குரிய விசயம். அதற்கு பூ வைப்பது, சாமி படம் மாட்டி கோவில் ஆக்குவது, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கி காத்து கருப்பு விரட்டுவது, விசிட்டிங் கார்டை அப்படியே கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டுவது, சாலையைப் பாத்தா சமத்து சேலையைப் பாத்தா விபத்து என்று சமுதாயத்துக்குக் கருத்து சொல்வது என நம் மக்கள் செய்யும் அட்டகாசங்களை ஏகப்பட்டது எழுதலாம். 

கார் வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்களுக்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகர டப்பாவை கார் என்று நினைத்து வாங்கும் வாடிக்கையாளர், தயாரித்து விற்கும் கம்பெனிகள், அதை அனுமதிக்கும் அரசாங்கம் என மூன்று பேருக்கும் இதில் முறையே 33% பொறுப்பு உண்டு. 

கார் வாங்கியாயிற்று, ஓட்டுநர் உரிமம் இருக்கிறது, சாலைப் பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் தெரியும், வண்டியும் பணிமனையில் விட்டு முறையாகப் பழுது பார்க்கப்படுகிறது என்றாலும் சில கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தயாராக இருப்பது நமது பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதோடு தேவையற்ற சங்கடங்களையும் தவிர்க்க உதவும். அவை சில நேரங்களில் நமக்குப் பயன்படாவிட்டாலும், வழியில் பிரேக்-டவுன் ஆகித் தடுமாறிக்கொண்டு  நிற்பவர்களுக்கும் பயன்படும். 

காருடன் வந்த வீல் ஸ்பேனர், ஜாக், ஜாக் லீவர், ஸ்டெப்னி டயர், முன்னெரிச்சரிக்கை முக்கோணம், வீல் சோக் தாண்டி வேறு சில கருவிகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி முறையாக வைத்திருப்பது அவசியம். அப்படிப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களைப் பார்ப்போம். படத்தில் எண் இடப்பட்டிருப்பது படிப்பவர்களின் வசதிக்காக மட்டுமே; அதன் முக்கியத்துவம் கருதி அல்ல. 

1) Advance Warning Triangle:  முன்னெச்சரிக்கை முக்கோணம் ஒன்றைப்  புதிய வண்டியுடன் தருவார்கள். ஐந்து இலட்சத்துக்கும் குறைவான விலையுடைய கார்களில் அது பேப்பர் மாதிரிதான் இருக்கும். வெயிலில் நிறுத்தப்படும் கார்களில் நான்கைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் பொடிப் பொடியாக உதிர்ந்துவிடும்.

இரண்டு முக்கோணங்களை வண்டியில் வைத்திருப்பது அவசியம். சாலையோரத்தில் பிரேக்டவுன் ஆகி நிற்கும்போது பின்புறம் சிவப்பு முக்கோணத்தையும், முன்புறம் வெள்ளை முக்கோணத்தையும் வைக்க வேண்டும். மாநில சாலையாக இருந்தால் வண்டியில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால் நூறு மீட்டர் தொலைவிலும் வைக்க வேண்டும். நான்கு வழிச்சாலைகளில் பின்புறம் 50 மீட்டரில் ஒன்று, 100 மீட்டரில் ஒன்று என வைக்கவேண்டும்; முன்புறம் வைக்கத் தேவையில்லை. 

ஒருமுறையாவது அதை எடுத்து எப்படி விரித்து முக்கோணமாக மாற்றி சாலையில் வைப்பது என்று பார்க்கவும். பிரேக்டவுன் ஆனால் அதை வைப்பதற்கு கூச்சப்பட வேண்டாம். 'பரவால்ல விடு' என்ற அலட்சியமும் வேண்டாம். 'ரிப்பேர் ஆகி நின்ற கார் மீது, பின்னால் வந்த லாரி மோதி குடும்பமே பலி' என்று படித்த செய்திகளைப் புறக்கணிக்க வேண்டாம். 

