*கொராண்ணா வை கண்டு அஞ்சி நடுங்கும் அனைவருக்கும் வணக்கம்,*
இந்த தொற்றை தடுக்க என்ன வழி?
இதற்கு அறிவியல் என்ன சொல்கிறது? சாஸ்திரம் என்ன சொல்கிறது?
*அறிவியல் சொல்லும் ஒரு விசயத்தை பார்ப்போம்.*
கடந்த 20 ஆண்டுகளில், வைட்டமின் D எனப்படும் சத்தினை பற்றி 33,000 ஆராய்ச்சி கட்டுரைகள் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
நவீன உலகின் 8 வது முக்கிய கண்டுபிடிப்பாக வைட்டமின் D போற்றப்படுகிறது.
அப்படி என்னதான் வைட்டமின் D செய்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன?
கீழே படியுங்கள்.
நம் உடலில் எலும்பு ஊக்கமாக வளருவதற்கு வைட்டமின் D முக்கியமானதாக கருதப்பட்டது.
தற்போது வைட்டமின் D யானது, நுரையீரல் சம்பந்தப்பட்ட காய்ச்சல், சளி தொற்றை தடுக்கும், சர்க்கரை வியாதியை குணப்படுத்தும், மனஅழுத்தத்தை குறைக்கும், உடல் பருமனை குறைக்கும், உண்ணும் உணவில் உள்ள சுண்ணாம்பு, மணிச்சத்தை உறிஞ்ச உதவும் காரணியாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மூளை வளர்ச்சிக்கு தேவையாகவும், சதை இயக்கத்திற்கும், இருதயத்தின் சீரான இயக்கத்திற்கும் முக்கிய காரணிகளாக இருக்கிறது.
*இது எதன் மூலம் நமக்கு கிடைக்கிறது?*
பொதுவாக வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்றே கூறுவர். காரணம், பொதுவாக நாம் தோலின் மீது சூரிய ஒளி படும் போது, சூரிய ஒளியில் உள்ள புறஊதா கதிர் B யானது, நம் உடலில் வைட்டமின் D குரிய காரணியை உற்பத்தி செய்து கல்லீரல் மற்றும் நம் உடல் கொழுப்புகளில் சேமிக்கிறது. இந்த சேமிக்கப்பட்ட Vit-D காரணி கிட்னி மூலமாக உடல் இயக்கத்திற்கு தேவையான vit-D யாக மாற்றி அனுப்பி உடலுக்கு தேவையான அன்றாட தேவையை பூர்த்தி செய்யும்.
சூரிய ஒளி அல்லாது மீன், முட்டை, காளான், செறிவூட்டப்பட்ட பால் ஆகிவற்றில் மட்டும் வைட்டமின் D இயற்கையாக சொற்ப அளவில் கிடைக்கிறது. எனவே, சூரிய ஒளி மட்டுமே எளிதான வைட்டமின் D குரிய பேராதாரமாக விளங்குகிறது.
அடிமை இந்தியா, அந்நியர்களிடம் இருந்து விடுபட்ட பிறகும், அந்நிய கலாச்சாரமான மேல் சட்டை, பனியன் போன்றவை அணிய ஆரம்பித்த பிறகு, அன்னிய மோகிகள் இங்குள்ள கோமணம் கட்டும் மக்களை பிற்போக்குவாதிகளாக கருதி செயல்பட்டனர். பெரியோர்கள் மேல் துண்டு மட்டும் அணிந்து வயலில் வேலை செய்த காலத்தின் யாருக்கும் வைட்டமின் D பற்றாக்குறை வரவில்லை. தற்போது அந்நிய மோகத்தால் ஏற்பட்ட மேதாவித்தன எண்ணம் மற்றும் ஆட்டுமந்தை செயல்பட்டால் இன்று சூரிய ஒளி இலவசமாக கிடைக்கும் நாட்டின் மக்கள் 70% பேர் வைட்டமின் D பற்றாக்குறையால் நிலைகுலைந்துவிட்ட அவல நிலையை சமீபத்திய உலக அளவிலான ஆய்வுகள் விளக்குகின்றன.
ஆரோக்கியம் வேண்டுமெனில், நம் உடலில், ரத்த வைட்டமின் D 30 யூனிட் இருக்க வேண்டும். இது பெரும்பான்மை யாருக்கும் 20 க்கும் குறைவாக இருப்பதால், நம் உடல் ஆரோக்கியம் முற்றிலும் கேட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.
