Tuesday, 23 June 2020

1962 - குமோன் ரெஜிமென்ட் - ஷைதான் சிங்




இப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ள 1962 இல் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவத்திற்கு தோல்வி கிடைத்தது. சீன ராணுவம் வெற்றி பெற்றது. அதில் எனக்கு எவ்விதமான குழப்பமோ மழுப்பலோ இல்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை

1962 போரில் லடாக்கில் உள்ள ரேசங் லா என்னுமிடத்தை குமாஒன் ரெஜிமென்ட்டை சேர்ந்த (சார்லி கம்பெனி படைப்பிரிவு) வீரர்கள் 120 பேர் Major Shaitan Singh Bhati, தலைமையில் காவல் காத்திருந்தனர். (அவரையும் சேர்த்து இந்திய தரப்பில் மொத்தமே 121 பேர்)(M)
........
சீனப்படை பெரிய அளவிலான ஆயுதங்கள் (7.62 mm self-loading rifles; MMG’s and LMG’s; 120 mm, 81 mm and 60 mm mortars; 132 mm rockets; and 75 mm and 57 mm recoil less guns to bust bunkers, tanks, and cannons loaded on jeeps) கொண்டு இந்திய நிலையை தாக்கி ரேசங் லாவை கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருந்தனர்(u).
..........
5000 சீன வீரர்கள் ஆர்ட்டில்லரி மற்றும் பெரிய மெசின் துப்பாக்கிகளுடன் அலை அலையாய் அந்த போஸ்டைதாக்க தொடங்கினர்.(r)
...
மேஜர் சைதன் சிங் இராணுவத்திடம் மேலதிக படைகளை அனுப்ப கோரினார் மேலும் துப்பாக்கிக்கு தோட்டாக்கள் வழங்க கோரினார்.அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை பின்வாங்க சொல்லியது இராணுவ தலைமையகம் . ஏனென்றால் இது நமது படை வெல்ல வாய்ப்பில்லாத போராக ராணுவ தலைமையகத்தால் கணிக்கப்பட்டிருந்தது .(ஆயுத ஸ்டாக்கும் நம்மிடையே இல்லை)(a)
....
ஆனால் மேஜர் மறுத்தார்.இத்தனை வருடங்கள் எதைப் பாதுகாக்க இங்கு இருந்தோமோ அதைக் காப்பாற்றாமல் இங்கிருந்து வரமாட்டோம்... எங்களுக்கு உணவளித்த ரேசங் லாவை எதிரிகள் கைப்பற்ற விடமாட்டோம் என தலைமையகத்திற்கும் .தனது சக வீரர்களிடமும் கூறினார்.அதற்கு அவர்கள் Rezang la has served us food for years and now it is time for us to protect it, Sher sahab we too would stand firm with you and fight to protect Rezang la” எனப் பதிலளித்தனர்.(l)
........
பெரும் அலையாய் திரண்டு வந்த சீ்னர்களை எதிர்க்க தயாரானது நமது சிறு படை.. Major Shaitan Singh Bhati, தனது வீரர்களிடம் யாரும் சீனர்களை தொலைவில் வரும் போது தாக்க வேண்டாம்.அவர்கள் பக்கத்தில் வரும் போது தாக்குங்கள் அப்போது தான் தோட்டாக்கள் வீணாகாமல் சீனர்களை தாக்க முடியும் என்றார்.(i)
........
நம் வீரர்களிடம் ஆர்ட்டில்லரி உதவி இல்லை....அவ்வளவு ஏன் ? சொல்லிக்கொள்ளும் படி ஒரு மெசின் துப்பாக்கி கூட இல்லை....சில துப்பாக்கிகள் மற்றும் சிறிய வகை மெசின் கன் உதவியுடன் சீனப் படையை எதிர்க்க தொடங்கினர்.(d)
.........
முதல் அலை சீன வீரர்களை நம்மவர்கள் எதிர்த்து நின்று போராடினர்... சீனாவிற்கு இழப்பு. சீனர்கள் குழம்பினார்கள்... தங்களது கணிப்பு தவறாகிப்போனது எனவும்,கிட்டத்தட்ட 5000 இந்திய வீரர்கள் இருப்பது போல தெரிகிறது என தலைமையிடத்தில் புலம்பினார்கள்....மீண்டும் மேலதிகப் படை மற்றும் ஆயுதங்களுடன் தாக்கினர்.(h)
.........
இரண்டாவது அலையாக அடுத்த குழு தாக்க தொடங்கியது.இப்போதும் அவர்களுக்கு இழப்பு (a)
.........
மூன்றாவது குழு இந்திய போஸ்டை தாக்க தொடங்கிய போது இந்திய வீரர்களிடம் இருந்த தோட்டாக்கள் ammunitation சுத்தமாக தீர்ந்து போய் இருந்தது .(r). ..
........