2) சேஃப்டி லைட் & டார்ச் லைட்: 

5in1 எமர்ஜென்சி டார்ச் லைட் என்று ஆன்லைனில் கிடைக்கிறது. அதில் சிவப்பு எல்ஈடி விளக்கு விட்டுவிட்டு மின்னும்படி இருப்பதோடு டார்ச் லைட், சீட் பெல்ட் கட்டர், கிளாஸ் பிரேக்கர் உடன் அடியில் ஒரு காந்தமும் இருக்கும். வண்டி மீது நிற்க வைத்துவிட்டால் கீழே விழாது. இரவு நேரங்களில் மற்ற வண்டிகளுக்கு எச்சரிக்கை சமிக்கை காட்டுவதற்குப் பயன்படும். 

தண்ணீர் புகாத டார்ச் லைட் ஒன்று நல்ல பிராண்டில் வாங்கி வைத்திருக்கவும். நூறு ரூபாய்க்குக் கணக்குப் பார்க்ககூடாது. அதற்கு பேட்டரியை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடவும். சிலநேரங்களில் 5in1 லைட் சீனா தயாரிப்பு என்பதால் ஏமாற்றிவிடக்கூடும். 

ஏதாவது விபத்து நடந்த இடங்களில் உதவப் போனால் இரண்டு டார்ச் லைட்டுமே தேவைப்படும். அவசர காலங்களில் செல்போன் டார்ச் எதற்குமே உதவாது. 

3) Emergency Windshield Breaker cum Seat Belt Cutter: 

அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு ஆன்லைனில் கிடைக்கிறது. இதை ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் ஸ்க்ரூ போட்டு மாட்ட வேண்டும் அல்லது சீட் பெல்ட் கிளாம்ப்புக்கு கீழே பிளாஸ்டிக் கயிறு போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். டேஷ் போர்டுக்கு உள்ளே, மேலே, ஓரத்தில் எல்லாம் வைக்கக் கூடாது. வண்டி விபத்தில் சிக்கினால் முதலில் loose objects-தான் பறந்து சென்று வெளியில் விழும். 

வண்டி உருண்டு தலைகீழாகக் கிடக்கும்போது நமது உடல் எடை மொத்தமும் சீட் பெல்ட்டில் தொங்கிக் கொண்டிருக்கும். அப்போது பட்டனை அழுத்தி சீட் பெல்ட்டை யாராலும் கழட்ட முடியாது. அப்போது இதில் உள்ள பெல்ட் கட்டரில் அறுத்துவிட்டு கண்ணாடியை உடைத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டும். 

விபத்து நடக்கும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்துவிடுவதால் கை கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடிக்கலாம். அப்போது செய்ய வேண்டிய முதல் வேலை சீட் பெல்ட் கட்டரை எடுத்து அறுத்துவிட்டு வண்டியை விட்டு வெளியேறுவதுதான். பெட்ரோல் ஒழுகி எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கும் அபாயம் உண்டு. அதனால்தான் இந்த கட்டரை, ஓட்டுநர் சீட் பெல்ட்டுக்கு கீழே லாக் செய்து கையை விட்டதும் எடுக்கும்படி வைத்திருக்க வேண்டும். 

எந்தப் பொருள் உள்ளே கிடந்தாலும் பரவாயில்லை என போட்டுவிட்டு வெளியேற வேண்டும். கரிக்கட்டையாகி விட்டால் எது இருந்து என்ன பயன்? எல்லா இடங்களிலும் விபத்து நடந்தால் உடனே உதவ மக்கள் இருக்கமாட்டார்கள். பல இடங்களில் விபத்து நடந்ததை விடிந்த பிறகே மக்கள் பார்த்த கதைகள் ஏராளம். 

4) 10 மீட்டர் நைலான் கயிறு: 

ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும். உங்களது வண்டியில் உள்ள Tow hook-இன் அகலத்தைப் பார்த்துவிட்டு அதில் நுழையும் தடிமனில் வாங்கவும். சுண்டுவிரல் தடிமனில் இருந்தால் துணி காயப்போட மட்டுமே பயன்படும்; அதில் காரைக் கட்டி இழுத்தால் அறுந்துவிடும். 

பெரிய கார்களில் towing hook தனியாகக் கொடுத்திருப்பார்கள். அதை எடுத்து ஒருமுறையாவது முன்னும் பின்னும் மாட்டிப் பார்க்கவும். சிலர் அதை வீசி விடுவதுண்டு. எங்காவது சேற்றில் சிக்கி நிற்கும்போது இறங்கி ஹூக் எங்கே இருக்கிறது, எப்படி மாட்டுவது என்று முழிக்கக் கூடாது. கண்ட இடத்தில் மாட்டி வண்டியை இழுத்தால் ஏதாவது உள்பாகங்கள் உடைய வாய்ப்புண்டு. 

