பாரதமெங்கும் இருந்த குடிமுறை எனும் தொழில் பிரிவு அமைப்புகள் இருந்ததா? மகாராஷ்டிராவிலே இருந்த ஜஜ்மனி அல்லது யஜமான் முறையும் தமிழகத்திலே இருந்த குடிமுறை அமைப்பும்.
பாரதமெங்கும் உள்ளூர் நிர்வாக முறைகள் எப்படி இருந்தன அடிக்கடி தேடி படித்துக்கொண்டிருப்பேன். அதிலே நேற்று ஒரு விஷயம் பார்த்தேன். அது ஜஜ்மனி அல்லது யஜமான் முறை எனும் மகாராஷ்டிராவிலே இருந்ததாகவும் அதை சட்டம் போட்டு ஒழித்தார்கள் எனவும்.
அது என்ன என பார்த்தவுடனே விளங்கியது தமிழகத்திலே குடிமுறை என சொல்லப்பட்டும் அமைப்பு முறை தான். தமிழகமெங்கும் இருந்தது. கொங்கு பகுதியிலே இருந்ததை பற்றி முதற்கண் பார்வையிலே எழுதமுடியும் ஆனால் மற்ற இடங்களிலேயும் இருந்தது பற்றி சினிமாவில் கூட வந்திருக்கிறது.
பாரதி கண்ணம்மா படத்திலே முதல் காட்சியிலே வண்டியிலே நெல்லு மூட்டைய தூக்கிட்டு வந்து வீட்டுக்கு வீடு போட்டுட்டு அம்பலவாணர் வீட்டுகூலின்னு சொல்லுவாங்களே அந்த முறை தான் குடிமுறை.
படங்களிலே காண்பித்தாலும் சமத்துவம் சம்முவநீதி பொங்கி வழியும் வழிஞ்ச இந்த "அந்த அவுரு" மண்ணிலே இதெல்லாம் பேசப்படல. ஆராயப்படல.
குடிமுறை என்பது அடிப்படையிலே சாதிகள் அவர்களுக்கு உண்டான வேலையை அல்லது பொருட்களை தயாரித்து வருடம் முழுக்க ஊரிலே இருக்கும் குடும்பங்களுக்கு கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வருடகூலியாக நெல், பருப்பு முதலியவற்றை பெற்றுக்கொள்வது.
மகாராஷ்டிராவிலே இந்த முறையிலே இருப்பவர்களுக்கு பாலுடேட் ஆலுடேட் என இரண்டு விதமாக பெயர்கள் உண்டு. இதிலே 12 அதிலே 12 என கிட்டத்தட்ட 24 சாதிகள் இதிலே இருந்தன. இந்த சாதிகள் விவசாய சாதிகளுக்கு வேலை செய்துவிட்டு கூலியா வருடம் வருடம் நெல்லோ, கோதுமையோ, சோளம் மூட்டை கணக்கிலேயும் மற்றவைகள் தேவைக்கு ஏற்பவும் பெற்றுக்கொள்வார்கள்.
கோவில் திருவிழாக்களிலே இவர்களுக்கு முக்கிய இடமுண்டு. அதற்கு பணமும் உடைகளும் தரப்படும். திருமணங்களிலேயும் இவர்களுக்கு முக்கிய இடமுண்டு.
எடுத்துக்காட்டாக கொங்கு பகுதியிலே சக்கரைகத்தி என அழைக்கப்படும் நாவிதர்கள். இவர்கள் தான் திருமணத்திற்கு அழைப்பது, சடங்குகளை செய்வித்து தருவது என இருப்பார்கள். மகாராஷ்டிராவிலேயும் இது தான். கொங்கு பகுதியிலேயும் இது தான்.
இதிலே தோல் தொழில் செய்வோருக்கும் இடமுண்டு. அவர்கள் ஒதுக்கி வைக்கப்படவில்லை. இந்த விஷயத்தையும் கவனிக்கவேண்டும்.
மகாராஷ்டிராவிலே என்ன என்ன சாதிகள் இருந்தன?
Sonar - பொற்கொல்லர்கள்.