வேறு வழியில்லாமல் பின்னர் வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்க தொடங்கினர்... ஹரியாணாவைச்  சேர்ந்த ராம் சிங் மற்றும் குலாப் சிங் ஆகிய இரு வீரர்களிடம் தோட்டாக்கள் முடிவடைந்திருந்தது.கையில் இருந்த கத்தியை எடுத்து சீனர்களை வெறும் கைகளால் தாக்க தொடங்கினர்.சீனர்களின் தொண்டைகள் கிழிக்கப்பட்டன.(b)
.....
நமது சிறு படையினர் இந்த ரேசங் லா போரில் கிட்டத்தட்ட 1300 சீன வீரர்களை கொன்று குவித்தனர்.
......
நம் 120 வீரர்களில் 114 வீரர்கள் யுத்தத்தில் வீரமரணம் அடைந்தனர்... ஐந்து பேர் காயங்களுடன் (துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்த்திருந்த காரணத்தால்) சீனர்களால் POW போர்க் கைதிகளாக பிடிபட்டனர்..(a)
...
(சில நாட்களிலேயே சீனர்களின் சிறையிலிருந்து இந்த வீரர்களும் துணிச்சலாக தப்பித்து இந்தியாவிற்கு ஓடி வந்தது ஒரு தனி சாகச வரலாறு).
...
ஒரே ஒரு காயமடைந்த வீரரை மட்டும் நடந்ததை போய் ராணுவத் தலைமையிடம் சொல்லு என்று முக்கால் வாசி யுத்தம் முடிந்த இறுதிக்கட்டத்தில் Major Shaitan Singh Bhati திருப்பி அனுப்பியிருந்தார்.(b)
.........
போரில் தலைமை தாங்கிய வீரர் Major Shaitan Singh Bhati அவர்களின் உடல் தோட்டாக்கள் துளைத்து உயிரற்று கிடந்தது.அவர் சீன வீரர் ஒருவரின் இயந்திரத் துப்பாக்கியை பறித்து சீனர்களை நோக்கி சுட்டுகொண்டிருந்தார். அவர் உடலிலிருந்து உயிர் பிரிந்த நிலையிலும் துப்பாக்கி ட்ரிகரை அழுத்திய படியே பிணமாக கிடந்தார்..(u).
......
அந்த 121 வீரர்களால் தான் இன்றளவும் லடாக் இந்தியாவில் உள்ளது....
....
நம்மிடம் போதிய ஆயுதம் இல்லை நாம் வீழ்வோம்,நாம் கொல்லப்படுவோம் என்ற எந்த பயமும் இன்றி மோதிப்பார்ப்போம் என நெஞ்சை நிமிர்த்தி நின்றார்களே அவர்கள் தான் இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள்.
...........
இதையல்லவா நாம் பள்ளிகளில் பாடப் புத்தகத்தில் கற்றிருக்க வேண்டும்.? போரில் வென்ற வெளிநாட்டவர்கள் பற்றி படிக்கிறோமே தவிர நாட்டுக்காக உயிரை துறந்த நமது வீரர்களின் வீரங்கள் பற்றி நமது குழந்தைகளு்க்கு சொல்லிக் கொடுப்பதில்லை.. 
...
ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய பெயர் மேஜர் சைதன் சிங்கின் பெயராகும். ஆனால் அநேக தமிழ் பேசும் இந்தியர்களுக்கு இவர் பெயர் தெரியவில்லை என்பது தான் (எனக்கு) வருத்தமான விஷயம் 
.........
இன்று நம் நாட்டில் பல பேர் கூறுவது என்ன??
...........
சீனர்கள் நிறைய ஆயுதம் வைத்துள்ளனர்.நாம் போரிட்டால் நமக்கு இழப்பு தான் என எதிர்மறையாக பேசுகின்றர்.அன்றும் இதே கதை தானே . .அந்த வீரர்கள் பின்வாங்கியிருந்தால் இன்று லடாக் சீனர்கள் வசம் தானே..??
...
அவன் மிக அதிகமாக ஆயுதம் வைத்திருக்கிறான் என தெரிந்தும் வெறும் கைகளால் போரிட்டு நம்மை நாட்டை காப்பாற்றியிருக்கிறார்கள் தானே ???.
.......
இப்பதிவின் மூலம் நான் சொல்லிக்கொள்ள விழைவது "இது ஒன்றும் 1962 இல் இருந்த இந்தியா அல்ல" அதைவிட பன்மடங்கு வலிமை வாய்ந்த இந்தியா  . 
........
பின்குறிப்பு 1: போரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக கம்பெனி கமாண்டர் Major Shaitan Singh Bhati அவர்களுக்கு பரம் வீர் சக்ரா posthumous ஆக வழங்கப்பட்டது.
......
பின்குறிப்பு 2: ஃபேஸ் புக்கில் தமிழ் சினிமா நடிகன்ஸ் அண்ட் நடிகைஸ்களை பற்றியே துதி பாடும் சினிமா பைத்தியம் பிடித்த என் இனிய தமிழ் மாக்களுக்கு உண்மையான வீரம் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை தான்.
.....
பின்குறிப்பு 3 என் அருமை தமிழ் மக்களே..LEARN TO RESPECT REAL HEROES INSTEAD OF ADORING AND GLORIFYING REEL HEROES. நாடு உருப்படும்.

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...