5) விசில்: 

காருக்கு எதற்கு விசில் என்று கேட்கக்கூடாது. 20 முதல் 200 ரூபாய் வரை உங்களுக்குப் பிடித்த விலையில் ஒரு விசிலை வாங்கி டேஷ்போர்டில் போட்டு வைக்கவும். சாவிக் கொத்தில் மாட்டியும் வைக்கலாம். 

யாரும் பார்க்க வாய்ப்பில்லாத பள்ளத்தில் வண்டி உருண்டு, நாமும் மாட்டிக்கொண்டால் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.  ஏதாவது வண்டி சத்தமோ வெளிச்சமோ வந்தால் விசில் அடித்து அவர்களது கவனத்தை ஈர்த்து நமது இருப்பிடத்தைத் தெரிவிக்க முடியும். 

(ஒருமுறை சென்னையில் இருந்து மசினகுடிக்கு சுற்றுலா வந்த ஐந்து இளைஞர்களது கார் கல்லட்டி மலைப்பாதையில் உருண்டு கீழே விழுந்துவிட்டது. நான்கு நாட்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் புகார் செய்து, காவல்துறையினர் அவர்களது செல் டவர் சிக்னலை வைத்து மலைப்பாதையில் தேடிக் கண்டுபிடித்தனர்.  நான்கு பேர் இறந்து உடல்கள் அழுகிய நிலையில் கிடக்க, ஒரு பையன் காருக்குள்ளே மாட்டிய நிலையில் உயிரோடு கிடந்திருக்கிறான். ஐந்தாவது நாள் மீட்டனர்)

சில நேரங்களில் - காவலர்கள் இல்லாதபோது - போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை ஒழுங்குபடுத்தவும் விசில், 5in1 டார்ச் போன்றவை பயன்படும். 

6) Jump Start Cable: 

தரமான ஜம்ப் ஸ்டார்ட் கேபிள் ஒன்றை அவசியம் வண்டி டிக்கியில் வைத்திருக்கவும். பேட்டரி இறங்கிவிட்டால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது எல்லா இடங்களிலும் சாத்தியம் இல்லை. எப்படி ஜம்ப் ஸ்டார்ட் செய்வது என்று அனுபவம் மிக்க ஓட்டுநர்களைக் கேட்கலாம்,  யூடிபில் ஏதாவது வீடியோ பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை. 

7) ABC Type தீயணைப்பான்: 

ஒரு கிலோ எடையில் ரீஃபில் பண்ணக்கூடிய ABC வகைத் தீயணைப்பானை வாங்கி ஓட்டுநருக்கு அடுத்த இருக்கையின் அடியில் பின்னால் இருந்து உள்ளே தள்ளி கட்டி வைக்கவும். Loose object-ஆக எங்கேயும் கிடக்கக்கூடாது. ஓட்டுநர் முகத்துக்கு அருகில் உள்ள தூணில் வைப்பதும் தவறு. விபத்து ஏற்படும்போது பறந்துவந்து கபாலத்தை உடைத்துவிடும். 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காலாவதி தேதி முடிந்தவுடன் அம்புக்குறி பச்சையின் மீது காட்டினாலும் ரீஃபில் செய்யவும். அந்த ரீஃபில் நேரத்தில் தீயணைப்பானை எப்படி பயன்படுத்துவது என்று குழந்தைகளுக்கோ, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கோ செயல்முறை விளக்கம் காட்ட உள்ளே இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் தீயணைப்பான்களை தவிர்ப்பது நல்லது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான். 

8) முதலுதவிப் பெட்டி:

கார் வாங்கும்போது தரப்படும் முதலுதவிப் பெட்டியோடு அப்படியே மறந்துவிடுவது பலரது பழக்கம். தனியாக ஒரு தரமான பெட்டி வாங்கி, ஒவ்வொரு பொருளையும் மெடிக்கலில் காலாவதி நாளைப் பார்த்துவிட்டு வாங்கி அதில் போட்டு வைக்கவும். 