Joshi - பஞ்சாங்கம் பார்ப்பவர்கள் , பொதுவாக பிராமணர்க
Gurav - கோவில் பண்டாரம்
Nhawi - சக்கரை கத்தி எனப்படும் நாவிதர்கள்.
Parit - ஏகாலி எனப்படும் துணி துவைப்போர்.
Kumbhar - குலாலர்கள் , மண்பாண்டம் செய்பவர்கள்
Sutar - தச்சுதொழிலாளர்கள்
Lohar - இரும்பு கொல்லர்கள்
Teli - எண்ணைய் ஆட்டுவோர்
Chambhar - தோல் தொழில் செய்வர்கள்
Dhor - தோல் பதனிடுவோர்
Koli - மீனவர்கள், மீன் பிடிப்போர்
Mang/maatang - கயிறு திரிப்போர், மருத்துவம் பார்ப்பவர்கள்
Mahar - கிராம காவலாளிகள், நில அளவையாளர்கள், செத்த மிருகங்களை அப்புறப்படுத்துவோர்.
Chougula - சமையற்கார்கள், பண்டாரத்திற்கு உதவி செய்பவர்கள்.
இந்த சாதிகளை பார்த்தால் கொங்கு பகுதியிலே இருக்கும் அதே பிரிவுகளும் வேலைகளும். இவர்கள் அனைவருக்குமே கொங்கு கோவில்களிலே உரிமைகள் உண்டு, பெரிய கோவில்களிலே தனித்தனி மடங்களும் மண்டபக்கட்டளைகளும் உண்டு.
எப்படி இந்த ஒற்றுமை? ஏன் இந்த ஒரே மாதிரியான முறைகள்?
இந்த அமைப்பை விமர்சிப்பவர்களோ இது கொடூரமான முறை, இதனால் தான் இந்தியாவும் இந்துக்களும் முன்னேறவில்லை, இது தான் அறிவியல் முன்னேற்றத்தையே கெடுத்தது என்ற அளவிலே "ஆய்"ராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்கள்.
அடிப்படை கேள்வி இது ஏன் வரவேண்டும்? ஏன் பண்டமாற்று முறையோ அல்லது பணத்தை கொடுத்து வாங்கிக்கொள்வதோ ஏன் வரவில்லை?
காசுகள் அச்சடிப்பது 3000 ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்திலே இருந்தது. வரி வசூல் முறைகளும் இன்னபிறவும் இருந்தன. அப்படியானால் ஏன் இந்த முறை?
ஒரே காரணம், அந்நிய படையெடுப்பும் நமக்கான அரசும் இல்லாததே.
அந்நிய படையெடுப்பை எதிர்கொண்ட இந்துக்களாகிய நாம் அந்த கொடூரன்களின் கொடூர முறைக்குள்ளே போகவில்லை. காசும் பணமும் அச்சடிப்பது அவர்கள் தானே? அதை ஏற்றால் அவர்களுக்கே காலாகாலமும் அடிமையாக இருக்கவேண்டுமே?
இன்னோன்று ஊருக்குள்ளேயே எல்லாவற்றையும் வாங்கவேண்டும், அதை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவேண்டும்.
ஒருவர் விலை குறைவாக கொடுக்கிறார் என பக்கத்து கிராமத்திலே இருந்து வாங்கி வருவதோ அல்லது எனக்கு இவ்வளவு விலை அதிகமாக வேண்டும் என விற்காமல் இருப்பதொ இதிலே நடக்காதே?
இதை கம்மூனிசத்திலே கம்யூன் முறையோடு ஒப்பிட்டு பார்த்தால் இது ஏன் என விளங்கும்.
தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் வேண்டும்.
வாங்குவோருக்கு விலை உறுதியும் பொருட்கள் கிடைப்பதும் வேண்டும்.
இரண்டையும் சமமாக கொண்டுவரவேண்டுமானால் அந்த கம்யூன்களே அந்த கிராமமே விலை நிர்ணையித்து அதை பண்டமாற்று முறையிலே செய்தால் தான் உண்டு. அது தான் இந்த முறை வரவே காரணம்.
