Thursday, 26 January 2023

திமுக

*திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்...*

*சரி நாம ஞாபகப்படுத்துவோமே…*

1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது. அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை!

2.1956'ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா.? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே!

3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத் மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே!

4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா.? நாவலர் தானே முதல்வரானார்!
.
5. *எம்ஜிஆர்* உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?

6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய *எம்ஜிஆரை* கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக.? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு! 

7. திமுக தொடங்கப்பட்ட போது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகதான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகதானே, இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக்கொண்டார்?

8. ஊழலுக்காக ஒரு ஆட்சி DMK GROUP கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சிதான் 1976 அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து, வழக்குகளை தவிடுபொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே?

10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று *எம்ஜிஆர் முதல்வராக* இருந்தார். அவர் இறக்கும் வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே! 

11. *புரட்சித்தலைவர் எம்ஜிஆர்* மறைவிற்குப்பின் 1989'ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது!

12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என பழி சுமத்தி 1993'ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி?

13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?

14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?

15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, கலாநிதி, மருமகன் சபரீசன் தானே!
இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே?

16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?

17. கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன் பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும் தான் தெரியும் போல..

இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே.!
*ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது 
உண்மைதானே

இப்பதிவை அதிகம் பகிரவும் *தமிழர்களே ஒவ்வொரு பகிர்வும் உங்கள் தலைமுறைகளை காக்கும்.!*

Monday, 23 January 2023

கிராம சபை

ஜனவரி 26 குடியரசு தினம்  அன்று  கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய அவசியமான 31 வகையான கிராம ஊராட்சி பதிவேடுகள். 
 
 #கிராமஊராட்சிபதிவேடு எண்.1 
வீட்டு வரி கேட்பு தொகைக்கான அறிவிப்பு:  
வீட்டு உரிமையாளர்களின் பெயர்  விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின்  விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்பப்பட வேண்டிய அறிவிப்பாகும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.2
வீட்டு வரி ரசீதுகள்:   வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.3  
வீட்டு வரி (நிலுவைத்தொகை நடப்பு வரித்தொகை) கேட்புத்தொகைப் பதிவேடு:    
இப்பதிவேடு 5 ஆண்டுகளுக்கு நடை முறையிலிருக்கும். புதியதாக வீட்டுவரி  செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம். நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் நீக்கம் செய்யலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு  வரி வீதம் மற்றும் அடிப்படை வகைப்பாடு (மூலதன மதிப்பு அல்லது பரப்பளவு மதிப்பு ஆண்டு வாடகை மதிப்பு) அதற்கான நிர்ணயம் செய்யப்பட்ட  தீர்மானத்தை  இணைக்க வேண்டும். மேலும் வரி விகிதம் நிர்ணய  தீர்மானத்தையும் இணைக்க  வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.4
தொழில் வரி பற்றுச்சீட்டு:  
தொழில் வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும்  இரசீதாகும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.5
தொழில் வரி (நிலுவைத்தொகை, நடப்பு கேட்புத்தொகை) கேட்புத்தொகை பதிவேடு: 
தொழில் வரி செலுத்த வேண்டியவரின் பெயர் மற்றும் விவரங்கள்  பதியப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.6 
பல்வகை பற்றுச்சீட்டு:  
பல வகையான கட்டணங்கள் ஊராட்சியில்  பெறப்படுவதற்கு  அத்தாட்சியாக அளிக்கப்படும் இரசீதாகும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.7
வரிகள் மற்றும் பல்வகை இனங்களில் வசூல் பதிவேடு:  
வீட்டு வரி தொழில் வரி  மற்றும் விளம்பர வரி இதர ஊராட்சி நிர்ணயிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை  வசூல் செய்ய வேண்டிய பதிவேடாகும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.8
மானியங்கள், ஒதுக்கப்பட்ட இனங்களில் வசூல் பதிவேடு:  
மாநில நிதி மான்யம்  மற்றும் ஒதுக்கீட்டு வரவினங்கள் ஆகியவற்றை குறிக்கும் பதிவேடாகும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.9 
கிராம ஊராட்சி நிதி சிட்டா:  
இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்படும்  வரவினங்கள் பதியப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.10 
பல்வகை வரவு, வசூல் நிலுவைப் பதிவேடு:
அனைத்து வரியினங்கள் மற்றும்  குத்தகைக் கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவற்றின் கேட்பு விவரம்,  வசூல் செய்த விபரம் மற்றும் நிலுவைகள் பதியப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண் .11
ரொக்கப் புத்தகம்  (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு):  
ஒவ்வொரு நிதிக்கணக்கிற்கும் தனித்தனியே ரொக்கப் புத்தகம் பதிவு செய்யப்பட வேண்டும்.  இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்பட்ட வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதியப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.12
திருப்பி வசூலிக்கத்தக்க முன்பணங்கள் பதிவேடு:  
கிராம ஊராட்சி ஏதேனும் ஒரு  செலவிற்காக முன் பணம் அளித்தால் இப்பதிவேட்டில் பதியப்பட்ட பின்னரே  முன்பணம் வழங்கப்பட வேண்டும். பின்னர்  வசூலிப்பதை கண்காணிக்கப்படல்  வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.13
வகைப்பாடு செய்யப்பட்ட தொகை செலுத்தங்கள் பதிவேடு  அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு.
பட்டியல் அனுமதிக்கப்பட்ட பின்னர்   ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வழங்கப்படும் அனைத்து  இனங்களும் இப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.14
பற்றொப்பப் பதிவேடு:  கொடுக்கப்படும் பணத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டிய  பதிவேடாகும்