ரெடிமேட் முதலுதவிப் பெட்டிகளைத் தவிர்க்கவும். மெடிக்கல்களில் கேட்டாலே என்னென்ன தேவை என்று சொல்வார்கள். வருடம் ஒருமுறை அதைப் பார்த்து காலாவதியானவற்றை எடுத்துவிட்டு அப்கிரேடு செய்யவும். 

பஞ்சு, கையுறை, கட்டுத் துணிகள் போன்றவை நிறையவே இருக்கட்டும். நாம் போகுமிடமெல்லாம் வரக்கூடிய முதலுதவிப் பெட்டி என்பதால் கஞ்சத்தனம் பண்ணாமல் நிறைய வாங்கி வைக்கவும். 

வேறு யாராவது காயமுற்றதைப் பார்த்தால்கூட வண்டியை நிறுத்தி உங்களது முதலுதவிப் பெட்டியில் உள்ளவற்றைத் தாராளமாகக் கொடுத்து உதவுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் பயன்படட்டும்; இல்லாவிட்டடால் அது ஒருநாள் காலாவதியாகி, தூக்கிப் போட்டுவிட்டு மாற்றத்தானே போகிறோம்? 

9) குடை:

தினசரி காரை எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்வபவராக இருந்தால் தனியாக ஒரு குடையைக் காருக்கென்றே டிக்கியில் வைத்திருங்கள். மழைக்காலத்தில் தினமும் வீட்டிலிருந்து கிளம்பும்போது மறக்காமல் குடையை எடுத்துச்செல்வது சாத்தியமில்லை. 

பிரேக்டவுன் ஆகி நிற்பது என்பது எப்போதுமே நாம் எதிர்பாராத நேரத்தில்தான் நடக்கும்.  மொபைலில் சார்ஜ் இருக்காது, சார்ஜ் போட வண்டியில் கேபிள் இருக்காது, பின்னிரவு நேரமாகியிருக்கும், மழை கொட்டும், மின்சாரம் இருக்காது, அக்கம்பத்தில் ஒரு கிலோமீட்டருக்கு யாருமே இல்லாத இடமாக இருக்கும், பசி வயிற்றைக் கிள்ளும், குடிக்கத் தண்ணீரும் இருக்காது. அப்படி ஒரு நேரத்தில்தான் மேலே பார்த்த பலவும் எப்படிப் பயன்படும் என்பதை உணர முடியும். 

10) ஆவணங்கள்:

வண்டியின் RC, காப்பீடு, PUC, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் நகல் கட்டாயம் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டும். வருடம் ஒருமுறை புதிய நகல்களை வைத்துவிட்டு பழையதை அப்புறப்படுத்தவும். ஒருஜினல் தேவையா இல்லையா என்கிற பஞ்சாயத்து அப்புறம்தான். 

வண்டியில் அலுவலக வயர்லெஸ், ஹாம் ரேடியோ போன்றவற்றை வைத்திருந்தால் கண்டிப்பாக அதற்குரிய ஆவணங்களின் ஒரு பிரதி இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிவிட்டால் ஆவணங்கள் மட்டுமே பேசும். 

ஒரு சிறிய தரமான பிளாஸ்டிக் பெட்டி வாங்கி அதில் முதலுதவிப் பெட்டி, குடை, ஜம்ப் ஸ்டார்ட் கேபிள், கயிறு, wheel choke போன்றவற்றைப் போட்டு வைக்கவும். டிக்கியிலும் loose object-களாக எதுவும் கிடக்கக்கூடாது. 

ஒவ்வொருவரின் தொழிலுக்கேற்ப சில கருவிகளை அன்றாடம் எடுத்துச்செல்ல வேண்டி வரும். அவற்றை அதற்குரிய பெட்டி, உறைகளில் வைத்து முறையாக வைத்து எடுத்துச்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சோதனைச் சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு தர்மசங்கடம் ஏற்படும். 

அரிவாள், கத்தி போன்றவற்றை சீட்டுக்கு அடியில் சொருகி வைத்திருப்பதை எல்லாம் தவிர்க்க வேண்டும்; அது சட்டப்படி குற்றமாகும். 