கொங்கு பகுதிலே இப்படி கூலி கொடுக்காதவர்களின் வீட்டு விழாக்களுக்கும் இறப்பு போன்றவைகளுக்கு வரமாட்டோம் என நிறுத்தி பின்னர் பஞ்சாயத்து பேசி தராத வருட நெல்லை முழுவதுமாக கொடுத்தப்பின்னரே நிகழ்ச்சிகள் நடந்த எடுத்துக்காட்டுகளும் உண்டு.
கம்யூனிசத்திலே புதிய பொருளாதார அறிஞ்சர்களும் கூட இப்போது எந்தந்த பகுதிகளிலே இயற்கை வளங்கள் இருக்கிறதோ அந்த பகுதி மக்களே அதை பாதுகாத்து பிரித்து வழங்கும் பொறுப்பை ஏற்கவேண்டும் என சொல்லிக்கொண்டுள்ளார்கள்.
இதை ஒரு 200 வருடம் செய்தால் என்னாகும்? சாதியாக சாதி முறையாக உருமாறி நிற்கும். அது தான் நமது பாரதத்திலே நடந்தது?
இந்த முறையை உடைக்கும்போது அதையும் முறைப்படி செய்திருக்கவேண்டும்.
இந்த சாதிமக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்த பாரம்பரிய முறைப்படியான அறிவு ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கவேண்டும்.
குழந்தைபிறப்புக்கு கோடாரியை கொண்டு பிளந்த கதையாக இந்த முறைகள் அனைத்துமே மோசம், அதிலே வந்த அறிவுகள் அனைத்துமே மோசம் என போட்டு உடைத்ததன் விளைவு
நம்மால் இப்போது அந்த பக்கமும் போகமுடியவில்லை இந்த பக்கமும் போகமுடியவில்லை.
முழுதாக மேற்கத்திய முறைப்படி பணமே பிரதானம் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கீறது. யார் விலை குறைவாக தயாரிக்கிறார்களோ அவர்கள் விற்று பணம் பார்த்து அடுத்தவர்களின் வேலையை பறிக்கலாம் என போயிருக்கவேண்டும்.
அல்லது
விலை கட்டுப்பாடுகள், யார் யார் என்னவேலை செய்யலாம் அதற்கு கடவுச்சீட்டுகள் என நம்முடைய பாரம்பரிய முறையை ஒழுங்குபடுத்தி பசியின்றி பட்டினியின்றி வேலை உத்திரவாதம் தந்திருக்கவேண்டும்.
இரண்டும் கெட்டானாக
அரசே வேலை கொடுக்கவேண்டும் என கூவுதலும்
சந்தைக்கு விற்க அனுமதி கொடு என ஆடுதலுமே
இங்கே நடக்கிறது. விளைவு பசியும் பட்டினியும் இன்றும் இருக்கின்றன.
அரசு அரச நிர்வாகம் என்பது பலவழிகளிலே நடக்கலாம். சாதி என்பது அதிலே ஒருமுறை அவ்வளவே. அதற்கு மாற்று இன்னோர் அரச ஆட்சி முறை தான்.
இதை புரிந்துகொள்ளாமல் சாதி இந்துமதம் பார்ப்பான் என உருட்டி பலன் இல்லை.
இந்த முறைகள் பாரதமெங்கும் எப்படி இருந்தன? அதிலே இருந்த சாதிகள் என்ன? நில உரிமை முறைகள் என்ன? அளவை முறைகள் என்ன? நிர்வாக யார் யாரிடம் எப்படி இருந்தது என்பதெல்லாம் ஆராயப்படவேண்டும்.
70 வருடங்கள் என்பதால் பலதும் காணாமல் போயிருக்கும் தான். ஆனால் மிச்சமீதி இருப்பதையாவது ஆராயலாம். புரிந்து கொள்ளமுயலலாம்.
https://en.wikipedia.org/wiki/Jajmani_system
https://en.wikipedia.org/wiki/Bara_Balutedar
https://thecustodiansin.wordpress.com/tag/balutedar/
https://shodhganga.inflibnet.ac.in/handle/10603/139912
No comments:
Post a Comment