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.15
மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): 
ஊராட்சி நிதி மூலம் எடுக்கப்படும் பணிகளுக்கு மதிப்பீடு மற்றும் வரவு செலவு  அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை ஆகியவை பதிவு செய்யப்பட  வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.16
கிராம ஊராட்சியின் சொத்துக்கள் பற்றிய பேரேடு:  
ஊராட்சி நிதி மூலம்  ஏற்படுத்தப்படும் அனைத்து சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஊராட்சிகளின்  சொத்துக்கள் இனவாரியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.17
பராமரிப்பு பதிவேடு: 
ஊராட்சி சொத்துக்கள் பராமரிப்பு செலவுகள் ஆகியவை  பதிவு செய்யப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.18
தெரு விளக்குப் பொருள்கள், கைப்பம்புகளின் உதிரி பாகங்கள், பொதுச்  சுகாதாரம் தொடர்பான பொருள்கள் மற்றும் ஏனைய பயனீட்டுப் பொருட்கள்  இருப்புப்பதிவேடு:
ஊராட்சியினால் வாங்கப்படும் அனைத்து பொருட்களின்  விவரங்கள் இருப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.19
செலவுச்சீட்டு:
இரசீது புத்தகங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.20
 தொகை மதிப்பு படிவங்கள் குறித்து இருப்புப் பதிவேடு,
அளவுச் சுவடிகள்,  ஒப்பந்தப் படிவங்கள் முதலியவை: பண மதிப்புப் படிவங்கள், அளவு புத்தகங்கள்,  ஒப்பந்தப் படிவங்கள் மற்றும் இதர படிவங்கள் ஆகியவற்றின் இருப்புக்கள் பதிவு  செய்யப்பட வேண்டும். பண மதிப்பு படிவங்கள்: வீட்டு வரி இரசீது புத்தகம்,  தொழில் வரி இரசீது புத்தகம், விளம்பர வரி இரசீது புத்தகம், இதர பல்வகை  இரசீது புத்தகங்கள், எழுது பொருட்கள் இருப்பு பாதுகாப்பு வைப்புகள்.

#கிராமஊராட்சிபதிவேடு எண்.21 
விற்பனையாகாச் சரக்குப்பதிவேடு (முடங்கு பொருள் பதிவேடு):
பழுதடையக்  கூடிய மற்றும் உபயோகமற்ற பொருட்களின் இருப்புகள் பதிவு செய்யப்பட  வேண்டும்.