டேஷ்போர்டில் கத்தி, திருப்புளி, ஆணி, ஸ்பூன், ஃபோர்க், இரும்புக் கம்பித் துண்டு போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக்கூடாது. பின் சீட்டின் மேல் டிபன் பாக்ஸ், லேப்டாப் என எதுவுமே இருக்கக்கூடாது. விபத்து ஏற்படும்போது அவை projectile ஆக மாறி திடீரென பறந்துவந்து ஆளைக் கொன்றுவிடும். 

டிக்கியில் ஏதாவது கனமான பொருளை வைத்தால் கண்டிப்பாக தரமான கயிறு போட்டு கீழே ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வைக்கவும். 'பரவால்ல விடு' என்று சொல்லி கிளம்பிச்சென்று விபத்துக்குளாகி டிக்கியில் இருந்த சாமான்கள் பின்சீட்டைக் கிழித்துக்கொண்டு சென்று முன் சீட்டில் இருந்தவர்களையும் காலி செய்த சம்பவங்கள் நிறைய உண்டு. 

விபத்து அல்லாத பெரும்பாலான பிரேக்டவுன்கள் டயர் அல்லது பேட்டரி தொடர்பாகவே இருக்கும். எனவே டயர், பேட்டரி பராமரிப்பில் கஞ்சத்தனம் கூடாது. பஞ்சரான டயர், ஒட்ட முடியாத அளவுக்கு சேதமாகிவிட்டது என்று பஞ்சர் கடையில் சொன்னால் கவுரவமாகச் சென்று புதிய டயர் மாற்றிக்கொள்ள வேண்டும். அதை அடுத்தடுத்த பஞ்சர் கடைகளுக்கு எடுத்துச்சென்று வல்கனைஸ் பண்ணி சரி பண்ணும் அதிபுத்திசாலித்தனம் ஒரு நாளைக்கு மொத்த குடும்பத்தின் நிம்மதியையும் பறித்துவிடும். 

'அதெல்லாம் நமக்கு நடக்காது' என்கிற அதீதத் தன்னம்பிக்கைக்குப் பெயர் குருட்டு நம்பிக்கை. அந்தக் குருட்டு நம்பிக்கை ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் நம்மை படுகுழியில் தள்ளிவிடும். 

நமது பாதுகாப்புக்கும், நம்மை நம்பிக்  காரில் உட்கார்ந்து வருபவர்களது பாதுகாப்புக்கும் நாமே பொறுப்பு. எதையெல்லாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமோ, எதையெல்லாம் முன்கூட்டியே கணித்துத் தவிர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்துவிட வேண்டும்...

Monday, 4 March 2024

வரி

*வாங்கும்_சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு).   மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல்  மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். மொத்தத்தில்  சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) தருகிறோம்.*

*ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்ந்துள்ளவர்களை பார்த்து...*

*LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?* என கேட்பவர்கள் கவனிக்க

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….
————-

#எங்கள்_மதிப்பிற்குரிய_பிரதமர் #அவர்களுக்கு...

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– *நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் – இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும், அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?*

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனி விமானம், தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?

– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– *நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை...!* …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
*நீங்கள் அனைவரும் என்றைக்கு, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ... அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!*
                   🙏
🙋🙋🙋🙋🙋🙋🙋

*இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,*

நன்றி !!

Friday, 23 February 2024

பசு மஞ்சள் தூள்..

பசுமஞ்சள் தூள் Vs மஞ்சள் தூள்

1.மஞ்சள் தூள்
 மஞ்சளை அறுவடை செய்த பின் அதை வேகவைத்து காயவைத்து பாலிஷ் செய்து பொடியாக்குவது மஞ்சள் தூள்.

2.பசு மஞ்சள் தூள்
மஞ்சளை அறுவடை செய்த பின் வேக வைக்காமல் சிறுசிறு துண்டுகளாக வெட்டி காயவைத்து பொடியாக்குவது *பசு மஞ்சள் தூள்*.

கடந்த வருடம் ஒரு மஞ்சளை மேற்கண்ட இரண்டு முறைகளிலும் தயார் செய்து ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தினோம். மஞ்சள் தூளில் உள்ள *குர்குமின்* அளவு 3.4% ஆக இருந்தது. இதே பசு மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் அளவு 3.9% ஆக இருந்தது.