மேலும், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐரோப்பியர்க்ள் ஆதிகாலம் முதல் வெயில் உள்ள காலங்களில் லீவ் போட்டு விட்டு சன் பாத் என்று சூரிய குளியல் என்ற பேரில் கடற்கரைகளில் படுத்து வைட்டமின் D உற்பத்தி செய்கிறார்கள்.
புளூ காய்ச்சளுக்கு விட்டமின் D சிறந்த தொற்று தடுப்பு காரணியாக கண்டறியப்பட்டு குளிர் காலங்களில், மேலை நாடுகளில் வைட்டமின் D மாத்திரைகள் கொடுக்கப்பட்டு தொற்று தடுக்கப்பட்டு ஆரோக்கியம் நிலை நிறுத்தப்படுகிறது.
*பாரம்பரிய முறையில் நம்மூரில் உள்ள விட்டமின் D உற்பத்தி*
நம் பாரம்பரியத்தில், பொதுவாக வேலைக்கு சென்றாலும், ரோட்டில் நடந்தாலும், மேல் சட்டையோ, பெண்கள் ஜாக்கட்டோ அணிந்ததில்லை. ஆண்கள் மேல் துண்டும், பெண்கள் மாரப்பும் அணிவர். இதனால் அவர்தம் உடல் ஓது நாளில் பலமணி நேரம் வெயிலில் படும் அதனால் வைட்டமின் D பற்றாக்குறை இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
அதோடு, குழந்தைகளை மூணு வயசு வரை தினமும் விளக்கு எண்ணெய் தேய்த்து கை கால்களை உருவி, மேலுக்கும் தேய்த்து சிறிது நேரம் 9 மணி வெயிலில் கிடத்துவர்.
மேலும், பெரியோர்களும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து 1 மணிநேரம் 7 -8 மணி வெயிலில் அமறுவர். இதன் மூலம் வைட்டமின் D கிடைத்துள்ளது. ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், அடிமை மோகத்தில் திளைக்கும் நாம் இவற்றை இன்று மறந்து விட்டு ஆரோக்கிய குறைவுடன் கொரோண போன்ற பெருந்தொற்றில் சிக்கி சின்னபின்ன பட்டு பயத்துடன் வாழ்கிறோம்.
*இன்று வைட்டமின் D பற்றிய அறிவு/விழிப்புணர்வு*
முன்னம் சொன்னது போல மேலை நாடுகளில் 33,000 ஆராய்ச்சி கட்டுரைகளை தாங்கி, உலகின் 8 வது பற்றிய கண்டுபிடிப்பாக விளங்கும் விட்டமின் D பற்றி உணர்ந்த அரசுகள் வைட்டமின் D பற்றி மக்களுக்கு விழிப்புணர்வும் விட்டமின் D மாத்திரைகளும் கொடுத்து வருகிறார்கள். அதனால், மக்களும் பெரும்பாலும் கொரோன தடுப்பூசி பாதிப்பில் இருந்து விடுபட்டு வாழ்கிறார்கள்.
பாகிஸ்தான் அரசின் உடல்நலத்துறை VITAMIN D ACADEMY என்னும் அரசு நிறுவனத்தை கொரோன காலகட்டத்தில் ஆரம்பித்து செவிலியர்களுக்கு வைட்டமின் D குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி கொடுக்கிறார்கள். அங்கே, 80 % பற்றாக்குறை கண்டறியப்பட்டுள்ளது.
நம் நாட்டில் சில தனியார் மருத்துவமனையில் vitamin D முக்கியத்துவம் உணரப்பட்டு அவை கொடுக்கப்படுகிறது.
*எனவே, நாம் அனைவரும் வைட்டமின் D யின் முக்கியத்துவம் உணர்ந்து முறைப்படி எண்ணெய் குளியல் எடுங்கள். சட்டை அணியாமல் வெயிலில் சுற்ற பழகுங்கள். வைட்டமின் D டெஸ்ட் எடுங்கள் (கண்டிப்பாக வயல் வேலை செய்யாத நிழல் உறை மனிதர்களுக்கு குறைவாகவே இருக்கும்). மருத்துவ ஆலோசனைப்படி மாத்திரைகள் 2 மாதம் எடுக்கும் பட்சத்தில் கொரோன தொற்றில் இருந்து நாம் காக்கப் படுவோம்.*
*காத்தல் தொழிலை செய்யும் பெருமாள் நாராயணன் எனப்படுகிறார். சூரியனும், நம்மை காப்பதால் சூரியநாராயணன் என நாமும் அழைக்கிறோம். அனைவரும், சூரியனை தழுவி, போற்றி வைட்டமின் D பெறுவோம்.*
நன்றி.🙏
No comments:
Post a Comment