#கிராமஊராட்சிபதிவேடு எண்.22  
சிமெண்ட், உருக்கு நிலக்கீல், கதவுகள், சன்னல்கள் மற்றும் கட்டுமானப்  பணிகளுக்குப் பயன்படும் ஏனைய பொருட்கள் குறித்த இருப்பு பதிவேடு:
ஊராட்சியின் மூலம் பெறப்பட்ட சிமெண்ட், இரும்புக் கதவுகள், சன்னல்கள், தார்  மற்றும் இதர பொருட்களின் இருப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

#கிராமஊராட்சிபதிவேடு எண்.23
ரொக்கப்புத்தகம்(அளிக்கப்பட்ட மானியக் கணக்கு வகை  செய்யப்பட்டுள்ளது): 
மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்காக வழங்கப்படும் அனைத்து  வரவினங்களும் இப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.24
வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலுத்தங்கள் பற்றிய  பதிவேடு (அளிக்கப்பட்ட மானியக் கணக்கு):
பன்னிரெண்டாவது நிதிக்குழு  மான்யத்தொகை, இறுதிச் சடங்குத்தொகை ஆகியவற்றின் வரவினங்கள்  மற்றும் செலவினங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.25 
மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய பதிவேடு
 (அளிக்கப்பட்ட மானிய  கணக்கு): ஒதுக்கீட்டு மானிய கணக்கில் மேற்கொள்ளப்படுகின்ற மூலதன  மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரம் பதியப்படும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.26 
ரொக்கப் பதிவேடு புத்தகம் (திட்ட நிதிக் கணக்கு):
கிராம ஊராட்சி திட்ட நிதி  கணக்கிற்கு வரவு (ம) பணிகள் செய்த செலவு குறித்த விபரம் பதியப்படும்.

 #கிராமஊராட்சிபதிவேடு எண்.27
வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலவுகள் பதிவேடு (திட்ட நிதிக்கணக்கு) :
இந்திரா குடியிருப்புத் திட்டம், மத்திய ஊரக துப்புரவு  திட்டம் ஆகியவற்றின் கீழ் பெறப்படும் வரவுகள் மற்றும் தொகை வழங்கல் விபரம்  இதில் பதியப்படும்.

#கிராமஊராட்சிபதிவேடு எண்.28 
திட்டப்பணிகள் பதிவேடு:
கிராம ஊராட்சியின் பயனுக்காக அனைத்து திட்டப்  பணிகளின் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் பற்றிய விவரம் இதில் பதியப்படும்.
 
#கிராமஊராட்சிபதிவேடு எண்.29 
திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் விபரம் அடங்கிய பதிவேடு :
#கிராமஊராட்சிபதிவேடு  எண். 29(அ) : திட்டப் பயனாளிகள், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்
#கிராமஊராட்சிபதிவேடு எண். 29(ஆ) : இந்திரா வீட்டு வசதித்திட்டம் (தொகுப்பு வீடுகள்): இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் விபரம், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்

#கிராமஊராட்சிபதிவேடு எண். 29(இ) : மத்திய ஊரக சுகாதாரத் திட்டம் பதிவேடு (ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய கழிப்பிடங்கள்): 
தனிநபர் கழிப்பறைகள் கட்டிய நபர்கள் விபரம் மற்றும் பயன்பெற்ற மான்ய விபரம் ஆகியன பதியப்படும்

#கிராமஊராட்சிபதிவேடு எண்.  29(ஈ) : ஏனையவை: மேற்கண்ட திட்டங்கள் தவிர மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்கள், பயன் பெற்ற  மான்ய விபரம் குறித்துப் பதியப்படும்

#கிராமஊராட்சிபதிவேடு எண்.30 
கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஆய்வாளருக்கு அனுப்பப்பட  வேண்டிய மூன்று வகைக் கணக்குகளுக்கான வகைப்படுத்தப்பட்ட  வரவுகள்–செலவுகள் குறித்த மாதாந்திர விபரம்.

#கிராமஊராட்சிபதிவேடு எண்.31  
கிராம ஊராட்சிகளின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான மாதிரிப்படிவம். சென்ற ஆண்டின் வரவு – செலவு விபரமும், எதிர்வரும் ஆண்டிற்கு உத்தேசமாக மேற்கொள்ளவுள்ள வரவு – செலவு விபரமும் இதில் குறிப்பிடப்படும்.

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...