நிறைய ஆயுர்வேத மருத்துவர்கள் பசு மஞ்சள் தூளை சமையலுக்கு பயன்படுத்த பரிந்துரை செய்கிறார்கள். பசு மஞ்சள் தூள் வருடம் முழுவதும் கிடைப்பது கடினம். காரணம் அறுவடை முடிந்து இரண்டு மூன்று மாதங்களில் முளைப்பு வரத் தொடங்கி விடும். நஞ்சில்லாமல் விளைவிக்கப்பட்ட பசு மஞ்சள் தூள் பல நோய்களை தீர்க்கும்.!

Wednesday, 12 July 2023

இஞ்சி

*நூறு டாக்டர்கள் இருக்காங்க  
கால் கிலோ இஞ்சில.

*இஞ்சியை கறிக்கு டீக்கு
*மட்டுமே யூஸ் பண்றோம்.

*பாருங்க இஞ்சி இருந்தால்

*உங்களுக்கு எவ்வளவு

*வெட்டி

*செலவு மிச்சம் என்று!

*நோய்களை  நீக்குவதில்
*இஞ்சி  சமையலறை மருத்துவர்!

*1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

*2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

*3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

*4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

*5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

*6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

*7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

*8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

*9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

*10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

*11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

*12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

*13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

*14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

*15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

*16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

Wednesday, 28 June 2023

எழுமிச்சை - ஆன்மிகம்

எலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர்... 
      எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது...            

எலுமிச்சம்பழம் உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது. 

ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும். எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு.

ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும். எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள்.

"பதார்த்தகுண சிந்தாமணி" என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது.

முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா். மாரியம்மன் கோயில், காளி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சோ்த்து எலுமிச்சம் சாதம் நைவேத்தியம் செய்து பின் சாப்பிட்டால் தீராத நோய்கள் விலகும்.

செவ்வாய் மாலை எலுமிச்சம் சாதம் சூடாக நைவேத்தியம் செய்யலாம். முடிந்தால் எலுமிச்சம் சாதம் அன்னதானமும் செய்யலாம். எலுமிச்சை அதீத சக்தியைப் பற்றிய நூல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை. மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. 
மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.

நம் வலது கையில் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து நாம் ஒருவரை எண்ணினால் நம் எண்ணம் நாம் எண்ணியவரிடம் போய் அலை அலையாய்த் தாக்கும். அக்காலத் ரெலிப்பதி முறை இதுதான்.
ஒரு பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு சூரியக் கலையில் சுவாசம் செய்து கொண்டு பல கிரகங்களுடன் தொடா்பு கொள்ளலாம்.
கொடி எலுமிச்சை என்பது ஒரு வகை. அது பெரிதாக முட்டை அளவிருக்கும். அதைக் கையில் வைத்து எந்த மத தேவதைகளையும் மந்திரம் சொல்லி அழைக்கலாம். கொடி எலுமிச்சையை சாதாரண எலுமிச்சையுடன் கலந்து விற்பார்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை விலை பேசாமல் வாங்கி தெய்வ ஆகா்ஷண மந்திரத்தையும், பிதுா் ஆகா்ஷண மந்திரத்தையோ அதில் தினம் உரு ஏற்ற வேண்டும். அதைப் பூஜை அறையில் வைத்து வர வேண்டும்.

40 நாளில் அந்தப் பழம் நாம் வேண்டிய தெய்வத்தை அல்லது ஆவியை ஈா்த்துக் கொண்டு வரும். நாம் மனதில் எண்ணுவது அதற்குத் தெரியும். வீட்டில் அனைவரும் பேசும் பேச்சுக்களைப் பதிவு செய்யும்.

அதனால் வீட்டின் முகப்பில் எலுமிச்சம் பழம் கட்ட வேண்டும். வீட்டுக்குள் நுழைபவா்களின் எண்ணம் நம்மைத் தாக்குவதில்லை. மேற்படி பழ வலிமையால் அவா்கள் எண்ணம் அங்கேயே தடுக்கப்படுகின்றது.
எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை புருவ மத்தியில் இட்டுக் கொண்டு வந்தால் நெற்றிக் கண் திறக்கும்.

அமாவாசையில் சுடுகாட்டுக்குப் போய் தனக்கு அடிமையாக இருக்க விரும்பும் ஆவியை வா.. என எண்ணி எலுமிச்சம் பழத்தை எறிந்து விட்டு வந்து விடுவார்களாம். பெளா்ணமிக்கு மேற்படி பழம் ஒருநாள் இரவு அவா்கள் கால் மாட்டில் கிடக்குமாம். அதை எடுத்துத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுவார்களாம். அந்த ஆவி சாப்பிட்டவா்கள் உடலுக்குள் போய்விடுமாம். அதனை ஏவி மாந்திரீகா் தொழில் பார்ப்பார்களாம். இள வயதில் மாந்திரீக நண்பா் சொல்லக் கேட்டது இது.

கேரளாவில் ஆவி பிடித்தவனை உட்கார வைத்து ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து, அவன் தலையைச் சுற்றி வலது புறமாக ஒரு சுற்று சுற்றுகிறார்கள். பின் ஒரு குண்டூசி எடுத்துப் பழத்தின் தலைப்பக்கம் குத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே தலைப்பக்கம் குத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே பழத்தை இடது பக்கமாக அவன் தலையைச் சுற்றி எடுத்துப் பழத்தின் கீழ்ப்பக்கம் குத்துகின்றனா்.
பின்னா் வலது பக்கம், இடது பக்கம் மாறி மாறி சுற்றி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு குண்டூசியாகப் பழத்தில் குத்துகின்றனா். பழத்தின் மேல் பக்கம் ஒரு குண்டூசி சுற்றிவர 25 குண்டூசிகள் ஆக மொத்தம் 27 சிறு குண்டூசிகள்! அவனைப் பிடித்த பீடை விட்டு விடுகின்றது. பிறகு உடனே அதை ஓடும் தண்ணீரில் போட்டு விடுகின்றனா். இதை நேரில் கண்டேன்.

தன் குல தெய்வம் எது என்று தெரியாதவா்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி, என் குல தெய்வமே! நீ எங்கிருக்கிறாய்? என மனமுருகி வேண்டி வீட்டில் வைத்துவிட வேண்டும். தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். 9 நாள் கழித்து, அதை அருள்வாக்கு சொல்பவரிடம் கொடுத்தால் உங்கள் குல தெய்வம் எங்குள்ளது என எளிதாகச் சொல்லி விடுவார்கள்.

தெய்வங்களை உபாசனை செய்பவா்கள் பழத்தில் தெய்வ மந்திரத்தை மூன்று தினங்கள் உரு ஏற்றி, பின் அதன் சாற்றில் தண்ணீா் பிட்டு, வெல்லம், ஏலக்காய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் சித்தி கிடைக்கும்.

சில சாதுக்கள் உரு ஏற்றிக் கொடுக்கும் பழம் வெகுநாள் வரை கெடாது. சில போ் உரு எற்றிக் கொடுக்கும் பழம் சில தினங்களில் அழுகி விடும்.

மந்திரவாதிகள் கொடுக்கும் பழம், நம் குடும்ப நிகழ்ச்சிகளை அவருக்கு அறிவித்துக் கொண்டே (Transmit)    இருக்கும். அதன் மூலம் அவா் உங்களை ஆட்டுவிப்பார்.

தைமாதப் பிறப்பன்று அல்லது புதுவருடம் பிறப்பன்று. அருளாளா்களையோ, எஜமானா்களையோ பார்க்கப் போகும்போது, அவசியம் எலுமிச்சம்பழம் கொண்டு செல்ல வேண்டும் நம் நல்ல எண்ணத்தை அதன் மூலம் அவா்களுக்குச் சமா்ப்பிக்க வேண்டும்.

எலுமிச்சையை வைத்து அனேகா் அபிசாரப் பிரயோகம் செய்கின்றனா். அதை நான் எழுத விரும்பவில்லை.
ஆந்திர மந்திரவாதிகள் எலுமிச்சம் பழத்தில 40 நாள் வசிய மந்திரம் உரு ஏற்றுகின்றனா். பின் அதைக் கருக்கிக் கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, அரகஜா, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், புனுகு சோ்த்து, காராம்பசு நெய்விட்டு அரைக்கின்றனா் பின் மீண்டும் அதற்கு வசிய மந்திரம் உருவேற்றி, வசியத் தொழில் செய்து பல லட்சம் சம்பாதிக்கின்றனா்.

பிரபல விஞ்ஞானி G.D  நாயுடு எலுமிச்சை விதைகளைக் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு மருந்து கண்டுபிடித்தார்.
எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.

ஐம்பது மில்லி சாற்றில் ஒரு பவளத்தை அல்லது கடல் சோழியையோ தட்டிப் போட்டால் ஒரு மணி நேரத்தில், அவை கரைந்து போகும். இதற்கு பயோ கால்சியம் (Bio – Calcium) என்று பெயா்.
மருளாடிகளின் சாமி ஆட்டத்தைக் குறைக்க எலுமிச்சம் பழம், வெல்லம், ஏலக்காய் போட்ட பானத்தைக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே!
சில பள்ளிச் சிறுவா் – சிறுமிகள் பிடிவாத குணம் கொண்டவா்களாகவும், கண்ணில் கண்ட பொருள்களை எடுத்து உடைப்பவா்களாகவும் இருப்பார்கள். பிறவியிலேயே அவா்களுக்குச் சில நரம்புகள் இறுகியிருக்கும். அதைத் தளர்த்தினால்தான் அவா்களின் கோபம் பிடிவாதம் மற்றும் டென்ஷன் போகும்.
அவா்களுக்கு ஒரு டம்ளா் தண்ணீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது வெல்லம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டுக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
அல்லது எலுமிச்சம்பழ சா்பத் குடிக்கக் கொடுக்கலாம். பகல் 12.00 மணிக்கு ஒரு நேரம் மட்டும் கொடுக்கவும். ஒன்பது நாள் மட்டும் இப்படிக் கொடுக்கவும். பின் கொடுக்க வேண்டாம். குணம் தெரியும்.
எலுமிச்சம் பழத்தில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. இதை விஞ்ஞான பூா்வமாக ஆராய்வது நல்லது. 
ஆன்மிகத்திற்கு எலுமிச்சம்பழம் ஒரு சிறந்த துணை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை......
   
        - மஹா மந்திர போதிணி நூலில் இருந்து.....

Saturday, 18 March 2023

கோவைக்காய்

🎤🙏🏻கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்

கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்

முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்

தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்

அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்

பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்

வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்

நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்

மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்

கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்

வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?

பாரத பூமி புண்ணிய பூமி
பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்...

பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!!


ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?

அரசும் மீடியாவும் பிரபலங்களும்...

'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!

ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.

ஏன்? 

இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி,மருத்துவமனை,
அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....

அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே  இருக்காது.

ஏன்? 

எங்கெல்லாம் 
புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு 
அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.

விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும். 

அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.

பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.

அப்பொழுதும் கூட அந்த மக்கள் 
காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.

எனக்குத் தெரிந்து ...

ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.

நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.

ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 

மா பலா நாவல் அத்தி கொய்யா....
என்று எத்தனை மரங்கள் உள்ளன.
அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?

நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.
காரணம்...
MMMC: mass media mind control.

"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.

தொடர்ந்து மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
கனியை மறந்தான்.

கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .

ஆனால் இதையெல்லாம் தடுத்து 
கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.

 அதையெல்லாம் ஏதோ 
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
 தின்னு 
உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.

 கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.

நல்லா புரிஞ்சிக்குங்க...
 'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட்  தெளிவா செயல்படுறாங்க.

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.

அதை முழு முற்றாகத் தடுத்து,

'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..

நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...

கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்
 மற்றும் 
அனைத்து இடங்களிலும் 

மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும். 

தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.

நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.

உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.

நீங்கள் 
மீண்டும் மீண்டும்
 இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....

அப்பொழுது  'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'

ஓர் உயர்ந்த மண்ணை
 இப்படி நரகமாக்கிவிட்டு,

ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.

அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.

ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.

கார்ப்பரேட் அறிவாளியல்ல... 

நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.

'மனிதன் சிந்திக்காதவரை'  "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."

இப்படிக்கு..

பலன் தரும் மரங்கள்..!
🌴🌾🌳🌲🦧🍍🥬🌤️💐

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...